கொடுமை செய்யும் மாமியாருக்கு கருட புராணத்தின் படி நரகத்தில் என்ன தண்டனை தெரியுமா ?? தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் !!

மாமியார் என்றாலே எப்போதும் ஒரு விவாதத்திற்கு உரிய கதாபாத்திரம் தான். இன்று பல குடும்பங்களில் தலைமை தாங்குபவர் பெண்களாக இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு சிறிது கர்வமும் அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு பெண் தன்னுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையையும் புரட்டிப் போட்டு வேறொரு பெண்ணாக தான் புகுந்த வீட்டிற்கு அடி எடுத்து வைக்கிறாள். அவளுக்கு இயற்கையாகவே அந்த சமயத்தில் நிறைய மன உளைச்சல்கள் இருக்கும். இருப்பினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சமாளித்து விடுவாள். ஆனால் சில சமயங்களில் மாமியார் மற்றும் கணவனால் அவள் நியாயமாக நடத்தப்படுவதில்லை. அது என்னவோ தெரியவில்லை? மருமகளாக இருக்கும் பெண்ணே தான் மாமியார் ஆகவும் மாறுகிறாள். ஆனால் போஸ்டிங் அப்டேட் ஆனவுடன் மாமியாருக்கு உண்டான திமிரும் கூடவே வந்து விடுகிறது. எத்தனை சீரியல்கள் எடுத்தாலும் அவர்கள் திரும்பிய பாடில்லை.

எல்லா வகையான மாமியாரையும் இங்கே குறிப்பிட்டு கூறவில்லை. ஒரு சில மாமியார்கள் உண்மையில் தங்கள் மருமகளை மகளாகவே பாவித்து அனுசரித்து செல்கின்றனர். ஆனால் பெரும்பாலான மாமியார்கள் அவ்வாறு இருக்க தவறுகிறார்கள். இதனால் குடும்பத்தில் எப்போதும் சண்டைகளும், சச்சரவுகளும் தலைதூக்கி நிற்கின்றன. நீங்கள் வயதாகும் போது, உங்களின் உடல்நிலை பாதிக்கப்படும் பொழுது உங்களை கவனிக்கும் பொறுப்பில் இருப்பது உங்களின் மகள் அல்ல! மருமகளே, என்பதை நீங்கள் எப்போது உணர்கிறீர்களோ அப்போது தான் உங்களின் தலைகனமும், அதிகார திமிரும் குறையும் என்று தோன்றுகிறது. இதில் கணவனாக நிற்பவன் தாய் மற்றும் தாரம் இவர்கள் இருவரையும் விட்டுக் கொடுக்காமல் அனுசரித்து செல்ல வேண்டிய நிலைமையில் மன இறுக்கத்திற்கு ஆளாகிறான். உங்கள் மகளுக்கு ஒரு அறிவுரை நீங்கள் கூற விரும்பினால் அதை உங்கள் மருமகளுக்கும் பொருந்துமா? என்பதை நிகர் செய்து நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். மகளை எப்படி அன்பும் கண்டிப்பும் கலந்த தொனியில் எச்சரிக்கிறார்களோ, அதே போல மருமகளையும் எச்சரியுங்கள்.

அதை விடுத்து அவளை எதிரி போல் பாவித்தால் இதனால் பாதிக்கப்படப் போவது நீங்களும், உங்கள் மகனும் தான் தவிர வேறு யாரும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றே வஞ்சக எண்ணத்துடன் மணமகள் வீட்டார் செய்த சில பிரச்சினைகளை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்க நினைக்கும் மாமியார்கள் இல்லை என்று கூறி விட முடியாது அல்லவா? அத்தகைய மாமியாருக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை கிடைக்கும் தெரியுமா? இத்தகைய தண்டனையை நீங்கள் அனுபவிப்பதற்கு சரியான மனமாற்றமே உங்களுக்கு நல்லது என்பதை வலியுறுத்த இங்கு கடமைப்பட்டிருக்கிறோம். வஞ்சக எண்ணத்துடன் மருமகளை கொடுமை படுத்தும் மாமியார்களுக்கு, அவர்கள் இறந்த பின் பிறவிகள் மீண்டும் மீண்டும் பல எடுப்பார்களாம். அதை அவர்களால் எந்த பூஜைகள் செய்தும் தடுத்து நிறுத்த முடியாதாம். அவர்கள் எடுக்கும் அடுத்த பிறவியில் அதிக வயது வரை உயிருடன் வாழ்வார்கள்.

தங்களுடைய வயோதிக காலத்தில் நோயுற்று உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்களாம். பெற்ற பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் உதாசீனப்படுத்தபட்டு, இந்த உயிரைப் பறித்துக் இறைவா? என்று இறைவனிடம் மன்றாடும் நிலைமை அவர்களுக்கு நிச்சயம் ஏற்படுமாம். ஆனால் அவர்களுக்கு நற்கதி கிடைக்காமல் அதிகம் துன்புறுவார்களாம். அவர்களின் அடுத்த அடுத்த பிறவிகளில் பிள்ளை பேறு இன்றி கோவில் கோவிலாக வேண்டிக் கொள்ளும் நிலைமையும் ஏற்படுமாம். உங்களால் அந்தப் பெண் விட்ட ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் மதிப்பு மிக்கவை. அதற்கான வினைப்பயனை நீங்கள் அனுபவித்தே தீர வேண்டும் என்பது தான் விதி. இது தெரியாமல் இன்று பலரும் மருமகளை மனுஷியாக கூட நினைக்காமல் பாடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைக் கேட்டு உடனே மருமகள்கள் சந்தோஷபடக் கூடாது. உங்களுக்கு உண்மையிலேயே அநியாயம் இழைக்கும் பொழுது நிச்சயம் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும். நீங்களும் அவர்களைப் போல் இல்லாமல் உங்களுடைய கடமைகளை கண்ணென கருதி சரியாக நிறைவேற்றி வாருங்கள். அது தான் உங்களை பெற்றவர்களுக்கு நீங்கள் வாங்கித் தரும் மரியாதையாக இருக்கும். அதை விடுத்து சரிக்கு சரியாக நின்று நீங்களும் உங்கள் மாமியாருடன் சண்டை செய்தால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை கிடைக்காமலே போய்விடும் என்பதை கூறி இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.