கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் ப்ளீஸ்… என உருக்கமான வேண்டுகோள் விடுத்தார் அர்ச்சனாவின் மகள்..?

முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக வலம் வந்தார் அர்ச்சனா பிக்பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் 75 நாட் களுக்கும் அதிகமான நாட்கள் பிக் பாஸ் வீட்டில் தங்கியிருந்தார் அர்ச்சனா ரியோ அறந்தாங்கி நிஷா கேபி சோம் ஆகிய நால்வருடன் அன்பு கூட்டணி அமைத்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன இதையடுத்து ஒன்பதாவது போட்டியாளராக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் பலரும் அதை ட்ரோல் செய்வது வழக்கம் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களையும் செய்வார்கள் அதில் சிலர் தரம்தாழ்ந்த விமர்சனங்களையும் முன் வைக்கத் தவறுவதில்லை அப்படி அதிகப்படியாக தரம் தாழ்ந்த விமர்சனங்களை அர்ச்சனா மீது வைத்துக் கொண்டிருந்தனர் இதனால் அர்ச்சனா ட்விட்டரில் இருந்து கொஞ்ச நாட்கள் விலகி இருப்பதாக அறிவித்தார்.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பிக்பாஸ் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் அதில் தனது மகளுடன் கலந்து கொண்ட அர்ச்சனா தன் மகளுடன் நடனமாடினார் பின்னர் பேசிய அர்ச்சனாவின் மகள் சாரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர்கள் பலரை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தார்கள்.

தயவுசெய்து அப்படி யாரும் செய்யாதீர்கள் எங்களது தலைமுறைக்கு அது வேண்டாம் அம்மா நிகழ்ச்சியில் இருந்தபோது அவருக்கு ஆதரவளித்து அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி என்று கூறினார் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் சாரா பேச்சிக்கு எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார் அதனைத் தொடர்ந்து ஆரி கூறியதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தரம் தாழ்ந்த விமர்சன பதிவுகள் தவிர்க்கக் கூடியது என்று சாராவை பாராட்டினார்.