கோவில்களில் இதை கொடுக்கும் பொழுது இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள் !! பாவம் வந்து சேரும் !!

பக்தர்கள் கோவில்களில் தானமாக பூஜைக்கு தேவையான பொருட்களை வழங்குவது வழக்கம். சிலர் பரிகாரமாக பூஜை பொருட்களையும், கோவிலுக்கு தேவையான பொருட்களையும் கொடையாக கொடுப்பார்கள். பூஜைக்கு தேவையான நெய் முதல் கற்பூரம், ஊதுபத்தி போன்றவை வரை நிறைய பேர் நிறைய பொருட்களை கொடுத்து உதவி செய்வார்கள். இப்படி செய்யும் பொழுது அவர்களுக்கு நிறைய புண்ணியம் வந்து சேரும். மன நிம்மதி கிடைக்கும். மனதில் நிம்மதி இல்லாமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள் கோவில்களுக்கு இது போல உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்து பாருங்கள். நீங்களே எதிர்பாராத அளவிற்கு உங்களுடைய மனம் நிம்மதி அடைவதை உணர்வீர்கள். பலதரப்பட்ட மனிதர்களுக்கு, பலதரப்பட்ட பிரச்சினைகளும் இருக்கிறது. இன்று இருக்கும் அவசர உலகத்தில் யாரும் யாரையும் புரிந்து கொள்வது இல்லை. இதனால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.

நம்முடைய கவலைகளை சொல்ல யாராவது இருக்க மாட்டார்களா? என்று ஏங்குகிறார்கள். இது மாதிரியான சூழ்நிலையில் இருப்பவர்கள், உங்கள் அருகில் இருக்கும் கோவில்களுக்கு உங்களால் முடிந்தவற்றை தானமாக அளிக்கலாம். அபிஷேகம் செய்ய பால், தயிர், வாழைப்பழம், கற்பூரம், ஊதுபத்தி, எண்ணெய் என்று எதை வேண்டுமானாலும் நீங்கள் வாங்கி தரலாம். நிச்சயம் நல்ல பலன் தரும். வேண்டிய வரங்களைப் பெற, நினைத்தது நடக்க, நோய் நொடிகள் நீங்க இது போல் அருகில் இருக்கும் ஆலயங்களுக்கு உங்களால் முடிந்தவற்றை உதவி செய்ய நிச்சயமாக நல்ல விஷயங்கள் நடக்கும். இது போல் நீங்கள் தானம் செய்யும் பொருட்களில் பால் தானம் செய்பவர்கள் இப்போதெல்லாம் பாக்கெட் பால் வாங்கி தருகிறார்கள். இது மிகப்பெரும் தவறு. இதனால் எந்த பலனும் இல்லை என்பது தான் உண்மை. கோவிலில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு அதீத சக்தி இருக்கும். அவைகளுக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது அதில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் சுத்தமானதாக இருக்க வேண்டும். பாக்கெட் பாலை பயன்படுத்துவது எந்த பலனும் இல்லை.

சுத்தமான கறவை பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும். நீங்கள் தானமாக வழங்கும் பால் ஆனது பாக்கெட் பாலாக இல்லாமல், கறவை பசும்பாலாக இருக்குமாறு பார்த்துக் கொள்வது தான் உங்களுக்கு சிறப்பான பலன் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பாக்கெட் பால் வாங்கி கொடுத்தால் எந்த பயனும் இல்லை. வீட்டில் அபிஷேகம் செய்பவர்களும் பாக்கெட் பால் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு கறவை பசு பால் வாங்கி அபிஷேகம் செய்து பாருங்கள். தெய்வங்களின் அருள் பரிபூரணமாக கிடைப்பதை நீங்களே உணர்வீர்கள். அது போல் அபிஷேகத்திற்கு இந்த ஒரு பொருளை வாங்கிக் கொடுத்தால் சகல, பாக்கியங்களும் கிடைக்கும் என்பார்கள். பிள்ளை வரம் வேண்டுவோர், வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் உங்களின் துயர் தீர கோவில்களுக்கு இளநீர் தானம் செய்தால் அவ்வளவு சிறப்பான பலன் தரும். இளநீரை அபிஷேகம் செய்யப் பயன்படுத்துவார்கள். இளநீர் தானம் செய்வது மற்றும் கறவை பசும்பால் தானம் செய்வது உண்மையில் பெறற்கரிய பேற்றை உங்களுக்குப் பெற்றுத் தரும். இதனால் உங்கள் வாழ்வில் எவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும் சட்டென நீங்கி, நல்ல வழி பிறக்கும் என்பதை கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.