கண்டிப்பாக நம்பமாட்டீர்கள் !! 11 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் தெளித்தாலே போதும் !!

நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடங்கல்களை தகர்த்தெறிந்து, மாற்றங்கள் எப்போது நிகழும் என்று தான், நாம் காத்துக் கொண்டு இருக்கின்றோம். வாழ்க்கை பாதை முன்னேற்றத்தில் செல்ல வேண்டுமென்றால், அதற்கு முக்கியமாக, தன்னம்பிக்கையும், நம்பிக்கையான வழிபாட்டுமுறைகள் மட்டும்தான் துணை நிற்கும். அந்த வரிசையில், நம் வீட்டில் தீர்த்த வழிபாட்டினை எப்படி செய்தால், நம் வாழ்வில் இருக்கும் இன்னல்கள் நீங்கி, நாமே எதிர்பாராத நல்ல மாற்றங்கள், நமக்கு நடக்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது ஒரு சுலபமான முறையும் கூட. ஆனால், வலுவான வழிபாடு என்று சொல்லலாம். இறைவனை முழுமையாக நம்பி, இந்த வழிபாட்டை செய்யும் பட்சத்தில், கைமேல் பலன் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு துளசி இலை அல்லது வில்வ இலை, கொஞ்சம் பச்சை கற்பூரம், இரண்டு சொட்டு பன்னீர், கொஞ்சமாக சுத்தமான தண்ணீர் இருந்தால் போதும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, உங்கள் வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, ஒரு சிறிய கிண்ணத்தில் நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் வில்வ இலைகள் இரண்டு, அல்லது துளசி இலைகள் இரண்டு, (ஏதாவது ஒரு இலை போட்டால் போதும்), இரண்டு சொட்டு பன்னீர், ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் போட்டு, பூஜை அறையில் வைத்து விடுங்கள். அதன் பின்பாக முதலில் விக்னங்களை போக்கும் விநாயகரை மனதார போற்றி ‘ஓம் விக்ன விநாயகா போற்றி’ என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து விடுங்கள். அதன் பின்பாக பெருமாளை மனதார வேண்டிக்கொண்டு, உங்களுக்கு எந்த மந்திரம் தெரிந்தாலும் அதை 108 முறை உச்சரிக்க வேண்டும்.

‘ஓம் நமசிவாயா’ சொல்லலாம். ‘ஓம் நமோ நாராயணா’ சொல்லலாம். அது உங்களுடைய இஷ்ட தான். நீங்கள் சொல்லக்கூடிய மந்திரங்கள் அனைத்தும் அந்த தீர்த்தத்தை போய் சேர்ந்து விடும். அதன் பின்பு, உங்கள் வீடு முழுவதும் அந்த துளசி இலைகளால், தீர்த்தத்தை தெளிக்க வேண்டும். வில்வ இலையை தீர்த்தத்தில் போட்டிருந்தால், வில்வ இலைகளாலேயே, வீடு முழுவதும் தீர்தம் தெளிக்கப்பட வேண்டும். கட்டாயம் இலையினால் தான் தீர்த்தம் தெளிக்கப்பட வேண்டும். கையால தெளிச்சு விடாதீங்க! இப்படி செய்தால் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்கள் வந்துவிடுமோ? என்ற சந்தேகத்தோடு இந்த வழிபாட்டு முறையை செய்யாமல், கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்துக்கு சமமாக, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் இந்த தீர்த்தத்தை, உங்கள் வீட்டு மூலை முடுக்குகளில் தெளித்து வந்தால், எதிர்மறை ஆற்றல் விலகி நல்ல சிந்தனைகள், பிறந்து, வீடு சுபிட்சம் அடையும் என்பதில் சந்தேகமே இல்லை.

வாழ்க்கையில் எதை தொட்டாலும் தோல்வி, தோல்வியை தொடர்ந்து, பல இன்னல்கள், உடல் உபாதைகள் பிரச்சனையில் இருந்து, மீள்வதற்கு வழியே இல்லை என்பவர்கள், இறைவனின் பாதங்களில் சரணடைந்து வீட்டில் சிறியதாக பூஜை செய்து, இந்தப் புனிதமான தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து கொள்ளுங்கள். உங்கள் தலைகளிலும் தீர்த்தத்தை தாராளமாக தெளித்து கொள்ளலாம். உங்களையே அறியாமல் எதிர்பாராத உற்சாகமும், எதிர்பாராத மன தெளிவும், நல்ல சிந்தனைகளும் மேலோங்கும். தொடர்ந்து 11 நாட்கள் மனநிறைவோடு செய்து பாருங்கள்! கட்டாயம் நம்ப மாட்டீர்கள்! நீங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையாக ஏதாவது ஒரு சம்பவம் நடந்தே தீரும் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.