கேபிகிட்ட வந்த உணர்வு ஷிவானியிடம் வரவில்லை….? அந்தர் பல்டி அடித்த பாலாஜி ….

நடந்து முடிந்த பிக்பாஸ் போட்டியில் முதலிடம் பிடித்தார் என்பது அனைவரும் அறிந்ததே அதைத்தொடர்ந்து பாலா அளித்துள்ள பேட்டியில் உள்ளே நுழைந்தவுடன் எனக்கு முதலில் பழக்கமானவர் கேப்ரில்லா தான் ஆனால் தங்களுக்குள் என்ன நடந்தது ஷிவானி எப்படி நெருக்காமானார் என்பதை அவரே தற்போது கூறியிருக்கிறார்.பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு காதல் கதை இடம் பெற்று இருக்க வேண்டும்.

முதல் சீசனில் ஓவியா ஆரவ் இரண்டாவது சீசனில் மகத் யாஷிகா மூன்றாவது சீஸனில் அபிராமி முகேன் கவின் லாஸ்யா தர்ஷன் ஷெரின் என்று பல காதல் கதைகள் ஓடியது அதனால்தான் அந்த சீசன் மிகப் பெரிய வெற்றி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல தான் இந்த சீசன் ஆரம்பத்தில் பாலாஜி மற்றும் கேபி இருவருக்கும் காதல் இருப்பது போல காண்பிக்கப்பட்டது ஆனால் அது எதுவும் சரியாக வரவில்லை மேலும் ஷிவானி பாலா காதல் கதை யும் சரியாக செல்லவில்லை.

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாலாஜி இடம் ஷிவானி மீது காதலா என்று கேட்கப்பட்டதற்கு பாலாஜி அளித்த பதில் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு நாள் காலையில் எழுந்ததும் நான் சோகமாக அமர்ந்து கொண்டு இருந்தேன் அப்போது அங்கிருந்த யாருமே என்கிட்ட சரியா பேசல ஏன் எதுவும் கூட கேட்கல ஷிவானி தான் வந்து அக்கறையா என்கிட்ட பேசுனாங்க அந்த அக்கறை எனக்குப் பிடிச்சுப் போகிதான் ஷிவானியிடம் பழக ஆரம்பித்தேன் ஷிவானி போலவே கேபியும் என் மேல பாசமா தான் இருந்தாங்க.

ஆனா அவங்ககிட்ட எனக்கு ஒரு தங்கச்சி பீல் இருந்தது ஆனால் அதே ஷிவானியிடம் எனக்கு தங்கச்சி பீல் வரல அவ்ளோ தான் சொல்வேன் மத்த படி கண்டண்ட்டுக்காக ஷிவானியிடம் பழகுகிறேன் என்றெல்லாம் என்ன பத்தி எதிர்மறையாக பேசுறவங்க சொல்றது என்று கூறியிருக்கிறார் பாலாஜி முருகதாஸ்.