சற்றுமுன் பிக்பாஸ் பிரபலம் திடீர் மரணம்.. ஆழ்ந்த சோகத்தில் மூழ்கிய திரையுலகம் …

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அனைவராலும் எதிர்க்க பட்டாலும் பின்னாளில் அது ஒரு தவிர்க்க முடியாத நிகழ்ச்சி ஆகிவிட்டது பிக்பாஸ் மலையாளம் சீசன் 2 போட்டியாளர் சோம்தாஸ் அவர்கள் சாத்தனூர் கொல்லம் பரிப்பல்லி மருத்துவ கல்லூரியில் கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கொரானா தொற்றில் இருந்து குணமடைந்த சோம்தாஸ்க்கு சிறுநீரக தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது இதற்காக மருத்துவர்கள் அவருக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வந்தனர் இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை கூறியது அதற்காக அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் உயிரிழந்தார்.

மேலும் 42 வயதாகும் சோம்தாஸ் பல மலையாளப் படங்களில் பின்னணி பாடகராகவும் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார் பிக்பாஸ் மலையாளம் சீசன் இரண்டில் கலந்துகொண்டு விளையாடியதன் மூலம் மக்கள் மனதைக் கவர்ந்த இவர் தற்போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது திரையுலகத்தினறிடையும் ரசிகர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது சோம்தாஸ்க்கு மனைவி மற்றும் நான்கு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.