கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போகிறதா ?? அப்படின்னா இந்த இரண்டு பொருள் இருந்தால் வெற்றி நிச்சயம் உங்களுக்குதான் …

ஒரு சிலருக்கு வாழ்க்கையில என்ன தான் செய்தாலும் வெற்றி என்பது எட்டாக்கனியாக இருக்கும். கைக்கு வந்தது வாய்க்கு எட்டாமல் போய்விடும் என்ற பழமொழி இவர்களுக்குத் தான் சரியாக பொருந்தி இருக்கும். கை வரை வந்து விட்டு அந்த வெற்றி கனியை நாம் வாயால் ருசிக்க முடியாமல் போனால் எவ்வளவு ஏமாற்றமாக இருக்கும்? ஆன்மீகத்தை பொறுத்தவரை ஒரு சில பொருட்களுக்கு வசிய தன்மை உண்டு. இதை மாந்திரீக மற்றும் தாந்திரீக காரியங்களுக்கு பயன்படுத்துவார்கள். அதே உத்தியை சுலபமான முறையில் நாம் எப்படி கையாண்டு வெற்றி பெறுவது என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கின்றோம். இந்த விஷயம் எல்லா காரியங்களுக்கும் நாம் செய்து பார்க்கலாம். உதாரணத்திற்கு ஒரு சிலருக்கு, தொழில் செய்பவர்களாக அவர்கள் இருக்கலாம், அவர்களுக்கு வரும் புதிய வாய்ப்புகள் எல்லாம் வேறு ஒருவருக்கு தட்டி சென்று விடும். இதனால் இவர்களுக்கு வர வேண்டிய லாபம் வராமல் தடைபடும்.

வியாபாரம் செய்பவர்களும் அப்படித்தான் ஏதேனும் புதியதாக வாய்ப்புகளை பயன்படுத்துவதற்காக வெளியே செல்கிறோம் என்றால் அவர்களது மனமே இந்த வாய்ப்பு நமக்கு கிடைக்காது போல அறிகுறியாக சொல்லிவிடும். அது போன்ற சமயத்தில் இந்த உத்தியை கையாளலாம். மாணவர்கள், இளைஞர்கள், இளைஞிகள் என்று கல்வியை சார்ந்த விஷயங்களில் அவர்கள் புதிய சாதனைகள் படைக்க இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதற்குள் ஏதோ ஒரு பதற்றம், தடுமாற்றம் வரும். இந்த விஷயத்தில் நாம் சாதிப்போமா? ஜெயிப்போமா? என்கிற குழப்பமான மன நிலை உருவாகி இருக்கும். இது போன்று எந்த ஒரு புதிய செயல்கள் செய்வதாக இருந்தாலும் உங்கள் ஆழ் மனதிற்கு அந்த விஷயத்தில் நாம் வெற்றி அடைய மாட்டோம் என்கிற குழப்பமான மனநிலை உருவாகும் பொழுது இந்த யுக்தியை நீங்கள் தாராளமாக கையாண்டு பார்க்கலாம். அதற்கு உங்களுக்கு இரண்டு பொருட்கள் தேவைப்படும். அதில் பூண்டு மற்றும் கிராம்பு போன்றவை அடங்கும். 5 பூண்டுப் பற்கள் தோல் உரிக்காமல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

அதே போல் 5 கிராம்புகளை தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த பத்து பொருட்களையும் ஒரு வெள்ளை பேப்பரில் முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த பேப்பரில் அதற்கு முன்னர் பைரவரை வணங்கி விட்டு வெற்றி நிச்சயம் என்று எழுதிக் கொள்ளுங்கள். யாருக்கு வெற்றி கிடைக்க வேண்டுமோ அவர்கள் தான் இதை செய்ய வேண்டும். இதெல்லாம் ஒரு மன தைரியத்தை உண்டாக்கவும் மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுவதற்காகவும் கையாளும் யுக்திகள் தான். இதில் பெரியதாக மாயமும் ஒன்றுமில்லை, மந்திரமும் இல்லை. சிறு சிறு விஷயங்கள் நம் மனதை தன்னம்பிக்கை கொள்ள செய்யும். உதாரணத்திற்கு நமக்கு கடுமையான தலைவலி ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் நாம் ஒரு மருந்து சாப்பிடுகிறோம்.

மருந்து என்பது எப்பொழுதும் சாப்பிட்ட உடன் பலன் தராது. ஒரு மணி நேரமாவது ஆக வேண்டும். அப்போது தான் அது உள்ளே சென்று தன்னுடைய வேலைகளை காண்பிக்கும். ஆனால் சாப்பிட்ட உடனேயே சிலருக்கு தலைவலி சரியாகி விட்டதாக ஒரு எண்ணம் தோன்றும். இப்ப பரவாயில்லை என்பது போல் இருக்கும். அதற்கு காரணம் என்ன தெரியுமா? நம் மனம் தான். நாம் என்ன நினைக்கிறோமோ! அது தான் நடக்கும். நம் ஆழ் மனம் எதை சரி என்று நம்புகிறதோ! அதைத் தான் அடையப் போகிறது. பைரவரை வணங்கி விட்டு அந்த பேப்பரை உங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொள்ளுங்கள் அல்லது கைப்பை இருந்தால் அதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஐந்து நிமிடம் நாம் தான் ஜெயிக்க இருக்கிறோம் என்று மனதில் கற்பனை செய்து கொண்டு, ‘ஓம் பைரவாய நம’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும். அதன் பின் நீங்கள் செய்ய இருக்கும் காரியத்திற்கு தைரியமாக புறப்படலாம். யார் நினைத்தாலும் உங்களை தடுக்க முடியாது. நீங்கள் தான் வெற்றியாளராக திரும்புவீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மறையாக நாம் சிந்திக்கும் பொழுது நேர்மறையான பதில்கள் தான் நமக்கு கிடைக்கும் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள் என்று கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.