கணவர் வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் மனைவி இவ்வாறு செய்தால் கணவருக்கு கட்டாயம் கடன்சுமை அதிகரிக்கும் !!

நம் வீட்டில் இருக்கும் நம்முடைய கணவர், நம்முடைய குழந்தைகள் இவர்கள் காலையில் அலுவலகத்திற்கோ அல்லது பள்ளிக்கு சென்றவுடன் வீட்டில் இருக்கும் பெண்கள், சில தவறுகளை செய்து வருகிறார்கள். அது என்னென்ன தவறுகள், என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கை முறை பல வருடங்களுக்கு முன்பு இப்படி கிடையாது. இன்று எல்லா பெண்களின் சராசரி வாழ்க்கை முறையும் தலைகீழாக மாறி இருக்கிறது அதாவது காபி டீயை குடித்துவிட்டு தான் சில பேர் பல் தேய்க்க போகின்றோம். சூரிய அஸ்தமனத்திற்கு பின்புதான் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றோம். இவையெல்லாம் காலப்போக்கில் நாகரீகம் என்று மாறிவிட்டது. ஒட்டு மொத்தமாக எல்லோரையும் குறை கூறவில்லை. சில பேர் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளவே இந்த பதிவு. சரிங்க, பின்வரும் குறிப்புகள் எல்லாம் உங்கள் வீட்டில் பின்பற்றினால் பிரச்சனை இல்லை. நேரமின்மை காரணமாக கூட இந்த தவறுகளை இனி நீங்கள் செய்யாதீர்கள். அது என்னென்ன தவறுகள் பார்த்து விடலாமா?

முதலில் வீட்டில் இருப்பவர்கள் வெளியே கிளம்புவதற்கு முன்பாகவே, வாசல் கூட்டி, தண்ணீர் தெளித்து கோலம் போட்டுவிட வேண்டும். உங்களுடைய கணவரோ, குழந்தையோ சூரிய உதயத்திற்கு முன்பாகவே அதாவது 4.00 அல்லது 5.00 மணிக்கு, ஏதோ ஒரு நாள், வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறார்கள் என்றாலும் கூட, அந்த சமயத்தில் வாசலில் ஒரு சொம்பு தண்ணியை மட்டுமாவது ஊற்றிவிட்டு, சிறிய கோலத்தை போட்டு விடுங்கள். அவர்கள் கிளம்பிச் சென்ற பின்பு வாசல் தெளித்து கட்டாயம் கோலம் போடவே கூடாது. இது சாஸ்திரத்தில் மிகப்பெரிய தவறாக சொல்லப்பட்டுள்ளது. தினசரி உங்கள் வீட்டில் காலை அவசரம் அவசரமாக வேலை நடக்கும். உங்களுக்கு குளிப்பதற்கு கூட நேரமிருக்காது. பல் துலக்கி, முகம் அலம்பி சமையலறைக்குச் சென்று, வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான எல்லா பணிகளையும் செய்து முடித்து விட்டுதான் குளிப்பீர்கள் என்றால் அது தவறு கிடையாது. ஆனால், உங்கள் கணவரோ குழந்தையோ வீட்டிலிருந்து வெளியே கிளம்பிய உடனேயே, உங்களது வீட்டை கூட்டி சுத்தப்படுத்த ஆரம்பிக்க கூடாது. அப்படி உடனடியாக வீட்டை சுத்தப்படுத்தி விட்டு உடனடியாக குளிப்பதற்கு செல்லக்கூடாது. என்ன செய்வது? வீட்டில் இருப்பவர்கள் வெளியே கிளம்புவதற்கு முன்பே, வீட்டை கூட்டவும், துடைக்கவும், குளிக்கவும் நேரம் இல்லையே?

வீட்டில் இருப்பவர்கள், வீட்டை விட்டு கிளம்பிய பின்பு, ஒரு மணி நேரம் கழித்து, இந்த வேலைகளை செய்யுங்கள். இதனால் எந்த ஒரு தவறும் கிடையாது. அவர்களை அப்படி வழி அனுப்பிவிட்டு, இப்படி வந்து வீட்டை கூட்டி துடைத்து கழுவி சுத்தம் செய்யும் பழக்கத்தை இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள். முடிந்தவரை வீட்டில் இருப்பவர்கள், வெளியில் செல்வதற்கு முன்பாகவே குளிப்பது நல்லது. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்ற பின்பு தலைக்கு குளிக்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டின் பூஜை அறையில், தீபம் எரிந்து கொண்டிருந்தால், வீட்டில் உள்ளவர்கள் வெளியே கிளம்புவதற்கு முன்பாகவே அந்த தீபத்தை குளிர வைத்து விடவேண்டும். வீட்டில் இருப்பவர்கள் வெளியே சென்ற உடனே, அந்த தீபத்தை குளிர வைக்கக் கூடாது. அவர்கள் வெளியே சென்றதும், ஒரு 1/2 மணி நேரம் கழித்தாவது தீபத்தை குளிர வைக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். எல்லோருடைய கணவரும் ரொம்ப ரொம்ப நல்லவங்களா இருப்பாங்க அப்படின்னு சொல்ல முடியாது. சில கணவன்மார்களிடம் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றது. அதை அனுசரித்து செல்ல வேண்டியது மனைவியின் கடமை.

அப்படி அனுசரித்துச் சென்றால்தான் குடும்பமும் சந்தோஷமாக இருப்போம். உங்களுடைய வீட்டில், உங்களுடைய கணவரின் மூலம் உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் இருந்தால், அந்த பிரச்சனைகளை, உங்களுக்கு தெரிந்த நண்பர்களிடமுமோ, உங்களது உறவினர்களிடமோ, உங்களுடைய அம்மாவிடமோ, கூட கணவரைப்பற்றி தொலைபேசியிலோ, நேரிலோ சென்று குற்றம் குறையை கூறவே கூடாது. கணவர் இல்லாத சமயத்தில் கணவரைப் பற்றி பேசக்கூடிய, எதிர்மறை பேச்சுகள் கூட அவருக்கு பிரச்சினையாக முடியும். உங்கள் கணவருக்கு குறைகள் இருந்தாலும் கூட, அந்த குறைகளை எல்லாம் நிறையாக பேசுங்கள். இதன் மூலம் உங்களுடைய நேர்மறை பேச்சுக்களே, உங்களது கணவரை நல்லபடியாக மாற்றிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வீட்டில் கஷ்டமான சூழ்நிலை நிலவுகிறது என்றால், அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். கணவருக்குத் தெரியாமல், நீங்கள் செய்யும்தவறுகள் உங்களுடைய எதிர்மறை பேச்சுகள், அனைத்துமே உங்களது கணவரை போய்ச்சேரும். அவரது மன நிம்மதியை குறைக்கும். அவருக்கு தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகி, கணவருக்கு கடன்சுமை அதிகரித்தால், அதனுடைய பாதிப்பு யாருக்கு? நம்முடைய குடும்பத்திற்கு தானே! சில அம்மாக்கள், தங்களுடைய பிள்ளைகளை கூட திட்டிக் கொண்டே இருப்பார்கள். அப்படி செய்யும் பட்சத்தில் கஷ்டங்கள் நம்மை விட்டு பிரியாமல், இருக்கமாக பிடித்துக் கொள்ளத் தான் செய்யும். முடிந்தவரை இந்த தவறுகள் செய்யவதை குறைத்துக் கொள்ளப் பாருங்கள், ஒரு குடும்பம் முன்னேற்றம் அடைவதும், முன்னேற்றம் அடைய முடியாமல் தவிப்பதும், அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் கையில்தான் உள்ளது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.