கோவிலில் திருமணம் செய்து கொண்டால் கணவன் மனைவி பிரிவு வராதா !! அதற்கு என்ன காரணம் என்று நீங்களும் கண்டிப்பாக தெரிஞ்சுக்கணுமா ??

கோவிலில் திருமணம் செய்து கொள்வதன் மூலம் தம்பதியர்களுக்கு மணவாழ்க்கையில் சிறப்பான நல்ல பலன்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஆனால் தற்போது இருக்கும் நவீன யுகத்தில் ஆடம்பரத்தை காரணமாக காட்டி கோவில்களில் திருமணம் செய்வதை தவிர்த்து விடுகிறார்கள். பெரிய பெரிய மண்டபங்களிலும், ஆடம்பரத்தை முன்னிறுத்தி செய்யும் திருமண ஏற்பாடுகளிலும் மண வாழ்க்கை அமைய போவதில்லை என்பதை எப்போது உணர்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. கோவில்களில் திருமணம் செய்வது எந்த அளவிற்கு நல்லது? ஏன் கட்டாயம் கோவில்களில் திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள். நீங்கள் திருமண முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது மணப்பெண் அல்லது மணமகனின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு ஜோதிடர்களை நாடி செல்வீர்கள்.

அவர்கள் அந்த ஜாதகத்தை ஆராய்ந்து மனப் பொருத்தத்தையும், தோஷ நிவர்த்திகளையும் பரிகாரமாக கூறுவார்கள். அதில் ஒரு சிலருக்கு இந்தக் கோவிலில், இந்த தெய்வத்தின் சன்னிதியில் மாங்கல்யம் கட்ட சொல்லி அறிவுறுத்தப்படுகிறது. அது ஏன் என்று தெரியுமா? ஒவ்வொரு ஜாதகத்திற்கும் அடுத்து அமைய இருக்கும் மீதி வாழ்க்கை திருமணத்தில் தான் அடங்கியுள்ளது. திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறி வைத்தது சாதாரண விஷயம் அல்ல. உங்களுடைய மண வாழ்க்கை இப்போது சரியாக அமையாவிடில், நீங்கள் சாகும் வரை அது உங்களுக்கு பிரச்சனை தான். ஏன் இந்த பிறவி எடுத்தோம்? என்கிற மனநிலை உருவாகிவிடும். ஏதோ உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறது, வேறு வழி இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு நீங்களே ஆறுதல் சொல்லிக் கொள்வீர்கள். அல்லது அந்த மண வாழ்வை முறித்து வேறொரு வாழ்வை நோக்கி செல்வீர்கள்.

அதுவும் சரியாக இருக்குமா என்று தெரிவதில்லை. இந்த நிலை ஏற்படாமல் இருப்பதற்கு உங்கள் ஜாதகத்திலேயே தீர்வும் உள்ளது. இப்போது பெரும்பாலான ஜோதிடர்கள் பணத்திற்காக ஏனோ தானோவென்று எதையாவது கூறி வைத்து விடுகிறார்கள். நல்ல ஜோதிடர்களை காண்பதே அரிதாகப் போய்விட்டது. இதனால் பலர் பேரின் மணவாழ்க்கை திருப்திகரமாக இருப்பதில்லை. இதில் தெய்வ சாட்சியாக கூட இல்லாமல், நாம் மண்டபத்தில் திருமணத்தை நடத்திக் கொள்வது எந்த அளவிற்கு சிறந்ததாக இருக்கும்? என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். நாகரீகம் அவ்வளவாக வளராத அந்த காலத்திலும் கூட பெரும்பாலான திருமணங்கள் இறைவன் சாட்சியாக இறைவனின் சந்நிதானத்தில் நின்று நடத்தப்பட்டு வந்தது. அதன்பின் வந்த மன்னர் காலத்திலும் பிரம்மாண்டமான கோவில்களும், கோவில்களுக்கு உள்ளேயே பல விஸ்தாரமான மண்டபங்களை அமைத்து திருமண வைபவங்களை கோலாகலமாக கொண்டாடினார்கள்.

அந்த காலத்திலெல்லாம் கணவன் மனைவி பிரிவு என்பது மிக மிக அரிதான ஒன்றாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கோவில்களில் சதா சர்வ காலமும் மந்திர உச்சாடனம் செய்வதும், ஸ்லோகங்கள் உச்சரிப்பதும், தெய்வீக பாடல்கள் மற்றும் மங்கல இசைகள் ஒலிப்பதும், ஸ்தோத்திரங்கள் படிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. இதனால் ஆலயம் முழுவதும் நேர்மறை ஆற்றல்கள் குறைவில்லாமல் நிறைந்திருக்கும். நம்மை காக்கும் சக்தியான நல்ல சக்திகள் மட்டுமே கோவில்களில் வீற்றிருக்கும். இதனால் தெய்வ சந்நிதானத்தில் வைத்து மாங்கல்யம் சூடிக் கொள்வதால் தம்பதியர்கள் மனதில் தெய்வ பக்தியும், பயமும், திருமணத்தின் மீதான மரியாதையும் இயற்கையாகவே ஏற்பட்டு விடும். இதனால் அவர்கள் திருமணத்தின் மீது, திருமண பந்தத்தின் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருப்பார்கள். பிரிவதற்கு அவ்வளவு சுலபமாக அவர்களால் முடிவெடுத்து விட முடியாது. இந்த காரணத்தை முன்னிறுத்தியே திருமண வைபவம் ஆகிய ஆயிரம் காலத்துப்பயிரை ஆலயத்தில் நடத்தினால் நல்லது என்று கூறுகிறார்கள் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.