கிடைக்கும் சில்லரை காசுகளை வீட்டில் கண்ட இடத்தில் போட்டு வைத்தால் இது தான் நடக்கும் தெரிந்து கொள்ளுங்கள் !!

ஒரு சிலர் சில்லரை காசுகளை வீட்டில் கண்ட இடங்களிலெல்லாம் அப்படியே போட்டு வைப்பார்கள். ஏதாவது கடைக்கு சென்று வாங்கி வந்தால் மீதி காசை கைக்கு எட்டிய இடத்தில் போட்டு விடுவார்கள். இது போல் ஆங்காங்கே வீடு தோறும் போட்டு வைப்பது பணவரவை தடை செய்யும். சில்லறை காசு, பணத்தை விட மதிப்பு மிக்கவை. ஒரு நல்ல விஷயத்திற்கு மொய் வைக்கும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை தான் முதலில் தேடுவோம். அப்போது எவ்வளவு பணம் கையில் இருந்தாலும் அந்த ஒரே ஒரு நாணயத்திற்கு அவ்வளவு மதிப்பு என்பதை நாம் உணர்வோம். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல, நாம் சேர்க்கும் சிறு சிறு தொகை கூட நாளை பெரிய தொகையாக மாறி, நமக்கு பெரிய உதவியாக இருக்கும். குழந்தைகளுக்கு சில்லரை நாணயங்களை சேர்க்கும் பழக்கத்தை சொல்லிக் கொடுப்பது பிற்காலத்தில் அவர்களின் நல்ல நடவடிக்கைகள் மேம்பட உதவியாக இருக்கும்.

அப்படி கிடைக்கும் சில்லறைகளை வீட்டில் கண்ட இடத்தில் போட்டு வைத்தால் என்ன நடக்கும்? என்று இந்த பதிவில் பார்ப்போம்.நம்முடைய வீடுகளில் சில்லரை காசுகளை சிதற விடுவது நல்லதா? கெட்டதா? என்பது போல் சிலருக்கு சந்தேகங்கள் எழும். உண்மையில் சில்லரை காசுகளை சிதற விடுவது, சில்லரை காசுகளை எண்ணுவது வீடுகளில் அந்த அதிர்வலைகளை உண்டு பண்ணுவதால் நல்லது தான் நடக்கும் என்பார்கள். குபேரனுக்கு சில்லரை நாணயங்களை அர்ச்சனை செய்கிறோம். அவருக்கு சில்லரை நாணயங்களின் சத்தம் மிகவும் பிடிக்குமாம். தினமும் மாலை வேளையில் சில்லறை நாணயங்களை ஓசை எலும்ப எண்ணுவதை வழக்கமாக கொள்ளுங்கள். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது ஜோதிட நம்பிக்கை. தென்மேற்கு மூலை மிகவும் அம்சமான மூலையாக சில்லறை நாணயங்கள் வைக்க இருந்து வருகிறது. வீட்டின் தென்மேற்கு மூலையில் ஒரு உண்டியல் அல்லது கண்ணாடிக் கிண்ணம் வைத்துக் கொள்ளலாம்.

அதில் உங்களுக்கு கிடைக்கும் சில்லறை நாணயங்களை சேர்த்துக் கொண்டே வரலாம். ஒரு கட்டத்தில் அந்த நாணயங்கள் நிரம்பி உங்களுக்கு ஏதாவது ஒரு முக்கிய தேவையை பூர்த்தி செய்யும் பொழுது நீங்களே இதன் அற்புதத்தை உணர்வீர்கள். இவற்றை ஆங்காங்கே போட்டு வைப்பதால் பிரயோஜனம் இல்லை. அது வேறு ஒரு செலவிற்கு வீண் விரயமாக சென்று விடும் அவ்வளவு தான். தென்மேற்கு மூலை பகுதியில் மர உண்டியல் வைத்து அதில் உங்கள் வீட்டு குழந்தைகளை சில்லறை நாணயங்களை போடச் சொல்லி கொடுங்கள். இதனால் வீட்டில் பண வரவு அதிகரிப்பதை நீங்களே உணர்வீர்கள். இவையெல்லாம் பணத்தை ஈர்ப்பதற்குரிய சூட்சும ரகசியங்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது. நம்பிக்கையுடன் செய்து பாருங்கள். அதில் இருக்கும் பணத்தை உங்கள் தேவைக்கு அடிக்கடி நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். எடுக்கவே கூடாது சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது போல் எந்த நிபந்தனையும் இல்லை. அவசர தேவைக்கு சில்லறை மிகவும் முக்கியம்.

திடீரென பஸ்ஸில் பயணம் செல்ல நேரிடும் சிலரை தேவை? என்ன செய்வீர்கள்? அதிலிருந்து தாராளமாக எடுத்துக் கொண்டு போகலாம். அதுபோல் கோவில் காரியங்களுக்காக நீங்கள் செலவிடும் தொகை 101, 501, 1001 என்பது போல் இருக்க வேண்டும். அப்போது இந்த சில்லறை நாணயங்கள் உங்களுக்கு உதவும். உங்கள் வீட்டு காலண்டரில் குளிகை நேரம் என்று இருக்கும். அந்த நேரம் ஒரு செயலை நாம் தொடங்கினால் அந்த செயலை திரும்ப திரும்ப நம்மை செய்யத் தூண்டும். அதனால் நீங்கள் சில்லறை நாணயங்களை சேர்க்கும் முன் குளிகை நேரத்தை பார்த்துக் குறித்துக் கொள்ளுங்கள். குளிகையில் முதல் தொகையாக அதில் ஒரு ரூபாய் நாணயத்தை, குடும்பத்தில் கைராசியான நபரை அழைத்து போட சொல்லுங்கள். அதன் பின் எப்பொழுதெல்லாம் உங்கள் கைக்கு சில்லரை நாணயங்கள் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அதில் போட்டுக் கொண்டே வாருங்கள். இதனால் குடும்பத்தில் பண வரவு தடைபடுவது நீங்கும். உழைத்த பணம் வீணாகாமல் உங்களிடமே இருக்கும்.