கேப்டன் பண்ட் அதிரடிக்கு தயாராக இருக்கிறார் !! வலைபயிற்ச்சியில் பந்துகளை பறக்க விடும் வீடியோ வைரல் !!

டெல்லி கேப்பிடல்ஸ் அணி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பதிவிட்டு உள்ளது அதில் ரிஷப் பண்ட் பந்துகளை நாலாபுறமும் சிதறடிக்கும் வீடியோ காட்சியாகும் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆனா ரிஷப் பண்ட் இப்பொழுது டெல்லி அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காயம் காரணமாக வெளியேறிய காரணத்தால் ரிஷப் பண்ட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார் கேப்டனாக தனது முதல் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறார் ரிஷப் பண்ட் .

முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் சரியான பார்மில் இருந்தார் கேப்டனாக தனது முதல் போட்டியை தனது குருநாதரான எம்எஸ் தோனிக்கு எதிராகவே விளையாடுவதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி எனவும் அதில் இருந்து நிறைய கற்றுக் கொள்வேன் எனவும் கூறினார்.