காசைத் தன் பக்கம் ஈர்க்கும், காந்த சக்தி இந்த கண்களுக்கு உண்டு !! இந்த கண்களை உங்களுடைய வீட்டிலும் ஒட்டி வைத்து தான் பாருங்களேன். பணம் உங்கள் வீடு தேடி வரும் !!

பணக்கஷ்டம் வராமல் இருப்பதற்கு பல பரிகாரங்களை பல முறைகளில் நாம் இன்றளவும் தேடிக் கொண்டு தான் இருக்கின்றோம். அந்த வரிசையில் தொழிலில் நஷ்டம் ஏற்படாமல் இருக்க, வீட்டில் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க, குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைய, கண் திருஷ்டி படாமல் இருக்க, கவலைகள் உங்களை நெருங்காமல் இருக்க, பணம் உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்க, என்ன செய்ய வேண்டும் என்ற மிக சுலபமான ஒரு பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். ஒரு மிருகம், ஒரு பறவை, இந்த இரண்டு ஜீவராசிகளின் கண்களை நம்முடைய வீட்டில் ஒட்டி வைத்தாலே போதும். அது என்ன மிருகம்? என்ன பறவை? என்பதை பதிவின் முதலிலேயே நம் தெரிந்துகொள்ளலாம். கஜமுக கணபதியின் அம்சமாக இருக்கும் யானையின் கண், மகாலட்சுமியின் வாகனமாக சொல்லப்படும் ஆந்தையின் கண்கள். யானையின் கண்களை ஒரு காகிதத்தில் பிரிண்ட் எடுத்து கூட, அதற்கு பிரேம் போட்டு நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் மாட்டி வைக்கலாம்.

இதன் மூலம் தொழிலில் கண்திருஷ்டி ஏற்படாமல், தடங்கல் ஏற்படாமல், நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் அதிகப்படியான லாபம் உயரும். இந்த யானையின் கண்களை உங்களுடைய வீட்டிலும் மாட்டி வைப்பதால், வீட்டில் பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்கும் என்றும் சாஸ்திர குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சொல்லப்படுவது ஆந்தை. அபசகுணம் என்று நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த ஆந்தை, மகாலட்சுமியிம் வாகனம். இந்த ஆந்தையின் கண்கள் மட்டும் கடைகளில் விற்கப்பட்டால், அதை வாங்கி உங்களுடைய வீட்டில் மாட்டி வைத்துக் கொள்ளலாம். ப்ரின்ட் எடுத்த பேப்பராக இருந்தால் சுவற்றில் கூட ஒட்டி வைத்துக்கொள்ளலாம். இந்த ஆந்தையின் கண்களை உற்று நோக்கும் போது, குழந்தைகளுக்கு ஞாபக சக்தியானது அதிகரிக்கக்கூடும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. பொதுவாகவே மனிதர்களான நாம் வலது பக்கம் உள்ள மூளை மட்டும் தான் செயல்படுத்தி வருகின்றோம்.

இடது பக்கம் இருக்கும் மூளையை நாம் உபயோகப்படுத்துவதே கிடையாது. இடது பக்கம் மூளையை ஞானிகளும் அதிமேதாவிகளும் மட்டும் தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ஆந்தையின் கண்களை அடிக்கடி பார்ப்பவர்களுக்கு, இடது மூளையும் செயல்படும் என்று சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. ஆந்தையின் கண்களை எவர் ஒருவர் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருக்கின்றார்களோ, அவர்களுக்கு அறிவு கூர்மையும், ஞாபகசக்தியும் கட்டாயம் அதிகரிக்கும். உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் 27 நாட்கள் தொடர்ந்து அடிக்கடி ஆந்தையின் கண்களை பார்த்து வாருங்கள். உங்களுடைய அறிவுத்திறனில் உங்களுக்கே வித்தியாசம் இருப்பதை நிச்சயம் உணர்வீர்கள். குறிப்பாக படிக்கின்ற குழந்தைகளுக்கு புத்திகூர்மை என்பது அதிகமாக இருக்கவேண்டும் அல்லவா?

அதனால் உங்களது குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுப்பது நல்லது. இந்த ஆந்தையின் கண்களை பீரோவில் ஒட்டி வைத்தால் பணம் கட்டுக் கட்டாக கட்டாயம் சேரும். தொழில் செய்யும் நிறுவனங்கள், அலுவலகம் அல்லது கடை எதுவாக இருந்தாலும் தொழில் செய்யும் இடத்திலும் இந்த ஆந்தையின் கண்களை மாட்டி வைத்தால் யோகம் நம்மை தேடி வரும். அழகான ஆந்தை பொம்மைகள் விற்றால் கூட, அதை வாங்கி வீட்டிலும் அலுவலகத்திலும் தொங்க விட்டுக் கொள்ளலாம். ஆந்தையின் கண்களை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருப்பவர்களுக்கு, மனநிலை தெளிவுபெறும். அவர்களின் எண்ண ஓட்டம் ஏதாவது ஒரு முயற்சிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் உங்களுடைய முன்னேற்றமும் அதிகரிக்கும். உங்களுடைய செயல்பாடும் செயல்திறனும் அதிவேகமாக இருந்தால், உங்களுக்கு வெற்றிகள் குவியும். கூடவே தன லாபமும் உயரும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.