கருத்துப்போன கவரிங் நகைகளை இனி விணாக்க வேண்டாம் !! பாசி பிடித்த கவரிங் நகைகளை கூட 5 நிமிடத்தில் தங்கம் போல ஜொலிக்க வைக்க முடியும் இப்படி செஞ்சு பாருங்க !!

தங்க நகை அல்லாமல், நாம் பயன்படுத்தும் பித்தளையால் செய்யப்பட்ட வளையல்கள், செம்பினால் செய்யப்பட்ட அணிகலன்கள், கவரிங் செயின்கள், வளையல்கள் இவைகளை நாம் பயன்படுத்திய சில நாட்களிலேயே கருத்து போக ஆரம்பித்துவிடும். சில பேருக்கு சூட்டு உடம்பு என்றால், கவரிங் நகைகள் உடனே கருத்து போகும். இனி காசு கொடுத்து வாங்கிய கவரிங் நகைகளை கருத்து போனாலும், தூக்கிப் போட தேவையில்லை. அதை நம் வீட்டிலேயே புதுசு போல மாற்றி விடலாம். அதுவும் மிக சுலபமான முறையில். எப்படின்னு நீங்க தெரிஞ்சுக்க ஆசைப்படுகிறீர்களா? பார்க்கலாம் வாங்க. ஒரு சிறிய கிண்ணியில் பாதி அளவு எலுமிச்சை பழத்தின் சாரை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களது கருத்து போன கவரிங் செயினை முதலில் அந்த ஜூஸில் போட்டு, ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

டிசைன் உள்ள நகையாக இருந்தால் உங்கள் விரல்களால், அந்த நகையை, எலுமிச்சை பழச்சாறு நகையின் டிசைனின் இடுக்குகளில் செல்லும் அளவிற்கு கைகளாலேயே அலசிவிடுங்கள். அதன் பின்பாக, அடுப்பில் 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, மீதம் இருக்கும் பாதி அளவு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து, கொதிக்கவிட வேண்டும். இப்போது எலுமிச்சை பழச்சாறில் ஊற வைத்த நகையை, இந்த சுடு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். ஐந்து நிமிடம் கொதிக்கின்ற தண்ணீரிலேயே அந்த கவரிங் நகை இருக்கட்டும். அதன் பின்பாக நகையை ஒரு இடுக்கியை கொண்டு வெளியே எடுத்து, நல்ல தண்ணீரில் அலசும் போது அதில் இருக்கும் அழுக்கு வெளியே வர ஆரம்பிக்கும். உங்களிடம் இருக்கும் பல் தேய்க்கும் பிரஷ் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். ஷாம்பூ, பேஸ்ட், டிஸ்வாஷேர் எதுவாக இருந்தாலும் பல் தேய்க்கும் பிரஷால் தொட்டு, உங்களது நகையை ஸ்க்ரப் செய்து, நுரை வரும் அளவிற்கு தேய்த்து கழுவ வேண்டும். அழுத்தம் கொடுக்க வேண்டாம். லேசாக தேய்த்து கழுவினால் போதும்.

மீண்டும் ஒரு முறை நல்ல தண்ணீரில் போட்டு அலசி நகையை எடுத்து கொள்ளுங்கள். நகையை அலசுவதற்கு உப்பு தண்ணீரை பயன்படுத்த வேண்டாம். குடிதண்ணீரை பயன்படுத்துங்கள். கழுவிய நகைகளை வெள்ளை காட்டன் துணியை வைத்து நன்றாக துடைத்து விடுங்கள். இறுதியாக கொஞ்சம் போல உங்களுடைய முகத்திற்குப் போடும் பவுடரை எடுத்து, கவரிங் நகைகள் மீது போட்டு, அதன் பின்பு ஒரு துண்டினால் அந்த பவுடரையும் துடைத்து எடுத்து விட வேண்டும். பவுடரைப் போட்டு அப்படியே அப்பி விடக்கூடாது. அந்தப் பவுடர் டிசைன்களுக்கு உள்ளும் செல்லக்கூடாது. லேசாக மேலே படும்படி தூவினால் போதும். இப்படி பவுடரை போடும்போது கவரிங் நகைகளுக்கு ஜொலி ஜொலிப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டிலும் பழைய கவரிங் செயின் வளையல்கள் கம்மல்கள் இருந்தால் இந்த முறையை ட்ரை பண்ணி சுத்தம் செய்து பாருங்கள். கட்டாயம் புத்தம் புதுசு போல மாறும்.