சனிக்கிழமையில் பைரவருக்கு இந்த பூஜை மட்டும் பண்ணுங்க !! எந்த துன்பமும் உங்க கிட்ட கூட வராது !!

உங்களுக்கு வரும் எந்த துன்பத்தையும் பைரவரால் தீர்த்து வைக்க முடியும். எதிரிகள் மூலம் உங்களுக்கு வரும் துன்பங்களையும், கஷ்டங்களையும் பைரவருக்கு விளக்கு போடுவதன் மூலம் நிவர்த்தி செய்து கொள்ள முடியும். பைரவருக்கு தீராத கஷ்டத்தை கூட தீர்த்து வைக்கும் சக்தி உண்டு. மிகவும் சக்திவாய்ந்த கடவுளாக பைரவர் பார்க்கப்படுகிறார். சில சம்பவங்கள் வாழ்க்கையை திருப்பிப் போடும் அளவிற்கு நடந்துவிடும். அத்தகைய துன்பங்கள் தீர பைரவரை மனதார வேண்டிக் கொண்டு விளக்கு போட்டால் தீரும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

பைரவருக்கு எந்த தீபம்? எப்போது ஏற்றலாம்? என்பதைப் பற்றிய தகவல்களை இனி நாம் காணலாம் வாருங்கள். எப்பொழுதும் கோவிலுக்கு செல்லும் பொழுது பைரவர் சன்னதி திறந்திருக்க வேண்டும். திறந்திருக்கும் சமயத்தில் தான் நீங்கள் விளக்கு போட வேண்டும். பைரவர் சன்னதி திரை போட்டு மூடி வைத்து இருக்கும் பொழுது நீங்கள் விளக்கு போடுவதால் எந்த பயனும் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பைரவருக்கு சனிக்கிழமை தொடர்ந்து தீபம் போடுவதால் நிறைய நன்மைகள் உண்டாகும். துர் மரணங்கள், விபத்துக்கள் ஏற்படுவதிலிருந்து பைரவர் உங்களை காத்தருள்வார். ஒவ்வொரு சனிக்கிழமையும் கோவிலுக்கு சென்று பைரவர் சன்னதியில் காலை 6 மணி முதல் 8 மணிக்குள் வெண்பூசணியில் தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பான பரிகாரமாக கூறப்பட்டுள்ளது.

வெண்பூசணி தீபம் ஏற்றுவதில் இருக்கும் சிறப்பை அனைவரும் அறிந்து கொள்வதில் நன்மைகள் உள்ளன. வெண்பூசணியில் பைரவருக்கு விளக்கு ஏற்றுவதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் துர்சக்திகள் விலகிவிடும். எதிரிகளிடமிருந்து உங்களுக்கு வர இருக்கும் பெரும் ஆபத்துகளிலிருந்து இந்த தீபம் ஏற்றுவதால் நிச்சயம் தவிர்க்கப்படும். பைரவர்களில் மொத்தம் 64 பைரவர்கள் இருக்கின்றனர். அதில் எந்த பைரவருக்கு வேண்டுமானாலும் நீங்கள் விளக்கு ஏற்றலாம். எப்போது வேண்டுமானாலும் இந்த தீபம் நீங்கள் தாராளமாக ஏற்றலாம் ஆனால் சனிக்கிழமையில் காலையில் ஏற்றுவதன் மூலம் பெரும் பேறு அடையலாம் என்கிறது சாஸ்திரம். அடிக்கடி மனம் சஞ்சலப்படுபவர்கள் இந்த தீபத்தை ஏற்றி பலனடையலாம்.

சிலருக்கு சில சமயங்களில் ஏதோ ஒரு துன்பம் ஏற்படுவது போலவும், ஏதோ தவறாக நடக்க இருப்பது போலவும் மனதில் தோன்றும். அதுபோன்ற சமயங்களில் பைரவரை சரணடைந்து, வெண்பூசணி தீபம் ஏற்றுவதால் நிச்சயம் மன நிம்மதி கிடைக்கும் என்பது முற்றிலும் உண்மை என்பதை அனுபவபூர்வமாக பலரும் கூறுகின்றனர். பைரவருக்கு உகந்த பூவாக செவ்வரளி இருக்கிறது. பைரவர் சன்னதிக்கு செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்யும் பொழுது மனம் ஒருநிலைப்படும். துன்பங்கள் விலகி நிம்மதியான வாழ்க்கை அமையும். மரண பயம், துர் சம்பவங்கள் போன்றவற்றிலிருந்து முழுமையாக வெளியே வந்து மன அமைதி அடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இந்த தீபத்தை ஏற்ற முடியாதவர்கள் சாதாரணமாக 7 அகல் தீபத்தை நெய் விட்டு ஏற்றி வழிபடலாம்.