கைமேல் பலனை கொடுக்க கூடிய நரசிம்ம வழிபாடும் சக்தி வாய்ந்த நெய்தீபமும் !! குழப்பமான பிரச்சினைகளுக்குக் கூட தெளிவான முடிவை தரும் வழிபாடு !!

பொதுவாகவே இறைவழிபாடு என்றால், அது கைமேல் பலன் கொடுக்கக்கூடிய வழிபாடுதான். இருப்பினும், நம்பிக்கையோடு நாம் செய்யக்கூடிய வழிபாட்டோடு சேர்த்து, அந்த இறைவனுக்கு உகந்த நைய்வேதியத்தை படைத்து முறையான வழிபாடு செய்தால், அதில் கிடைக்கக்கூடிய பலன்கள் என்பது, கணக்கில் அடங்காதவை. குறிப்பாக நரசிம்ம வழிபாட்டை எப்படி செய்தால் உடனடி பலன் கிடைக்கும் என்பதை பற்றியும், நரசிம்மருக்கு உகந்த நைய்வேதியம் எது என்பதை பற்றியும்தான், இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தர்மம் குறைந்து, அதர்மம் தலை விரித்தாடும் பட்சத்தில், அதர்மத்தை அழிக்க அவதரித்த கடவுள்களுல் நரசிம்மரும் ஒருவர். இன்றைய சூழ்நிலையில், கலியுகத்தில், அதர்மம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.

நம்மை நாமே காத்துக்கொள்ள, அதற்கான தெய்வங்களின் வரிசையில் இருக்கக்கூடிய நரசிம்மர் வழிபாடு மிகவும் சிறந்தது என்று சொல்லப்பட்டுள்ளது. அதர்மத்தை அழிப்பதற்காகவே, அவதரித்த தெய்வங்களை அதர்வண தெய்வங்கள் என்று கூறுவார்கள். சில பேர் வீடுகளில் நரசிம்மரின் திருவுருவப் படத்தை வைத்து வழிபடுவார்கள். சிலரின் வீடுகளில் நரசிம்மரின் உருவ படம் இருக்காது. பரவாயில்லை, நரசிம்மரை ஜோதி வடிவில் நம்மால் காண முடியும். உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, அதை நரசிம்மராக பாவித்து கூட, இந்த வழிபாட்டை நீங்கள் செய்யலாம். வெள்ளிக்கிழமை மாலை இந்த பூஜையைச் செய்வது அதிகப்படியான பலனை நமக்கு தேடித்தரும். நரசிம்மருக்கு உகந்த நைய்வேத்தியம் என்றால் அது அரவண பாயாசமும், பானகமும் தான்.

பானகம் என்றால், நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. அரவண பாயாசம் என்பது, ஒரு கப் உடைத்த அரிசியோடு, 2 கப் வெல்லக் கரைசலை ஊற்றி, சிறிதுநேரம் பாகு வரும் வரை காய்ச்சி, நெய் சேர்த்து செய்யும் நெய்வேதியத்தை அரவணப் பாயாசம் என்று சொல்லுவார்கள். சபரி மலையில் இருந்து வாங்கி வருவார்கள் அல்லவா? அரவணை பாயசத்தை! அதுதான். அதை நம் வீட்டிலேயே, நம் கையாலேயே செய்யப் போகின்றோம். இந்த நெய்வேத்தியத்தோடு சேர்த்து, அரளிப்பூ அல்லது பிச்சிப்பூ என்று சொல்லக்கூடிய இட்லி பூவை, நரசிம்மருக்கு சமர்ப்பிப்பது மிகவும் விசேஷமானது. உங்களுடைய வீட்டில் அம்மனின் திருவுருவ படம் இருந்தாலும், கூட பரவாயில்லை. அந்த அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்து, நைவேத்தியம் படைத்து, நரசிம்மரை மனதார வேண்டிக்கொண்டு, இந்த பூஜையை வாரம்தோறும் 3 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து செய்து வந்தால், உங்களுக்கு இருக்கக்கூடிய தீராத கஷ்டம் தீரும். மன உறுதியும், மன தைரியமும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

தீராத நோய்க்கு தீர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக, முடிவுக்கு வராமல் இருந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இந்த பூஜையை முடித்துவிட்டு, இந்த பிரசாதத்தை மற்றவர்களுக்கு தாராளமாக விநியோகம் செய்யலாம். நம்பிக்கையோடு நரசிம்மர் வழிபாட்டையும், அம்மன் வழிபாட்டையும், வரும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் செய்வது என்பது மேலும் சிறப்பினை தேடித்தரும். வாராஹி அம்மன், நரசிம்மர், கால பைரவர் போன்ற தெய்வங்களை வீட்டில் நினைத்து வழிபடுவது சரியா? தவறா? என்ற சந்தேகம் நம்மில் பல பேருக்கு உண்டு. எந்த தெய்வமும் நமக்கு கெடுதல் செய்வதற்காக அவதாரம் எடுக்கவில்லை. அதர்மங்களை அழிப்பதற்கு விஸ்வரூபம் எடுத்து, கோப நிலையிலுள்ள தெய்வங்களும், குழந்தை மனம் கொண்ட தெய்வங்கள் தான்! வேண்டிய வேண்டுதல்கள்களுக்கான வரத்தினை, சட்டென்று கொடுக்கக்கூடிய சக்தி, கோபத்தோடு அவதாரம் எடுத்த தெய்வங்களுக்கு உண்டு, என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.