சாமி படம் தேவையில்லை என்று இதை மட்டும் செய்து விடாதீர்கள் !! தெய்வ குத்தம் ஆகி நம் குடும்பத்தில் பெரிய கஷ்டங்கள் வரும் !!

உங்களிடம் பழைய சாமி படங்கள் இருக்கலாம். அதை என்ன செய்வீர்கள்? பழைய சுவாமி படங்கள் என்பது பூஜை அறையில் வைத்து பயன்படுத்திய சுவாமி படங்களை பழையதாகி விட்டாலோ, பழுதடைந்து விட்டாலோ என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பீர்கள். சிலர் என்ன செய்வார்கள் என்றால் அதைத் தூக்கி பரண் மேல் போட்டு விடுவார்கள். இன்னும் சிலர் அதை மூலையில் போட்டு வைத்திருப்பார்கள். இதுபோல் செய்வது மிகவும் தவறான காரியமாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன. இது உங்கள் குடும்பத்திற்கு நன்மை விளைவிப்பவை அல்ல. பிறகு அந்த படங்களை என்னதான் செய்வது? என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக சுவாமி படங்களின் ஓரங்களில் விரிசல் விட்டிருந்தாலும், மங்கிப்போய் பழையதாக ஆகியிருந்தாலும் அல்லது கரையான், கரப்பான்பூச்சிகள் போன்றவற்றின் அரிப்புகள் இருந்தாலும், சாமி படத்தின் கண்ணாடி உடைந்து இருந்தாலும் அதனை உடனடியாக பூஜை அறையில் இருந்து நீக்கிவிட வேண்டும். அப்படியே வைத்து வழிபடக்கூடாது. சிலர் புதிய படங்கள் வாங்கும் எண்ணத்தில் இருப்பார்கள். அல்லது அவர்களுக்கு மிகவும் பிடித்த படங்களை எங்கேனும் கடைகளில் பார்க்கும் பொழுது யோசிக்காமல் சட்டென வாங்கி விடுவார்கள். பூஜை அறையில் இடமே இருக்காது, புதிய புதிய படங்களாக வாங்கிக் குவிப்பார்கள். இது போல் செய்யும் பொழுது இடம் இல்லாத காரணத்தினால் நாம் சில படங்களை எடுத்து வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.

இந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் வேண்டாம் என்று நினைக்கும் சாமி படங்களை சுத்தம் செய்துவிட்டு மஞ்சள் துணியில் கட்டி ஒரு பாலித்தீன் பையில் போட்டு பீரோவிற்கு மேல் வைக்கலாம், அல்லது பத்திரமாக ஏதேனும் ஒரு இடத்தில் வைக்கலாமே தவிர பரண்மேல் குப்பை போல் போட்டு வைப்பது தவறு. மீண்டும் உங்களுக்கு பயன்படும் என்றால் நீங்கள் இது போல் எடுத்து வைக்கலாம். இல்லை உங்களுக்கு தேவை இல்லை என்கின்ற சமயத்தில் நீங்கள் அதை கோவில்களுக்கு சென்று வைத்து விட்டு வரலாம். அங்கிருக்கும் மரத்தினடியில் கூட வைக்கலாம். நிறைய பேர் கோவில்களில் இது போன்ற சாமி படங்களை வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கலாம்.

இதுவே முறையான ஒன்று. இவ்வாறு நீங்கள் செய்வதால் உங்கள் குடும்பத்திற்கு எந்தவிதமான கெடுதலும் ஏற்படாது. பழுதடைந்த, கண்ணாடி உடைந்த படங்களையும் நீங்கள் இதே போல் தான் செய்ய வேண்டும். கோவில்களில் பத்திரமாக சேர்த்து விடுங்கள். அதை விடுத்து உடைந்து தான் போய்விட்டதே என்று குப்பையில் போட்டு விடாதீர்கள். நாம் தெய்வமாக நினைத்து அத்தனை வருட காலம் பூஜை, புனஸ்காரங்கள் எல்லாம் செய்து வந்த படத்திற்கு சில சக்திகள் உள்ளன. அவற்றை குப்பைகளில் அல்லது பரண் மேல் குப்பை போன்று போட்டு வைத்திருப்பது தரித்திரத்தை ஏற்படுத்தும். தேவையில்லாத பிரச்சினைகள் குடும்பத்தில் புதிது புதிதாக உண்டாகும். தெய்வ குத்தம் ஏற்பட்டு மனசஞ்சலங்கள் உருவாகிவிடும். எனவே சுவாமி பட விஷயத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது.