காய்கறிகளின் தோல், பழத் தோல், முட்டை தோல், டீ தூள், இவை அனைத்தையும் விட சத்துகளை பல மடங்கு கொண்டது இந்த 1 பொருள் !! உங்களுடைய செடிகள் பூத்துக் குலுங்கும் !!

நம்முடைய வீட்டில் புதியதாக ஒரு செடியை நட்டு வைத்தாலும், அல்லது புதியதாக செடி வளர்வதற்கு விதைகளை விதைத்தால், அந்த செடியானது நன்றாக முளைத்து வரும் வரை, கட்டாயம் எல்லோருக்குமே ஒரு பயம் இருக்கும். நாம் நட்டு வைத்திருக்கும், விதைத்திருக்கும் இந்த செடி முழுமையாக வளர்ச்சி அடையுமா? என்ற சந்தேகம் தான் அது. வளரும் வரை நம்மை உறுத்திக்கொண்டே இருக்கும். இனி அந்த பயமே உங்களுக்கு வேண்டாம். நீங்கள் நட்ட செடியாக இருந்தாலும், நீங்கள் விதைத்த விதையாக இருந்தாலும் நிச்சயம் செழிப்பாக வளர்ந்து வருவதற்கு எந்த பொருளை பயன்படுத்த வேண்டும். அது எந்தப் பொருள்? அந்தப் பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பொருள் கட்டாயம் எல்லா இடங்களிலும் கிடைக்கும். சுலபமாக கிடைக்கும். எல்லார் வீட்டு பின் வாசலிலும் வளர்க்கக்கூடிய முருங்கைக்கீரை தான் அது. செடிகளுக்கு தேவைப்படும் அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும், இரும்புச் சத்தையும், நுண்ணுயிர் சத்துக்களையும் கொடுக்கக் கூடிய சக்தி இந்த ஒரு கீரைக்கு உள்ளது. வாழைப்பழத் தோல், எலுமிச்சை பழத்தோல், புளித்த தயிர், முட்டை ஓடு, இந்த பொருட்களிலிருந்து, உங்களுடைய செடிகளுக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்தை இந்த ஒரு முருங்கைக்கீரையே கொடுத்துவிடும். இந்த முருங்கைக்கீரையை எப்படி செடிகளுக்கு உரமாக பயன்படுத்துவது. கொஞ்சம் போல உங்கள் செடிகளுக்கு தேவையான முருங்கைக்கீரையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை சிறிய அளவு மிக்ஸி ஜாரில் போட்டு, நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சமாக ஒரு கால் கப் தண்ணீர் விட்டு, அரைத்து எடுத்தால் அதில் இருந்து முருங்கைக் கீரைச் சாறு வரும்.

அதை வடிகட்டி ஒரு போட்டு நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அடர் பச்சை நிறத்தில் குறிப்பிட்ட அளவு முருங்கைக் கீரைச் சாறானது உங்களுக்கு கிடைத்திருக்கும் அல்லவா? அதுதான் நாம் செடிகளுக்கு பயன்படுத்தக்கூடிய உரம். இதை எப்படிப் பயன்படுத்துவது? 1 பங்கு முருங்கைக் கீரை சாறு எடுத்தால், 15 மடங்கு தண்ணீர் கலக்க வேண்டும். ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதில் முருங்கைக் கீரைச் சாறை கலந்து நன்றாகக் குலுக்க வேண்டும். இந்த தண்ணீரை உங்களுடைய செடிகளுக்கு, வேர் பகுதியில் படும்படி, ஸ்ப்ரே செய்யலாம். அல்லது கால் கப் அளவு எடுத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

இலை தண்டு பூக்கள் மேல் படும்படி ஸ்பிரே செய்யலாம். நீங்கள் செடி வளர்வதற்கு விதைகளை விதைத்து இருந்தால், அந்த விதையின் மேல் இந்த முருங்கைக் கீரைச் சாறு கலந்த தண்ணீரை நன்றாக தெளித்து விடலாம். வாரத்திற்கு இரண்டு முறை இந்த முருங்கைக் கீரை சாற்றை உங்களுடைய செடிகளுக்குத் தாராளமாக உரமாக கொடுப்பதில் தவறு கிடையாது. பூச்செடிகள், காய்கறி செடிகள், பழச் செடிகள் எல்லாவகையான செடிகளுக்கும் இந்த முருங்கைக்கீரை ஊட்டச்சத்து தண்ணீரை தாராளமாக ஊற்றலாம். அதிகப்படியான பூச்சித் தொல்லை இருக்காது. செடிகள் செழிப்பாக வளர்ந்து பூ பூக்கும். காய் காய்க்கும். செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாமல், செடிகள் செழிப்பாக வளர்வதற்கு நல்ல டிப்ஸ் இது. உங்கள் வீட்டில் ஒரு செடிக்கு மட்டும் இதை ட்ரை பண்ணி பாருங்க! நல்ல ரிசல்ட் கிடைச்சா எல்லா செடிகளுக்கும் யூஸ் பண்ணுங்க.