குழப்பமான சூழ்நிலையில் கூட சுலபமாக முடிவை எடுத்து விடலாம். கட்டை விரல் பயிற்சி !!

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் குழப்பமான சூழ்நிலை என்ற ஒன்று கட்டாயம் ஏற்படும். அந்த மன நிலைமையில் நம்மால் எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக எடுக்க முடியாது. மீறி முடிவு எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், குழப்பத்தில் எடுக்கப்படும் முடிவு பலசமயம் தவறில் தான் போய் முடியும். முதலில் குழப்பமான மனதை அமைதியான நிலைக்கு கொண்டு வரவேண்டும். அதன் பிறகு எடுக்கப்படும் முடிவே பெரும்பாலும் நல்ல முடிவாக இருக்கும். குழப்பமான சூழ்நிலையிலும் இருக்கும் மனதை, முதலில் எப்படி அமைதியான நிலைக்கு கொண்டு வருவது? ஒரு சுலபமான பயிற்சி உள்ளது. அதுதான் கட்டைவிரல் பயிற்சி. அதை எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா?

உங்கள் வீட்டிலேயே அமைதியான சூழ்நிலையில் ஒரு இடத்தில் அமர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் இடது கைகளில் இருக்கும் நான்கு விரல்களை மடித்துக்கொண்டு கட்டைவிரலை மட்டும் மேலே தூக்கியபடி வைத்துக் கொள்ள வேண்டும். Thums up சிம்பிள் என்று சொல்லுவார்கள் அல்லவா? மேலே காட்டப்பட்டிருக்கும் படத்தைப் போன்று.அதன்பின்பு உங்கள் வலது கையில் இருக்கும் கட்டை விரலையும், ஆள் காட்டி விரலையும் உபயோகப்படுத்தி, இடது கையின் கட்டை விரலில், நகத்திற்கு முன்பக்கம் பின்பக்கமாக அழுத்தி விடவும். லேசாக அழுத்தவேண்டும். ஐந்து முறை தொடர்ந்து இப்படி அழுத்தம் கொடுத்து விரல்களை எடுக்க வேண்டும்.

அதன்பின்பு கட்டை விரலின் இரண்டு பக்கங்களிலும், ஒரு இருபது விநாடிகள்(20 seconds) அழுத்தம் கொடுக்க வேண்டும். ‘முதலில் கட்டை விரலின் நகத்திற்கு முன்பக்கம் பின்பக்கம் விரல்களை வைத்து அழுத்தம் கொடுக்கவேண்டும். இரண்டாவதாக நகங்களில் இரண்டு பக்கத்திலும் வைத்து அழுந்தம் கொடுக்க வேண்டும்.’இந்த பயிற்சியினை மொத்தமாகவே நீங்கள் ஒரு நிமிடத்திற்குள் முடித்துவிட வேண்டும். அவ்வளவுதான். உங்களது மனது லேசாவதை நீங்களே உணர்வீர்கள். தினமும் இந்த பயிற்சியை செய்து வரவேண்டும். பிரச்சனை வந்தால் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. உங்களது எண்ணங்கள் நேர்மறையாக மாறுவதற்கு இது ஒரு நல்ல பயிற்சி. தொடர்ந்து இந்தப் பயிற்சியை செய்து வர உற்சாகமான மனநிலையை பெறுவதை நீங்களே காலப்போக்கில் உணர்வீர்கள்.

இதோடு சேர்த்து நீங்கள் நினைத்த காரியத்தை நிறைவேற்றக்கூடிய (Buddhi Mudra) பூதி முத்திரையைப் பற்றியும் தெரிந்துகொள்வோம். நம்முடைய லட்சியத்திற்கு தடையாக இருக்கும் எல்லாவகையான இன்னல்களையும் தீர்க்கக் கூடியதுதான் இந்த முத்திரை. தினந்தோறும் காலை எழுந்தவுடன் பத்து நிமிடம் இந்த முத்திரையை உங்கள் கைகளில் வைத்துக்கொண்டு, கண்களை மூடி தியானம் செய்வது நல்ல பலனைத் தரும். அதுமட்டுமல்லாமல் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இந்த முத்திரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எதையும் சாதிக்கும் மனதைரியத்தை நமக்கு நாமே கொண்டு வரவேண்டும் என்றால் இப்படிப்பட்ட சில பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம், நாம் நினைத்த இலக்கினை சுலபமாக அடைந்து விடலாம்.