குடும்பத்தில் இருக்கக்கூடிய எல்லா வகையான பிரச்சினையையும் தீர்த்து வைக்க இந்த ஒரு தூபம் போதுமே !!

வீட்டில் சதாகாலமும் பிரச்சினை இருந்து கொண்டே வருகிறது எனும் பட்சத்தில், குடும்பத்தோடு சென்று ஒருமுறை குலதெய்வத்தை உங்கள் வீட்டு முறைப்படி வழிபட வேண்டும். குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருந்தால், உங்களுடைய வீட்டிலேயே குலதெய்வ பூஜையை, குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும். இதுதான் முதல் பரிகாரம். எப்படிப்பட்ட தீர்க்கமுடியாத பிரச்சனையையும் தீர்க்கக்கூடிய சக்தி குலதெய்வ ஆசீர்வாதத்திற்கு தான் உண்டு. இந்த குலதெய்வ பூஜையை செய்வதற்கு முன்பாக உங்களுடைய வீட்டை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எல்லோருடைய வீடும் சுத்தமாக தான் இருக்கிறது என்பதாக வைத்துக் கொள்வோம்.

கண்ணுக்குத் தெரிந்த தூசு தும்புகளை சுத்தப்படுத்தி, ஒட்டடை அடித்து வீட்டை கழுவி, துடைத்து சுத்தம் செய்து விடலாம். கண்ணுக்குத்தெரியாத எதிர்மறை ஆற்றல் இருந்தால், அதை எப்படி சுத்தம் செய்வது? அதற்கான ஒரு வழி உள்ளது. எதிர்மறை ஆற்றல்களை விரட்டி அழிக்கக்கூடிய சக்தி கொண்ட, இந்தப் பொருட்களையெல்லாம் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி வைத்து, தூபம் போட்டாலே போதும். உங்களுடைய என் வீட்டில் யாகம் நடத்தியதற்கு சமம். உங்களுடைய வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் கண்ணுக்கு தெரியாமல் தெறித்து ஓடி விடும். அதன்பின்பு குலதெய்வ பூஜை செய்யும் பட்சத்தில், குலதெய்வம் வீட்டிற்குள் வர எந்த ஒரு தடையும் இருக்காது. உங்களுக்கே தெரியாமல் யாராவது உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று நினைத்து, உங்கள் குலதெய்வத்தை கட்டிப்போட்டு வைத்திருந்தாலும் அந்த தடைகள் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

வெண்கடுகு, வால் மிளகு, வசம்பு பொடி, மருதாணி விதை, கஸ்தூரி மஞ்சள், சந்தன கட்டை, அகில் பட்டை, வெட்டி வேர் பொடி, குப்பைமேனி இலை பொடி, இவை அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வீட்டின் தூபம் போடுவதற்காக அல்லது யாகம் நடத்துவதற்காக என்று கேட்டு எல்லோ பொருட்களிலிருந்தும் 50 கிராம் அளவு அல்லது 100 கிராம் அளவு வாங்கிக்கொள்ளுங்கள். பொடியாக எந்தப் பொருட்கள் எல்லாம் கிடைக்கின்றதோ அதை எல்லாம் பொடியாகவே, வாங்கி ஒன்றாக கலந்து கொள்ளலாம். பொடியாக கிடைக்காத மற்ற பொருட்களை, நீங்களே மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள். இதில் மருதாணி விதை, வெண்கடுகு இவைகளை பொடி செய்யாமல் அப்படியே தூபத்தில் கலக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

முதலில் கொட்டாங்குச்சியை கற்பூரம் வைத்து நன்றாக எரிய விட்டு, அதன் பின்பு, இந்த பொடிகளை எல்லாம் சேர்த்து சந்தனக் குச்சி சேர்த்து, அதற்குமேல் தூபம் போட வேண்டும். இந்த புகையை உங்களுடைய வீட்டு மூலை முடுக்கு அனைத்திலும் காண்பிக்க வேண்டும். பரண் மேலே முதல் கொண்டு எல்லா இடத்திலும் காட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீபத்தை போட்ட பின்பு குலதெய்வ பூஜை செய்வது மிகவும் சிறப்பு. உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய கண் திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் இவைகள் அனைத்தும் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போய்விடும். வீட்டில் இருந்த சண்டை சச்சரவுகள், பணக்கஷ்டம், மனக் கஷ்டம், வேலையில்லா திண்டாட்டம், திருமண தடை, நோய் நொடிகள் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வாரம்தோறும் வரும் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் இந்த தூபத்தை வீட்டில் போட்டு வாருங்கள். நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.