குறிப்பிட்ட இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் பல்லி சத்தம் போடுகிறதா ?? நிச்சயம் உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது !!

முந்தைய காலங்களில் எல்லாம் பல்லி சத்தம் போடும் திசையை வைத்தே பல சகுனங்களை நம் முன்னோர்கள் சரியாக கணித்து விடுவார்கள். அந்த சகுன முறைகள் எல்லாம் காலப்போக்கில் மூடநம்பிக்கையாக கருதப்பட்டு மறைந்துவிட்டது. ஆனால் நம் முன்னோர்கள் கூறிய எந்த ஒரு கூற்றும் பொய்யாகாது என்பதற்கிணங்க, சில சாஸ்திர சம்பிரதாயங்களை தேடி கண்டுபிடித்து இன்றளவும் பலபேர் கடைப்பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதன் அடிப்படையில், நம்முடைய வீட்டில் எந்த நாளில், எந்த நேரத்தில் பல்லி சத்தம் போட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். பல்லியை கண்டாலே துரத்தி அடிக்கும் இந்த காலத்தில், இவை அனைத்தும் மூடநம்பிக்கை அல்லவா?

என்று கூட சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் இன்றளவும் பல்லி நம்முடைய தலை மேல் விழுந்தாலோ, அல்லது நம் உடம்பில் ஏதாவது ஒரு பாகத்தில் விழுந்தாலோ, பதறிக் கொண்டு தலையில் தண்ணீரை தெளித்துக் கொண்டு, பல்லி விழும் பலன் பார்க்கும் பலர் இந்த பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி குறிப்பாக இந்த நான்கு தினங்களில் மாலை 6 மணிக்கு மேல் உங்கள் வீட்டில் கவுளி சத்தம் போட்டால் கட்டாயம் அதில் ஏதோ ஒரு செய்தி உள்ளது என்பதுதான் அர்த்தம். நல்ல தேவதைகளோ அல்லது உங்கள் வீட்டு குலதெய்வமோ அல்லது உங்கள் முன்னோர்களோ அல்லது உங்கள் இஷ்ட தெய்வமோ உங்கள் வீடு தேடி வந்து ஏதோ ஒரு நல்ல விஷயத்தை உங்களுக்கு சொல்வதாக தான் சாஸ்திரத்தில் நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டின் உள்பகுதியில் பல்லியானது சத்தம் போட்டாலும், வெளிப்பகுதியில் பல்லியானது சத்தம் போட்டாலும், குறிப்பிட்ட இந்த நான்கு தினத்தில், எந்த திசையில் சத்தம் போடுகிறது என்று முதலில் கவனித்துக் கொள்ள வேண்டும்.

சில நேரத்தில் சத்தம் போடும் பல்லியானது கண்களுக்கு தெரியும். சில நேரங்களில் தெரியாது. இப்படியிருக்க எந்த திசையிலிருந்து சத்தம் வருகின்றது என்பதை நிச்சயம் நம்மால் கண்டுபிடித்துவிட முடியும். அந்த சமயத்தில் சிறிதளவு பச்சரிசியில், மஞ்சள் தூளைக் கலந்து அட்சதை தயாரித்து, பல்லி சத்தம் போடும் அந்த திசையில் சமர்ப்பணம் செய்யுங்கள். அதன் பின்பு இரு கைகளை கூப்பி மனதார உங்கள் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, உங்களுக்கு இருக்கும் வேண்டுதல்களை சொல்லுங்கள். உங்கள் குடும்பத்தில் தீர்க்கமுடியாத பல பிரச்சனைகள் இருக்கலாம். அந்த பிரச்சனைகள் எல்லாம் நல்லபடியாக, விரைவாக தீரவேண்டும் என்று நாம் வைக்கும் பிரார்த்தனை நிச்சயமாக நிறைவேறும் என்பது நம் முன்னோர்களின் கூற்று. குறிப்பிட்ட இந்த நான்கு தினங்களில், அதுவும் மாலை 6 மணிக்கு மேல் சத்தம் போட்டால் அது நிச்சயம் நல்ல தேவதைகளாகத்தான் இருக்க முடியும்.

பல்லி ரூபத்தில் எந்த கெட்ட சக்தியும் இருக்க முடியாது என்பதும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சில பேரது வீட்டில் எப்போதுமே பல்லியானது இரவு பகல் பாராமல் எந்த கிழமை என்று பாராமல் சத்தம் போட்டுக்கொண்டே இருக்கும். இது உங்களுக்கு வரப்போகும் பிரச்சனையை முன்கூட்டிய சொல்லுவதற்காக கூட இருக்கலாம். ஆனால் இதற்காக யாரும் அனாவசியமாக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நல்ல தேவதைகள் நமக்கு சகுனங்களை முன்கூட்டியே தெரிவிப்பதாக, பல்லி ரூபத்தில் இருப்பதாகவும் ஒரு சான்று உள்ளது. அதாவது நம்மை எச்சரிக்கை செய்து முன்கூட்டியே கவனமாக இருக்கச் சொல்கிறது பல்லி சத்தம். அந்த சமயத்தில் உங்கள் குடும்பத்திற்கு பிரச்சனைகள் எதுவும் பெரியதாக வரக்கூடாது என்று மனதார வேண்டிக் கொண்டாலே போதும். எனவே முடிந்தவரை நம் முன்னோர்கள் கூறிய பல்லி சகுனங்கள் எல்லாவற்றையும் நம்மால் கடைப்பிடிக்க முடியவில்லை என்றாலும், குறிப்பிட்ட இந்த நான்கு தினத்தில் பல்லி சத்தம் போடும் சமயங்களில் நம்முடைய வேண்டுதல்களை வைத்து தான் பார்ப்போமே! நிறைவேறினால் அது உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் அல்லவா?