கெட்ட எண்ணத்தோடு உங்களை யார் பார்த்தாலும், அந்த திருஷ்டி, எதிர்மறை ஆற்றல், சாபம், பெருமூச்சு, எதுவுமே உங்களை தாக்காது !! இதை மட்டும் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள் !!

பொதுவாகவே, நன்றாக செல்வ செழிப்போடு வாழும் ஒரு மனிதன், இந்த ஊர் உலகத்தினுடைய கண்களில் இருந்து பாதுகாப்பாக தப்பிப்பது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயம் என்றே சொல்லலாம். ‘நமக்கு ஒரு கண்ணு போச்சுன்னா, அடுத்தவங்களுக்கு ரெண்டு கண்ணும் போகணும்னு’ நினைக்கிறவங்க தான் இன்னைக்கு நிறைய பேர் இருக்காங்க! இப்படிப்பட்ட கெட்ட எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து, இந்த உலகத்தில் நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் தான், வாம் இப்போது இருக்கின்றோம். ஒரேயடியாக, எல்லோரையும் கெட்ட எண்ணம் பிடித்தவர்கள் என்று நாம் ஒதுக்கி விட முடியாது. சில பேரெல்லாம், ‘நாம் தான் நன்றாக இல்லை, அடுத்தவர்களாவது சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கட்டும்’, என்று பெருந்தன்மையோடு ஆசிர்வாதம் செய்பவர்கள், இன்றளவும் நிறையபேர் இருக்கிறார்கள் என்பதையும் இந்த இடத்தில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சரி, இப்ப நீங்க நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் பொறாமை எண்ணம் கொண்டவர்கள், கெட்ட புத்தி உடையவர்கள், உங்களைப் பார்த்து பெருமூச்சு விடுபவர்கள், தேவையே இல்லாமல், உங்களை திட்டி சாபம் கொடுப்பவர்கள். இவர்களிடம் இருந்தெல்லாம், உங்களை எப்படி பாதுகாத்துக் கொள்ள போகிறார்கள் என்பதைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பொதுவாகவே, வாசனை மிகுந்த இடத்தில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். எதிர்மறை எண்ணங்களால், கட்டாயம் வாசனை மிகுந்த இடத்தில் இருக்கவே முடியாது. குறிப்பாக மகாலட்சுமிக்கு பிடித்த வாசனை நிறைந்த பொருட்கள் இருக்கும் இடத்தில், எந்த ஒரு கெட்ட சக்தியும், எந்த ஒரு கெட்ட எண்ணமும், யாருடைய சாபமும் தாக்காது என்று சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.அந்த வரிசையில், மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்த அரகஜா, கோரோசனை, ஜவ்வாது பவுடர், பச்சைக்கற்பூரம் இந்த நான்கு பொருட்களை வைத்து தான், நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள, திலகத்தை தயார் செய்யப் போகின்றோம்.

இந்தப் பொருட்கள் எல்லாமே டிபார்ட்மென்டல் ஸ்டோரில் பவுடராகவும், பேஸ்டாகவும் நமக்கு கிடைக்கிறது. உங்களுக்கு எப்படித் தேவையோ அப்படி வாங்கி உங்கள் வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள். உலர்ந்த ஒரு சிறிய கிண்ணத்தில், அரகஜ கொஞ்சம், கோரோசனை பவுடர் கொஞ்சம், ஜவ்வாது கொஞ்சம் பச்சை கற்பூரம் கொஞ்சம், பச்சை கற்பூரத்தை மட்டும் உங்களது கையால் நன்றாக தூள் செய்து போட்டு குழைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். இந்த பொருட்கள் எல்லாம் சேர்ந்த கலவையை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து மூடி போட்டு பூஜை அறையில் வைத்து விடுங்கள். தினம்தோறும் வெளியில் செல்லும்போது, உங்கள் நெற்றியில், கொஞ்சமாக இந்த திலகத்தை, இட்டுக் கொண்டாலே போதும். இதனுடைய நிறம் வித்தியாசமாக இருக்கும்.

உங்கள் நெற்றியில் இதை ஏன் வைத்திருக்கிறீர்கள்? என்று எல்லோரும் கேட்பார்கள், என்று நீங்கள் நினைத்தால், இந்த திலகத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு, அதற்குமேல் விபூதியையோ, குங்குமத்தையோ வைத்துக்கொள்ளுங்கள். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆக மொத்தத்தில், இந்த திலகம் உங்கள் நெற்றியில் இருந்தால், எந்த ஒரு எதிர்மறை ஆற்றலும் உங்களை கட்டாயம் தாக்காது. பிறந்த குழந்தையிலிருந்து, பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் வரை, அலுவலகத்துக்கு செல்லும் ஆண்கலிருந்து, வீட்டில் இருக்கும் குடும்ப பெண்கள் வரை, இதை தாராளமாகப் பயன்படுத்தலாம். எந்த ஒரு தவறும் கிடையாது. இதோடு மட்டுமல்லாமல் இந்த வாசனை நிறைந்த பொருளை உங்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது, நீங்கள் லட்சுமி கடாட்சம் நிறைந்த, வசீகரம் நிறைந்த, கலையான முகத்தைக் கொண்ட மனிதராக தோற்றம் கொள்வீர்கள் என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.