கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும், அதை அடைக்க 9 வாரங்களில் தீர்வு கிடைக்க வேண்டுமா ?? ஆஞ்சநேயர் பரிகாரம் !!

பலவிதமான கடன் பிரச்சினைகள் கழுத்தை நெரிக்க, பல விதமான பரிகாரங்கள் செய்தும் எந்த பலனும் இல்லை, என்று புலம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன செய்வது? வாழ்க்கையில் கடன் இல்லாமல் வாழ்வதுதான் பெரிய வரம். இந்த வரத்தை எத்தனை பேர் பெற்றுள்ளார்கள், என்று சிந்தித்தால் விரல்விட்டு எண்ணிவிடலாம். அவ்வளவு குறைவான மனிதர்கள் தான் கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்று சொன்னால் அது பொய் ஆகிவிடுமா? கடனை அடைக்க எத்தனை பரிகாரங்கள் செய்வது? எத்தனை போராட்டங்களை கடப்பது? கஷ்டப்படுவதற்க்கு மனதில் தெம்பும் இல்லை. அழுது புலம்ப கண்களில் கண்ணீரும் இல்லை. இப்படிப்பட்டவர்களின் கஷ்டத்தை தீர்ப்பதற்காகத் தான் இந்த பதிவு.

எதற்கும் அஞ்சா நெஞ்சம் படைத்தவர்தான் அஞ்சனை மைந்தன் ஆஞ்சநேயர். இவரை தொடர்ந்து ஒன்பது வாரங்கள் முறையாக வழிபடும்போது எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அதை அடைப்பதற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடும். இதோடு சேர்த்து ஒருவருக்கு செவ்வாய் கிரகம் வலுவாக இருக்க வேண்டும். எவர் ஒருவருக்கு செவ்வாயின் அருள் பரிபூரணமாக கிடைக்கின்றதோ, அவருக்கு கடன் தொல்லை இருக்காது என்று கூறுகிறது ஜோதிடம். செவ்வாயின் ஆசீர்வாதத்தை பெறவும், ஹனுமனின் அனுக்கிரகத்தை பெறவும், வடமாநிலத்தில் உள்ளவர்கள் இந்த முறையினை பின்பற்றி பயன் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணி, அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணி, இந்த நேரத்தில் பரிகாரத்தை செய்வது நல்ல பலனை தரும்.

தொடர்ந்து 9 வாரம் இந்தப் பரிகாரத்தை செய்து வர வேண்டும். குறிப்பாக சிவன் கோவில்களில், தூண்களில் இருக்கும் ஆஞ்சநேயருக்கு இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பான ஒன்று. பரிகாரத்திற்கு தேவையான பொருட்கள். தாம்பூலத் தட்டு, சிகப்பு துணி ஒன்று, 1 1/4 கிலோ வெல்லம், 1/5 கிலோ கருப்பு உளுந்து, நல்லெண்ணெய், நெய் தீபம். உங்கள் வீட்டில் இருக்கும் தாம்பூலத்தட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். தாம்பூலத்தட்டின் மேல் அனுமனுக்கு சாத்துவதற்கு சிகப்பு துணியை வைத்து, அதனுடன் வெல்லம், கருப்பு உளுந்து, நல்லெண்ணெய், இவை மூன்றும் கோவிலுக்கு தானமாக கொடுக்க வேண்டும். ஆஞ்சநேயருக்கு சிகப்பு வஸ்திரத்தை அணிவித்து, நீங்கள் வாங்கித் தந்த நல்லெண்ணையை காப்பாக ஆஞ்சநேயருக்கு அணிவிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை எல்லாம் ஆஞ்சநேயரின் சிலையை நீங்கள் கையால் தொட்டு செய்யக்கூடாது.

அந்த கோவிலில் இருக்கும் ப்ரோகிதரிடம் கொடுத்து விட்டால் போதும். அவர், ஆஞ்சநேயருக்கு சிகப்பு துணியை சாத்திய பின்பு, நெய் தீபம் ஒன்று ஏற்றி வைத்து, உங்கள் மனதார கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். ஆஞ்சநேயரின் முன்பு 5 நிமிடம் அமர்ந்து கண்களை மூடி தியானம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் வாங்கிச் சென்ற நல்லெண்ணெயை முழுமையாக கோவிலிலேயே கொடுத்துவிட வேண்டும். தாம்பூலத் தட்டை தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் கோவிலுக்கு தானமாக கொடுத்து விட்டு, திரும்பி வீட்டுக்கு வந்து விடுங்கள். ஒன்பது வாரம் தவறாமல் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. நம்பிக்கையோடு செய்து பாருங்கள் விரைவில் கைமேல் பலன் கிடைக்கும். ஆஞ்சநேயரை நம்பி செய்யப்படும் எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அதற்கு கூடுதல் சக்தி உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.