கல் உப்பை குறிப்பிட்ட இந்த நாளில் இந்த நேரத்தில் வாங்கினால் உங்கள் வாழ்க்கையில் வறுமை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது !!

கஷ்டம் என்பதே வாழ்க்கையில் வராமல் இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கக் கூடாது. கஷ்டமும் நஷ்டமும், இன்பமும் துன்பமும் சேர்ந்ததுதான் நம்முடைய வாழ்க்கை. ஆனால், எவ்வளவுதான் நம்முடைய வீட்டில் பிரச்சனைகள் இருந்து வந்தாலும், ஒருவருக்கு வரக்கூடாத கஷ்டம் என்றால் அது ‘வறுமை’ தான். வீட்டின் மற்ற தேவைகளுக்கு பணத்திற்கு அவ்வப்போது தட்டுப்பாடுகள் வந்து போனாலும், அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற சமையலுக்குத் தேவையான பொருட்கள், நம்முடைய வீடுகளில் குறையாமல் இருக்க வேண்டும். சமையல் பொருட்களை வாங்குவதற்கு கூட கையில் காசு இல்லை என்ற வறுமை ஒரு வீட்டிற்கு வரவே கூடாது. பணம், காசு இருந்தால் தானே வீட்டில் தானியத்திற்கு குறைவிருக்காது!

அப்போது வறுமை இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும் என்றாலும், அந்த பணம் தான், இந்த இடத்தில் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது அல்லவா? கட்டாயம் இது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான். இருப்பினும், நாம் எல்லோரும் உணர வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், நமக்கு மற்ற தேவைகளுக்கு பணப் பற்றாக்குறை என்பது ஏற்படலாம், ஆனால் உண்ணும் உணவுக்கு பற்றாக்குறை என்பது ஒரு வீட்டில் ஏற்படவே கூடாது. அதுவே ஒருவருடைய வீட்டில் வறுமை இருக்கின்றது, என்பதை குறிப்பதற்கு அர்த்தமாகும். ஒரு வீடு, என்றைக்குமே வறுமையில் தள்ள படாமல் இருக்க வேண்டுமென்றால், மஹாலக்ஷ்மியை வேண்டி, அன்ன லட்சுமியை வேண்டி நம்முடைய வீட்டில் எப்படி வழிபாடு செய்யவேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். மகாலட்சுமிக்கு, வெள்ளிக்கிழமை வழிபாடு சிறந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே! அந்த வெள்ளிக்கிழமை தினத்தில் இரவு 8.30 மணிக்கு, கடையிலிருந்து கல் உப்பு வாங்கி வரும் பழக்கத்தை நீங்கள் நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும்.

வெள்ளிக்கிழமை மாலை 8.30 மணி ஆகிவிட்டதா? கடைக்கு சென்று கல் உப்பை வாங்க வேண்டும். யார் கடைக்கு சென்று கல் உப்பை வாங்கினாலும் சரி, அந்த சமயத்தில் உங்களுடைய வீட்டில் காமாட்சியம்மன் விளக்கில் நெய் தீபம் ஏற்றப்பட வேண்டும். தினமும் நெய் தீபம் ஏற்ற முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, வெள்ளிக்கிழமை, மகாலட்சுமியையும் அன்ன லட்சுமியையும் மனதில் நினைத்து, நெய் தீபம் ஏற்றுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். அது நம்முடைய வீட்டிற்கு நிரந்தர மகா லட்சுமி கடாட்சத்தை தரும் என்பதில் சந்தேகமே இல்லை. கல் உப்பை வாங்கி வந்து, பூஜை அறையில் சேமிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். 21 வாரங்கள் கல் உப்பை வாங்கி சேமித்து விட்டீர்கள். உங்கள் வீட்டு பூஜையறையில் இப்போது 21 பாக்கெட் கல்லுப்பு சேர்ந்துவிட்டது. அதன் பின்பும், வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு கல் உப்பை வாங்கும் பழக்கத்தை நீங்கள் நிறுத்தக் கூடாது.

ஆனால், உங்கள் வீட்டில் 21 பாக்கெட் கல்லுப்பு சேர்ந்த பின்பு, அந்த சேமிப்பில் இருந்து, 3 பேக்கட் உப்போ அல்லது 5 பேகெட் உப்பையோ உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவில், தானமாக கொடுக்க வேண்டும். அங்கு மடப் பள்ளிகள் இருந்தால், அந்த மடப்பள்ளிகளுக்கு, தானம் கொடுக்கலாம். குறிப்பாக மாதம்தோறும் வரும், முதல் திங்கட்கிழமை அன்று, அந்த உப்பை தானம் கொடுக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து, இந்த பழக்கத்தை செய்து கொண்டு வரும் பட்சத்தில், உங்கள் வீட்டில் எந்த சூழ்நிலையிலும், எக்காலத்திலும் உங்களுடைய அடுத்த அடுத்த வாரிசுகளுக்கு கூட, பணப் பற்றாக்குறை என்பது ஏற்படாது. அதாவது, வறுமை இல்லாத வாழ்க்கையை உங்கள் பரம்பரை வாழ வேண்டும் என்றால், உங்களுடைய விடாமுயற்சி உழைப்போடு சேர்ந்து இந்த வழிபாட்டை நீங்கள் பின்பற்றலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.