உங்கள் வீட்டில் குலதெய்வம் தங்கி இருக்கிறதா ?? குலதெய்வம் வீட்டிற்குள் வந்துவிட்டது என்பதை உங்களால் தெரிந்துக் கொள்ள முடியும் இந்த பரிகாரத்தை செய்தால் !!

ஒரு சில பேரது வீட்டில் குலதெய்வ குறை இருக்கும். அதாவது குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்காமல் போனால், வீட்டில் சுப காரிய தடை உண்டாகும். குழந்தைபேறு தள்ளிப் போகும். நோய் நொடிகள் வந்து கொண்டே இருக்கும். தேவையில்லாத பல சண்டை சச்சரவுகள் வரும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. குறிப்பாக ரத்தசம்பந்தப்பட்ட உறவுகளுக்கு இடையே, கைகலப்பு வரை போகும் அளவிற்கு கூட பிரச்சனைகள் வரலாம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து ஒரு வீட்டில் இருக்கிறது என்றால், அந்த வீடு நிம்மதி இழந்து, களையிழந்து, ஒரு தீபம் ஏற்றி வைத்தால் கூட அந்த தீபம் பிரகாசமாக ஒளிர்ந்து, உங்கள் குடும்ப தலைவரின் ஜாதக கட்டத்தில் குலதெய்வத்தின் கோபமும் சாபமும் உள்ளது என்பதையும், உங்கள் வீட்டில் குலதெய்வம் வாசம் செய்யவில்லை என்றும், உங்கள் குடும்ப ஜோசியர் சொல்லி இருக்கலாம்.

எப்படியோ ஒரு வழியில் குலதெய்வத்தின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை என்பது தெரிந்திருந்தால், இந்த பரிகாரத்தின் மூலம் ஒன்பது வாரங்களில் குலதெய்வத்தின் ஆசீர்வாதத்தை உங்களால் பெற்றுவிட முடியும். அது என்ன பரிகாரம் என்பதை பற்றி இந்தப் பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளலாம். முதலில் 9 மட்டை தேங்காய்களை வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளவும். உறிக்காத தேங்காயை தான் மட்டைத் தேங்காய் என்று சொல்வார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் இந்த பரிகாரத்தை செய்யப் போகின்றோம். வழக்கமாக உங்கள் வீட்டில் செய்யும் வெள்ளிக்கிழமை பூஜையை முடித்துவிட்டு, காலை நேரம் என்றால், ஒன்பது மணி அளவில், நீங்கள் வாங்கிய வைத்திருக்கும் தேங்காயில் இருந்து ஒரு மட்டைத் தேங்காயை, பூஜை அறையில் வைத்து, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். ஓம் என் குலதெய்வம் வர வர ஓம் வம் வம் உம் உம் என் படி ஏறி வா வா என் குல தெய்வமே! வெள்ளிக்கிழமை பூஜை என்றால் கட்டாயம் உங்கள் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து இருந்தீர்கள்.

அந்த தீபத்தின் முன்பாகவே இந்த மந்திரத்தை உச்சரிப்பதால், தவறில்லை. காலை வேளையில் இதை செய்ய முடியாதவர்கள் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்யலாம். ஆனால் முதல் வாரம் காலையில் தொடங்கினால் தொடர்ந்து ஒன்பது வாரம் காலை நேரத்தில் மட்டும் தான் செய்ய வேண்டும். அதேபோல் மாலை நேரத்தில் தொடங்கினால், தொடர்ந்து ஒன்பது வாரங்கள் மாலை நேரத்தில் செய்ய வேண்டும் என்பது அவசியம். ஒவ்வொரு வாரம் முடியும்போது, அந்த மட்டை தேங்காயை எடுத்து ஒரு பையில் போட்டு பூஜை அறையிலேயே பத்திரமாக எடுத்து வைத்துவிடுங்கள். பிளாஸ்டிக் பையில் போட்டு தேங்காயை எடுத்து வைக்க வேண்டாம். தேங்காயின் மீது காற்று படும்படி எடுத்து வைக்க வேண்டும். 9 வாரமும் இதேபோல் பூஜை செய்து, மந்திரம் சொல்லி தேங்காய்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

9 வார முடிவில் அந்த தேங்காய்களை உறிந்து, தேங்காய்க்கு மஞ்சள் பூசி, 3 குங்குமப் பொட்டு வைத்து, உங்கள் குலதெய்வத்தை நினைத்து வேண்டிக்கொண்டு, குலதெய்வம் வீட்டிற்கு வர வேண்டும் என்று விநாயகர் கோவிலுக்கு சென்று அந்த ஒன்பது தேங்காயையும் சூறை விட்டுவிடுங்கள். இப்போது ஒன்பது வாரம் பரிகாரம் முடிந்துவிட்டது. வீடு ஒரு பிரகாசமாக இருப்பதை உங்களால் உணர முடியும். நீங்கள் ஏற்றிவைக்கும் தீபத்தில் ஒரு ஒளிச்சுடர் மின்னுவதை உங்களால் உணர முடியும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வீட்டில் இருள் நீங்கியது போல ஒரு சூழல் உண்டாகும். உங்கள் வீட்டில் நீங்கள் சுவாசிக்கும் அந்தக் காற்றில் கூட ஒரு வித்தியாசம் உங்களுக்கு தெரியும். குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு நீங்கள் உச்சரித்த மந்திரம், நிச்சயம் உங்களுடைய குலதெய்வத்தை உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து சேர்க்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்பிக்கை உள்ளவர்கள் இதை செய்து பார்க்கலாம். மட்டை தேங்காய் வாங்குவதை கடையில் பார்த்து வாங்கி கொள்ளவும் தேங்காய் கெட்டுப் போகக் கூடாது.