கெட்ட சக்தி வீட்டுக்குள் வராமல் பஞ்ச பூதங்களும் சேர்ந்து, உங்களுடைய வீட்டை பாதுகாக்கும் … இந்த பொருள் உங்கள், நில வாசப்படியில் இருந்தால் போதும் !!

நம்முடைய பூமி இயங்கிக் கொண்டிருப்பது பஞ்சபூதங்களின் சக்தியினால் தான். நம்முடைய உடல் இயங்கிக் கொண்டிருப்பது பஞ்சபூதங்களின் சக்தியினால் தான். பஞ்சபூதங்கள் இல்லை என்றால், இந்த உலகத்தில் எதுவுமே கிடையாது. பஞ்சபூதங்களின் ஆசிர்வாதத்தை முழுமையாக பெற்று விட்டோம் என்றால், நம்முடைய வாழ்க்கையும் சிறப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியாக இந்த உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும், இந்த பஞ்ச பூதங்களும் நம்முடைய வீட்டிற்கும், நம் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பாக அமைய வேண்டும் என்றால் நாம் என்ன செய்யவேண்டும்? என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நம்முடைய பாதுகாப்பு அரண் என்றால், அது நம் வீட்டின் நில வாசப்படி தான். நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றாலும், அந்த நல்லது நம் நில வாசற்படியை தாண்டி தான் உள்ளே வரவேண்டும்.

கெடுதல், நம்மை நெருங்க வேண்டும் என்றாலும், அது நம்முடைய நில வாசப்படியின் உள்ளே தான் நுழைந்து உள்ளே வர வேண்டும். இதனால் தான், நம்முடைய நில வாசப்படிக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. நம்முடைய குல தெய்வமும் நில வாசப்படியில் வசிப்பதாக சாஸ்திரம் சொல்கின்றது. இது பல பேருக்கு தெரிந்திருக்கும். நம்முடைய வாழ்க்கையில் இப்படிப்பட்ட பெரிய அங்கத்தை வகிக்கும், இந்த நில வாசப்படியில், பஞ்சபூதங்களும் காவலாக நின்றால், அது நமக்கும் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களை, பல வழிகளில் கொண்டு வந்து சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சபூதங்களுடைய சக்தியும் பஞ்சலோகத்தில் அடங்கியுள்ளது. கடைகளில் விற்கும் பஞ்சலோக நாணயங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து நாணயங்கள் அடங்கிய இந்த பஞ்சலோக நாணயம் போலியான தாக இருக்கக்கூடாது. வெள்ளிக்கிழமை அன்று காலையிலேயே எழுந்து, பிரம்ம முகூர்த்த வேளையில் குளித்து முடித்து, சுத்தமாகி விடுங்கள்.

வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு, அதன் பின்பு பஞ்சபூதங்களையும் நினைத்து, பிரார்த்தனை செய்துகொண்டு, குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் சாட்சியாக வைத்துக்கொண்டு, இந்த நாணயங்களை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சு போட்டு கட்டி, வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு, பிரம்ம முகூர்த்த வேலையிலேயே உங்களுடைய வீட்டு நிலை வாசல் படியில் மேல் இந்த மஞ்சள் துணி கொண்ட முடிச்சை மாட்டி விட்டாலே போதும். தினம் தோறும் பூஜை அறையில் விளக்கேற்றி தூபம் காண்பிக்கும் போது, இந்த பஞ்சலோக முடிச்சுக்கும், ஒரு தூபத்தை காட்டி விடுங்கள். அவ்வளவு தான், உங்கள் வீடு பஞ்சலோக சக்திகளின், பஞ்சபூத பாதுகாப்பில் சென்றுவிடும். கெட்ட சக்தி உள்ளே நுழையாது. கெட்ட எண்ணம் கொண்டவர்கள் உள்ளே நுழைந்தாலும், அதன்மூலம் உங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. வாஸ்து தோஷத்தால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் இருந்தாலும், அதை சரி செய்யக் கூடிய சக்தி இந்த பஞ்சலோக நாணயத்திற்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை இருந்தால் ஒருமுறை நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!