கெட்ட சக்திகளிடமிருந்து தப்பித்துக்கொள்ள 48 நாட்கள் அம்மனை நினைத்து இந்த பூஜையை செய்தாலே போதும் !! செய்வினை கூட நம்மை நெருங்காது !!

நமக்கு இருப்பதோ ஒரே ஒரு வாழ்க்கை! இந்த வாழ்க்கையில் எத்தனை போட்டிகள், எத்தனை பெருமைகள். நீ பெரியவனா, நான் பெரியவனா, என்ற ஏற்றத் தாழ்வில் தான் பிரச்சனையே ஆரம்பிக்கின்றது. அந்த பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, தேவையில்லாத எண்ணங்களை தூண்டி, அடுத்தவர்கள் நன்றாக வாழக்கூடாது, தனக்கு சரிசமமாக போட்டி போடுபவர்கள், முன்னேறி விடவே கூடாது, என்பதற்காக ஏவி விடப்படும் கெட்ட சக்திகள், எதிர்மறை ஆற்றல் தான், பில்லி, சூனியம் போன்ற பிரச்சினைகளாக உருமாறி, ஒருவரை காயப்படுத்துகிறது. ஒருவருக்கு செய்வினை, பில்லி, சூனியம் இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது? அப்படி எதிர்மறை ஆற்றல் உங்களையோ உங்கள் வீட்டையோ தாக்கி இருந்தால் அதற்கான சுலபமான பரிகாரத்தை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பிரச்சினை இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த குடும்பத்தில், பிரச்சினைகள் தலைவிரித்தாடும். ஆனால், காரண காரியமே தெரியாது.

சில பேருக்குப் தலையின் பின்பக்கம் புடதியில் வலி இருக்கும்‌, எரிச்சல் இருக்கும். கை கால் வலி உடல் எரிச்சல் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து இருக்கும். மருத்துவரை அணுகினால் மருந்து சாப்பிட்டாலும், பலன் இருக்காது. சாப்பிட்ட சாப்பாட்டால் ஜீரணம் ஆகாது. அடிக்கடி வாந்தி இருக்கும். உடலில் இருக்கும் ரத்தம் சுண்டி விடும். இப்படிப்பட்ட உடல் உபாதைகள் இருந்தாலும், அது எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தால் கூட இருக்கலாம்.அதாவது இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கு முதலில் மருத்துவரை அணுகவேண்டும். மருத்துவரை அணுகி பலன் இல்லை எனும் பட்சத்தில் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள, குடும்ப ஜோசியர் அல்லது தாந்திரீகர்களை அணுகலாம். இதில் எதுவுமே விருப்பம் இல்லை என்றால், அம்மனை நினைத்து அந்த ஆண்டவனின் மேல் பாரத்தை போட்டு விட்டு இந்த பூஜையை செய்து விடுங்கள். உங்களுடைய வீட்டில் துர்க்கை அம்மனின் படம் இருந்தால், அந்த படத்தை, இந்த பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால் உங்கள் வீட்டில் எந்த அம்மனின் திருவுருவ படம் இருக்கின்றதோ, அதற்கு இந்த பூஜையை செய்து கொள்ளுங்கள். கட்டாயம் இந்த பூஜைக்கு சிவப்பு நிற மலர்கள் தான் தேவை. அரளி பூவை எடுத்துக் கொள்ளலாம். சிவப்பு செம்பருத்திப்பூவை எடுத்து கொள்ளலாம்.

உங்களுக்கு சிவப்பு நிறப்பூக்கள் கிடைக்காத பட்சத்தில், வெள்ளை நிறத்தில் இருக்கும் மல்லி பூவை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். குங்குமத்தை பன்னீரில் குழைத்து லேசாக அந்த வெள்ளை புஷ்பத்தின் மேல் தெளித்து விட்டு, அதன் பின்பு அர்ச்சனைக்கு அந்த பூவை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் திருவுருவ படத்திற்கு, ஒவ்வொரு பூக்களாக எடுத்துப் பூஜை செய்ய வேண்டும். மொத்தமாக 108 பூக்கள் தேவை. ‘ஓம் துர்க்கா தேவியே நமஹ’ இந்த மந்திரத்தை உச்சரித்து உங்கள் வீட்டில் இருக்கும் அம்மனின் படத்திற்கு பூஜை செய்து வாருங்கள். பூஜை முடிந்த பின்பு அம்மனுக்கு உங்களால் முடிந்த நிவேதனத்தை படைத்து தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த பூஜையை இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் செய்து விட வேண்டும். பூஜை நிறைவடையும் 48வது நாள், தேங்காய் எலுமிச்சை பழம் இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி உங்களது தலையை சுற்றி, முடிந்தால் முச்சந்திக்கு கொண்டு போய் அடைத்து விடுங்கள். இல்லை என்றால் உங்கள் வீட்டு வாசல்படியின் வெளி பக்கத்தில், உடைத்துக் கொள்ளலாம். உங்களைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அது உங்களை விட்டு நீங்கிவிடும் என்பதில் சந்தேகமே கிடையாது. உங்களுக்கு ஒரு மனநிறைவு ஏற்பட்டிருக்கும். பூஜை நிறைவடைந்த 48 நாட்களுக்கு பின்பு, துர்க்கை அம்மன் சன்னிதானம் இருக்கும் கோவிலுக்கு சென்று, துர்க்கை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து, எலுமிச்சை பழ மாலை அணிவித்து, நைவேத்தியமாக ஏதாவது பிரசாதம் வைத்து, குங்குமம் அர்ச்சனை செய்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினால் உங்களது வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேற்றத்தை அடையலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.