காலையில் வீட்டிற்குள் வந்த மகாலட்சுமியை மாலையில் வெளியே செல்லாமல் விடாமல் தடுக்க வாசலில் கோலத்தை இப்படி போடுங்கள் !!

பொதுவாகவே காலை நேரத்தில் நம்முடைய வீட்டிற்குள் மகாலட்சுமி உள்ளே வர வேண்டும் என்பதற்காகத்தான், வாசல் தெளித்து கோலத்தை போடுவோம். இதேபோல், மாலை நேரத்திலும் சில பேர் வீடுகளில் வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கம் உள்ளது. காலையில் நம் வீட்டிற்கு வருகை தந்த மகாலட்சுமி, மாலை நேரத்தில் நம் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருக்க வேண்டுமென்றால், எந்த கோலத்தை, எப்படி போடுவது? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய முன்னோர்களும் இந்த கோல முறையை தான் பின்பற்றி வந்துள்ளார்கள் என்பதையும், நாம் இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டும். அதென்ன அப்படிப் பட்ட கோலம்? என்ற கேள்வி கட்டாயம் எல்லோர் மனதிலும் எழும்.

சுலபமான கோலம் தான்! அதை முறைப்படி எப்படி போடுவது என்பதை பார்த்து விடலாமா? காலையில், வீட்டு வாசலில் கோலம் போட்ட பின்பு, அந்த கோலத்திற்கு இரண்டு பக்கங்களிலும் பார்டர் போடும் பழக்கம் சில பேருக்கு இருக்கும். சில பேருக்கு இருக்காது. இந்த பக்கவாட்டு கோடுகளை(பார்டர்) வரைவது அழகுக்காக என்று சில பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கட்டாயமில்லை. கோலத்தைப் போட்டு விட்டு கோலத்தின் இருபக்கங்களிலும் வரையக்கூடிய அந்த பார்டர் வளைவுகள், மகாலட்சுமியை வரவேற்பதற்காக போடக் கூடியது கோடுகள்! கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை பாருங்கள். கோலம் உங்களுடைய விருப்பம் தான். அதன் இரண்டு பக்கங்களிலும் போடக்கூடிய பார்டர் டிசைனும் உங்களுடைய விருப்பம் தான். ஆனால், கட்டாயம் கோலத்தின் இரண்டு பக்கத்திலும், இப்படிப்பட்ட வளைவுகள் கொண்ட கோடு இருக்க வேண்டும். இது மகாலட்சுமியை உள்ளே வரவைப்பதற்காக போடப்படும் கோடு, என்று நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது.

சில பேர் வீட்டு படிக்கட்டுகளின் கூட, இப்படிப்பட்ட வளைவுகள் கொண்ட பார்டரை போடும் பழக்கத்தை வைத்திருப்பார்கள். அதற்கு காரணமும் இதுதான். சரி, இது காலையில் போடக்கூடிய கோலம். சில பேர் வீடுகளில் மாலையிலும் வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கம் இருக்கும் அல்லவா? மாலையில் என்ன கோலத்தைப் போட வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம். மகாலட்சுமி இப்போது நம் வீட்டு வாசலை விட்டு தாண்டாமல் இருக்க வேண்டும். எப்போதும்போல் உங்களுக்கு என்ன கோலம் தோன்றுகிறதோ, அதை போட்டுவிட்டு, அந்த கோலத்திற்கு கீழ்ப்பகுதியில், இரண்டே இரண்டு கோடு போட்டு சுழித்து விட்டால் கூட போதும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதாவது மகாலட்சுமி வெளியே செல்லக்கூடாது என்பதற்காக, நம்முடைய வாசலில் ஒரு கோட்டை போட்டு விட்டோம் என்பதற்கான அர்த்தத்தை இது குறிக்கின்றது.

இந்த கோலம் தான் போட வேண்டும். இந்த பார்டர் தான் போட வேண்டும் என்றெல்லாம் எந்த அவசியமும் இல்லை. காலைநேரத்தில் கோலத்தின் இரு பக்கத்திலும் வளைவுகள் கொண்ட கோடுகள். அதைத்தான் நம் பாஷையில் பார்டர் என்று சொல்லுவோம். மாலையில் கோலத்திற்கு கீழ்பாக்கத்தில் இரண்டு கோடு போட்டாலே போதும். நிறையபேர் வீட்டில் இப்படி கோலம் போடும் வழக்கம் இருக்கும். இதை நீங்கள் கவனிக்காமல் கூட இருக்கலாம். இனிமேல் கவனித்துப் பாருங்கள்! இப்படி கோலம் போட்டால், வீட்டில் ஐஸ்வரியம் பெருகுமா? என்ற விதண்டாவாத கேள்வி கேட்பவர்களுக்கு இந்த பதிவு அல்ல. இப்படி கோலம் போடுவதன் மூலமாகவும், நம்முடைய வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக குடியிருக்க வாய்ப்பு உள்ளது, என்று நம்பி, இந்த கோலத்தை போடுபவர்களுக்கு கொடுக்கப்பட்ட பதிவு தான் இது. நம்பியவர்களை மகாலட்சுமி கைவிட மாட்டாள், என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.