கெட்ட கனவுகள் வருவதற்கும் இரவில் சரியான தூக்கம் இல்லாமல் விழித்திருபதற்கும், நம் வீட்டில் செய்யும் இந்த தவறும் ஒரு காரணம் தான் !!

சில பேர் இரவு நேரத்தில் படுத்த உடனேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விடுவார்கள். அதற்கு முதல் காரணம், அவர்கள் மனதில் நிம்மதி இருக்கும், உடல் உழைப்பு அதிகமாக இருக்கும். நிறைய பேருக்கு என்னதான் உடல் உழைப்பு இருந்தாலும், இரவு நேரத்தில் சரியான தூக்கம் இருக்காது. மன நிம்மதி இருந்தாலும், கெட்ட கனவுகள் வந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கும். இதற்கு என்ன காரணம்? கெட்ட கனவு வராமல் நிம்மதியான தூக்கத்தைப் பெற என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் கெட்ட கனவு வருவதற்கு நம்முடைய படுக்கை அறையில் நான் செய்யும் தவறுகளை தெரிந்து கொள்வோம். சில பேர் வீடுகளில் படுக்கை அறையின் மேல் விரித்திருக்கும் விரிப்புகளை ஒரு மாதம் ஆனால் கூட துவைக்காமல் இருப்பார்கள்.

கட்டிலானது ஒரு மூலையில் சுவரை ஒட்டி இருக்கும். அந்த கட்டிலையும் நகத்தி சுத்தம் செய்யவே மாட்டார்கள். கட்டிலுக்கு அடியில் ஒட்டடை பிடித்து, சிலந்திக் கூடு கட்டியிருக்கும். நாம் படுக்கின்ற இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளாவிட்டாலும் கூட, நமக்கு இரவில் நல்ல தூக்கம் வராது. கெட்ட கனவுகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. தூசு தும்புகள், ஒட்டடைகளில் எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். அது நம்மை நிம்மதியாக தூங்க விடாது. இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் படுக்கை விரிப்புகளையும், தலையணை உறைகளையும் துவைத்து பயன் படுத்த வேண்டும் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். முடிந்தால் பெட்டுக்கு அடியில் பூச்சி உருண்டை என்று சொல்லக்கூடிய ரச கற்பூரத்தை போட்டு வாசமாக வைத்துக்கொள்வது மேலும் நல்ல உறக்கத்தைக் கொடுக்கும். மாதத்தில் ஒரு முறையாவது கட்டில்களை நகர்த்தி அதன் அடியில் இருக்கும் தூசு தும்புகள், ஒட்டடைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

எப்போதுமே மூலையில் தள்ளி வைத்த படி கட்டில் இருக்கக் கூடாது. உடனே பாயில் படுத்து உறங்குபவர்கள் தூக்கம் வரவில்லை என்று சொல்லுவார்கள். பாயில் படுத்து உறங்கினாலும் இதே முறைதான். அந்த பாயை தரையில் போட்டு படுகின்றோம். வாரத்திற்கு ஒரு முறையாவது அதை துவைத்து வெயிலில் காய வைத்து மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். சரி, இவ்வளவு சுத்தம் செய்து படுத்தும் உங்களுக்கு தூக்கம் வரவில்லையா? இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். பொதுவாக கெட்ட கனவு வருகிறது, தூக்கம் வரவில்லை என்றால் ஒரு பாத்திரத்தில் கல்லுப்பு நிரப்பி தலைமாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். இது நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.

இந்த உப்பை கண்ணாடி பௌலிலோ அல்லது வேறு ஏதாவது டம்ளரிலோ கொட்டி தலைமாட்டில் வைப்பதற்கு பதிலாக உங்களுடைய வீட்டில், ஆழாக்கு, அரைபடி என்று சொல்லக்கூடிய அளப்பதற்கு பயன்படுத்தக் கூடிய பொருட்கள் இருக்கும் அல்லவா? அந்த ஆழாக்கில் முழுவதுமாக உப்பை நிறப்பி அந்த உப்புக்கு மேல் இரண்டு துண்டு சாதாரண கற்பூரத்தை வைத்து, அதில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து, அதன் பின்பு அதை உங்களது தலைமாட்டில் வைத்து படுத்து உறங்குங்கள். 2 நாட்களுக்கு அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை இந்த உப்பை மாற்றினால் போதும். அந்த உப்பின் மேல் இருக்கும் கற்பூரத்தையும், எலுமிச்சை பழத்தையும் கால் படாத இடங்களில் போட்டுவிடலாம். தொடர்ந்து 15 நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு, 3 நாட்களுக்கு ஒருமுறை உப்பை தண்ணீரில் கரைத்து விட்டு, மீண்டும் புதியதாக வைத்து படுக்கின்ற இடத்தில், வைத்து தூங்கி பாருங்கள். எதிர்மறை ஆற்றல்களின் சக்தி குறைந்து உங்களுக்கு நன்றாகத் தூக்கம் வரும். இதுதவிர கெட்ட கனவுகள் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.