கடல் அலையில் கரையும் மணல்போல் உங்களது கடனும், கரைந்து போக வேண்டுமா ?? இந்த பரிகாரத்தை மூன்று நாட்கள் செய்தாலே போதும் !!

இன்றைய சூழ்நிலையில் வாங்கிய கடனுக்கு வட்டி கூட, கட்ட முடியாத நிலைதான் நமக்கு உள்ளது. இதற்கெல்லாம் விடிவுகாலம் கிடைக்க வேண்டும் என்றால், அந்த மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீது பட்டால் தான் முடியும். கடந்த சில மாதங்களாகவே நிலவிவரும் தொழில் முடக்கம் காரணமாக, நாம் அதிகப்படியான பாதிப்பை அடைந்து இருக்கின்றோம் என்று தான் சொல்ல வேண்டும். வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை, வெளியில் சென்றாலும், முன்னேற்றம் இல்லாத வாழ்க்கை! பிரச்சனை, பிரச்சனை என்று தான் நம்முடைய வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில், நிறைய பெயர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாமல், திணறிக்கொண்டு இருக்கிறார்கள். வீட்டு வாடகை கொடுக்க வழியில்லை, சாப்பாட்டிற்கே என்ன செய்வது? என்று யோசிக்கும் அளவிற்கு சிலபேருக்கு கஷ்டங்கள் நிலவி வருகிறது. இதில், வட்டி எங்கு கட்டுவது?

அந்த அளவிற்கு நம்முடைய நிலைமை மிகவும் மோசமாகி கொண்டேதான் இருக்கின்றது. சரி, இதற்கு ஆன்மீக ரீதியாக ஏதாவது வழி உள்ளதா, என்று தேடுபவர்களுக்கு, ஒரு நல்ல தீர்வைத் தான் இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை கைமேல் பலன் கொடுக்கும் வழிபாடு என்று சொல்லலாம். மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொண்டு, கடையிலிருந்து புதியதாக இரண்டு வெற்றிலை, இரண்டு கொட்டைப்பாக்கு வாங்கிக் கொள்ள வேண்டும். அதை தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி விட்டு, லேசாக உலர வைத்து விடுங்கள். உங்கள் வீட்டில் பச்சை நிறத் துணி, சிவப்பு நிறத் துணி, அல்லது மஞ்சள் நிற துணி இந்த மூன்று நிறத்தில், எந்த நிறத்தில், புது துணி இருந்தாலும், அதை தண்ணீரில் நனைத்து காயவைத்து தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் அனைத்தும், கரைந்து போக வேண்டும் என்று மகாலட்சுமியிடம் பிரார்த்தனை செய்துகொண்டு, இரண்டு வெற்றிலையை எடுத்து, அதன்மேல் சிறிதளவு கல்லுப்பு வைக்க வேண்டும். அதன் மேல் இரண்டு கொட்டைப்பாக்கு வைக்கவேண்டும். அந்தக் கல்லுக்கு கீழே சிந்தாத அளவிற்கு வெற்றிலையை நான்காக மடித்து கொள்ளுங்கள். இந்த வெற்றிலை பொட்டலத்தை நீங்கள் தயாராக வைத்திருக்கும் துணியின் மேல் வைத்து, சுருட்டி ஒரே ஒரு முடிச்சுப் போட்டு மகாலட்சுமியின் பாதங்களில் வைத்து விடுங்கள். உங்கள் மனதில், உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்ற வேண்டுதல் ஒன்று மட்டும்தான் இருக்க வேண்டும். தேவையில்லாமல் மனதை அலைபாய விடக்கூடாது.


மனதை ஒரு நிலைப்படுத்தி தான் இந்த வேண்டுதலை மகாலட்சுமியிடம் வைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நீங்கள் பரிகாரத்தை செய்த அந்த ஒரு நாள் இரவு மட்டும் மகாலட்சுமியின் பாதத்தில் இந்த முடிச்சு இருக்க வேண்டும். மறுநாள் காலை எழுந்து, குளித்து முடித்துவிட்டு, அந்த முடிச்சை அவிழ்த்து அதில் இருக்கும் உப்பை எடுத்து சுத்தமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் அந்த உப்பை நன்றாக கரையும் அளவிற்கு, உங்கள் கைகளாலேயே கரைத்துவிட்டு விடுங்கள். வெற்றிலை, பாக்கை பசுமாட்டிற்கு கொடுத்துவிடலாம். அல்லது அந்த வெற்றிலை, பாக்கை நீங்களும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. இதேபோல், தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த பரிகாரத்தை, மகாலட்சுமியை நினைத்து செய்துவிட்டு, அந்த உப்பை உங்கள் கைகளாலேயே தண்ணீரில் கரைத்து விடுங்கள். உங்களை பிடித்த தரித்திரம் நீங்கி, உங்களுக்கான பணவரவு அதிகரித்து, கஷ்டம் தண்ணீரில் கரைந்த, உப்பு போல காணாமல் போய்விடும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.