காற்றில் கலந்துள்ள கெட்ட சக்தி கூட உங்கள் வீட்டு வாசல் பக்கம் வர முடியாது !! இந்த மூன்று பொருளை பொருளை மஞ்சள் துணியில் கட்டி வைத்தால் போதும் !!

நம் வீட்டிற்குள் வரக்கூடிய கெட்ட சக்தியானது, ஏதாவது ஒரு பொருளின் மூலமாகத்தான் உள்ளே வர வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. சில கெட்ட சக்திகளை காற்றில் கலந்து விடுவதன் மூலமாக கூட, காற்றின் வழியாக கூட, நம் வீட்டுக்குள் நுழைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நமக்கு எதிரிகள் இருந்தால்தான், நம் வீட்டிற்குள் இப்படிப்பட்ட கெட்ட சக்தி நுழையும், என்றும் உறுதியாக சொல்லிவிட முடியாது. நம் அக்கம் பக்கத்தினருக்குக ஏவி விடப்படும், கெட்ட சக்திகள், எதிர்பாராமல் நம் வீட்டில் நுழைய அதிக வாய்ப்பு உள்ளது. அதாவது, எதிரி பலமாக இருந்தால், ஏவி விடப்பட்ட கெட்ட சக்தியானது, வேறு எந்த இடத்திலாவது நுழைந்து விடும்.

இப்படியும் பல பாதிப்புகள் நம்மை தாக்க வாய்ப்பு உள்ளது. இப்படியெல்லாம் நடந்து விடும் என்று பயப்படவேண்டாம். இப்படியெல்லாம், நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதற்காகத் தான் சொல்லப்பட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும், நம் வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்வது? நம் முன்னோர்களால் சொல்லப்பட்ட ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய உடலில் இருக்கும் விஷத் தன்மையையும், இந்த மூன்று பொருள் முறிக்கும். நம்மை சுற்றியிருக்கும் கெட்டதையும் இந்த மூன்று பொருள் நீக்கிவிடும். நம் எல்லோராலும் அறியப்பட்ட, திரிகடுகம் எனப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றையும், வைத்துதான் இந்த பரிகாரம்.

இந்த மூன்றையும் வாங்கி நன்றாக பொடி செய்து, உங்கள் வீட்டில் காற்றுப்புகாத டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் வெள்ளிக்கிழமையும் அல்லது செவ்வாய்க்கிழமையும் சாம்பிராணி தூபம் போடும் போது, அதில் சிறிதளவு இந்த மூன்று பொருட்களும் சேர்த்து வைத்துள்ள பொடியைப் போட்டு தூபம் போட வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் வீட்டில் கண்ணுக்கு தெரியாத எந்த கெட்டதும் நம்மை கஷ்டத்திற்கு தல்லிவிடாது. கெட்டதும் வெளியேறிவிடும். ஒரு சிறிய மஞ்சள் துணியை எடுத்துக் கொண்டு, இந்த திரிகடுக தூளை, அந்த மஞ்சள் துணியில் போட்டு, மஞ்சள் நூலால், சிறிய முடிச்சாக கட்டி, உங்கள் நில வாசப்படியில் மாட்டி வைத்து விடலாம். உங்கள் வீடானது ஒரு பாதுகாப்பு வட்டத்திற்குள் இருப்பதுபோல அமைந்துவிடும். எந்த ஒரு தீவினையும், யாரையும் உடனடியாக பாதித்து விடாது.

உங்கள் வீட்டில் நிம்மதி குறைய ஆரம்பித்து, எதிர்பாராத விதத்தில், எதிர்பாராத இழப்புகளை சந்திக்கும் பட்சத்தில், அந்த வீட்டில் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு கெட்ட சக்தி அதிகம் இருக்கிறது என்று தான் கூற முடியும். அது கண்திருஷ்டியாக இருந்தாலும் கூட, அதுவும் ஒரு கெட்ட சக்தி தான். நல்ல எண்ணம் இல்லாதவர்களின் பெருமூச்சும், சாபமும், ஒரு கெட்டதாக மாறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி நம் குடும்பத்தையும், நம் வீட்டையும், தாக்கும் எந்தவிதமான தோஷமும், நமக்கு கஷ்டத்தை ஏற்படுத்தி விடக்கூடாது. நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால், உங்களால் முடிந்த வரை சுலபமான பரிகாரத்தை நல்லமுறையில் செய்வதில் எந்த ஒரு தவறும் இல்லை என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.