குழப்பமான மனநிலையிலுள்ள பெண்கள் இந்த மூன்று வேலையையும் முதல் தடவை செய்யும் போது தவறாக தான் செய்வார்கள் !!

குழப்பம் என்ற ஒன்று யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்ப தலைவி எப்போதுமே தெளிவாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரு நியதி. அதாவது குடும்பத் தலைவிக்கு குழப்பம் ஏற்படவே ஏற்படாதா? அவர்கள் மட்டும் மனித பிறவி இல்லையா? எப்போதும் தெளிவான மனநிலையில் இருக்க குடும்பத் தலைவிகள் என்ன கடவுளா? என்றெல்லாம் பல பேர் பல கேள்விகளை எழுப்பினாலும், எப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையையும், முடிந்தவரை சுலபமாக ஒரு தீர்வுக்கு கொண்டுவர வேண்டியதுதான் குடும்பத் தலைவியின் பொறுப்பு. இப்படியிருக்க குறிப்பிட்ட இந்த மூன்று வேலைகளை எந்த ஒரு குடும்பத்தலைவி, சிக்கல் இல்லாமல், மன குழப்பம் இல்லாமல் தெளிவாக செய்கிறார்களோ, அவர்கள் மனம் கண்டிப்பாக அவ்வளவு எளிதில் குழப்பம் அடையாது. குழப்பம் அடைந்தாலும் அந்த குழப்பத்திலிருந்து சுலபமாக வெளிவரும் திறன் இவர்களிடம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

அந்த குறிப்பிட்ட மூன்று வேலை என்ன என்பதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? எல்லோருக்கும் தெரியும். இதிலுள்ள சூட்சமத்தை இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டால் நம்மை இன்னும் பிரகாசமாக்கி கொள்ளலாம் அல்லவா? அதற்காகத்தான் இந்த பதிவு. காலையில் வாசலில் பெண்கள் போடும் கோலம். சில பெண்கள் சிக்கலான கோலத்தை கூட ஒரு நொடிப்பொழுதில் சுலபமாக தவறில்லாமல் போட்டுவிடுவார்கள். சில பெண்கள் சின்ன கோலம் போட்டாலும், அதை நான்கு முறை அழித்து அழித்து திருத்தம் செய்து போடுவார்கள். முடிந்தவரை கோலத்தை அழிக்காமல் ஒரே முறையில் போடுவது தான் சரியான முறை. எந்த ஒரு பெண் கூர்மையான புத்தி திறனோடு கோலத்தை திறமையாக போடுகிறாளோ, அவளுக்கு கட்டாயம் மன குழப்பம் இருக்காது. கோலம் போடுவதில் தடுமாற்றம் இருந்தால் முடிவு எடுப்பதிலும் கட்டாயம் தடுமாற்றம் இருக்கும். இரண்டாவதாக தலை சீவுவது. குடும்ப பெண்ணாக இருந்தாலும், திருமணம் ஆகாத பெண்ணாக இருந்தாலும் சரி. ஒரு பெண் தலையை ஒரு முறையில் சீவி, சரி செய்து விட வேண்டும்.

இப்படி சீவலாமா! அப்படி சீவலாமா! இப்படி அழகு படுத்திக் கொள்ளலாமா! அப்படி அழகுபடுத்திக் கொள்ளலாமா! என்ற யோசனையில் நன்றாக வாரிய தலையை கூட அவிழ்த்து அவிழ்த்து திரும்பத் திரும்ப மாறிக்கொண்டே இருப்பவர்களின் மனநிலைமையானது என்றுமே நிலையாக இருக்காது. அழகாக அலங்காரம் பண்ணி தலை சீவ கூடாது என்று சொல்லவில்லை. அதை திரும்பத் திரும்ப அவிழ்த்து கலைத்து, சீவ கூடாது என்ற கருத்து தான் முன் வைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட ஒரு வேலையை செய்யும் ஒரு பெண்ணின் மனம், குழப்பத்தில் தான் கட்டாயம் இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மூன்றாவது பெண்கள் நெற்றியில் இட்டுக்கொள்ளும் பொட்டு. எந்த ஒரு பெண், கையில் நடுக்கமும் இல்லாமல், நடு நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்கிறாளோ அந்த, பெண்ணுக்கு மன குழப்பம் இருக்காது. சில பெண்கள் நெற்றியில் வைத்த பொட்டை, இந்தப்பக்கம் கொஞ்சம் சரி செய்வார்கள். அந்தப் பக்கம் கொஞ்சம் சரி செய்வார்கள். இல்லை என்றால் அதை கலைத்துவிட்டு மறுபடியும் இட்டுக் கொள்வார்கள் பொட்டை எக்காரணத்தைக் கொண்டும் வைத்து விட்டு திரும்பவும் கலைத்து இடுவது நல்ல பழக்கமல்ல.

இப்படி பொட்டு வைப்பதில் நிலையான ஒரு தீர்வை காண முடியாத பெண்ணால் எப்படிப்பட்ட குழப்பமான முடிவெடுக்கும் ஒரு தெளிவான தீர்வினை காண முடியாது. இந்த மூன்று விஷயங்களும், பார்க்கப் போனால் சாதாரண விஷயங்கள் தான். ஆனால் இதில் அடங்கி இருக்கும் பின்னணி சூட்சமம் தான் சற்று ஆழமானது. சிந்தித்து பார்த்தீர்களென்றால் உங்களுடைய மன வலிமைக்கும், மேற்குறிப்பிட்டுள்ள இந்த மூன்று விதிமுறைகளுக்கும் கட்டாயம் தொடர்பு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த மூன்று விஷயங்களையும் சரியாக செய்யும் பெண், குழப்பமில்லாத மனநிலையை கட்டாயம் பெற்றிருப்பாள். உங்களுக்கும் குழப்பமில்லாத தெளிவான முடிவு எடுக்கும் திறன் வேண்டும் என்றால், இந்த மூன்று வேலைகளையும் குழப்பம் இல்லாமல், முதல் தடவையிலேயே சரியாக செய்ய கற்றுக்கொள்ளுங்கள். தானாகவே மாறி விடுவீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம். மேற்குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் குடும்ப தலைவிக்கு மட்டுமல்ல. திருமணமாகாத பெண்ணாக இருந்தாலும், எப்போதுமே தெளிவான மனநிலையில் இருக்க வேண்டியது மிக அவசியம்.