குலதெய்வத்தை இப்படி வழிபட்டால் குபேர வாழ்க்கையை பெறலாம் ?? அமாவாசை தினமான அன்று, இந்த வழிபாட்டை தொடங்குங்கள் !!

எந்த ஒரு குடும்பம், குல தெய்வத்தின் அருளாசியை முழுமையாக பெற்றிருக்கின்றதோ, அந்த குடும்பத்தின் குலம் தழைத்து, செல்வ செழிப்போடு சிறப்பாக வாழும் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயமே. நம்முடைய வாழ்வை வளமாக்கும் குலதெய்வத்தை வேண்டி அமாவாசை தினத்தில் செய்ய வேண்டிய பரிகாரங்களில், குறிப்பிட்டு செல்வ வளத்தை தரக்கூடிய பரிகாரத்தை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே, கோவில்களில் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்து முடித்துவிட்டு, அந்த தெய்வத்திற்கு அலங்காரம் செய்யத் தொடங்கும் போது, சிரசு காணிக்கை என்று, ஒரு ரூபாய் நாணயத்தை அந்த தெய்வத்துனுடைய தலையில் வைப்பார்கள். உங்களுடைய குலதெய்வத்திற்கு அப்படி வைக்கும் சிரசு காணிக்கையை, உங்களால் பெற முடியும் என்றால், உங்கள் குலதெய்வ கோவிலில் இருந்து அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வாங்கி வீட்டுக்கு எடுத்து வரலாம்.

எல்லோருடைய குலதெய்வ கோவிலிலும், இப்படிப்பட்ட சிரசு காணிக்கை கொடுக்கப்படும் என்று சொல்லிவிட முடியாது. குலதெய்வ கோவிலில் இருந்து இந்த காணிக்கையை பெற முடியாதவர்கள் வெற்றிலை, பாக்கு, பூ பழத்தோடு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து குலதெய்வ கோவிலில் அர்ச்சனை செய்து அந்த நாணயத்தை எடுத்து நம்முடைய வீட்டிற்கு வரவேண்டும். செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையை குலதெய்வ கோவிலில் வைத்து விடுங்கள். உங்களுக்கு குலதெய்வக் கோவிலுக்குப் போகும் சந்தர்ப்பம் அமையவில்லை. வருடத்திற்கு ஒரு முறை தான் செல்ல முடியும். நீங்கள் வசிக்கும் இடம், குலதெய்வ கோவில் இருக்கும் இடத்திலிருந்து, தூரமான பகுதியில் வசிக்கிறீர்கள் என்றால், கவலையே வேண்டாம். வெற்றிலை, பாக்கு, பூ, பழத்தோடு, 1 ரூபாய் நாணயத்தை பூஜை அறையில் வைத்து குல தெய்வத்தின் நாமத்தை 108 முறை உச்சரித்து, அந்த நாணயத்தை எடுத்து பரிகாரத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து தான் பரிகாரமே சொல்லப்பட்டுள்ளது.

இப்படியாக குலதெய்வத்தின் அருள் நிறைந்த, இந்த ஒரு ரூபாய் நாணயத்தை வீட்டிற்கு எடுத்துவந்து, அமாவாசை தினத்தன்று உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, குலதெய்வத்தை வேண்டி பூஜை செய்து, சுத்தமான வெற்றிலையில் அந்த நாணயத்தை வைத்து மடித்து, நூல் போட்டு கட்டி உங்கள் வீட்டு பீரோவில் அல்லது பணம் வைக்கும் பெட்டியில் வைக்க வேண்டும். முடிந்தால் அமாவாசை தினத்தன்றே குலதெய்வ கோயிலுக்கு சென்று இந்த ஒரு ரூபாய் நாணயத்தை வாங்கி வந்து இந்த பரிகாரத்தை செய்வது மேலும் சிறப்பு தேடித்தரும். முடியாதவர்கள் நாணயத்தை முன்கூட்டியே வாங்கி வீட்டில் பத்திரப்படுத்தி வைத்து, அமாவாசை தினத்தன்று இந்த பரிகாரத்தை செய்யலாம். அமாவாசை தினத்தன்று மட்டும் அந்த ஒரு ரூபாய் நாணயம் வெற்றிலையில் மடிக்கப்பட்டு, உங்களது பணப்பெட்டியில் இருக்க வேண்டும். அடுத்த நாள் அந்த வெற்றிலையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து விடலாம்.

வெற்றிலையை தூக்கி கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் பணப்பெட்டியிலேயே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு அமாவாசைக்கும் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து வெற்றிலையில் மடித்து பணப்பெட்டியில் வைத்துக்கொள்ள வேண்டும் அவ்வளவுதான். இதனால் என்ன நன்மை ஏற்படும். உங்களுடைய வீட்டில் பணம் சேராமல் இருப்பதற்கு கண்ணுக்குத்தெரியாத காரணம் எதுவாக இருந்தாலும் அந்த காரணத்தை தகர்த்தெரிய தெரியக் கூடிய சக்தி இந்த ஒரு ரூபாய் நாணயத்திற்கு உள்ளது. அந்த ஒரு ரூபாய் நாணயத்தோடு, வெற்றியைத் தரும் வெற்றிலையும் சேரும் போது அதனுடைய பலன் இரட்டிப்பாகும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக அமாவாசை தினத்தில் நமக்கு கெடுபலன்களை தரும் ராகுவின் அம்சம் குறைவாக இருப்பதால், அன்றைய தினம், பரிகாரத்தை செய்தால் அதனுடைய பலன் இரட்டிப்பாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.