சுக்கிர பகவானை இந்த முறையில் வழிபாடு செய்து பாருங்கள் !! நினைத்த காரியங்கள் அனைத்தும் 11 வாரங்களில் நிறைவேறும் ….

யோககாரர்களை பார்க்கும் போது, அவர்களுக்கு சுக்கிர யோகம் அடித்துள்ளது என்று தான் சொல்லுவார்கள். இப்படியாக சுக்கிர பகவானின் அருளை நாம் பெற்று விட்டால் போதும். சகல சௌபாக்கியம், நம்முடைய வாழ்க்கையில் நிறைந்து, சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து விடலாம். சுக்கிர பகவானை முறைப்படி எப்படி, எந்த கிழமையில், எந்த நேரத்தில் வழிபாடு செய்தால் வாழ்க்கையில் இருக்கக் கூடிய தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பணக்கஷ்டம் மட்டுமல்லாமல், குடும்பத்தில் இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குக் கூட விரைவில் தீர்வு கிடைக்க, கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவ, கடன் தொல்லையிலிருந்து விடுபட, வீட்டில் மகாலட்சுமி நிலைத்திருக்க சுக்கிரனின் அனுக்கிரகம் கட்டாயம் தேவை.

தொடர்ந்து, வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வழிபாட்டை மறக்காமல் செய்து வாருங்கள். உங்கள் வேண்டுதலுக்காக பலனை கட்டாயம் 11 வாரங்களில் நீங்கள் அடைவீர்கள். வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணியிலிருந்து 7.30 மணிக்குள் கோவிலுக்கு சென்று, நவக்கிரகத்தில் இருக்கும் சுக்கிர பகவானை வழிபட வேண்டும். சுக்கிர பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வைத்து விட்டு, முடிந்தால் ஏலக்காய் சேர்த்த சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக வைத்து, உங்களது பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். இதோடு மட்டுமல்லாமல், சுக்கிரனுக்கு உகந்த நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம், இந்த மூன்று நட்சத்திரங்கள் வரும் தினத்தன்று கோவிலுக்கு சென்று சுக்கிர பகவானின் மந்திரத்தை 108 முறை உச்சரித்து, மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமை கோவிலுக்கு செல்லும் சமயத்திலும் இந்த மந்திரத்தை கட்டாயம் உச்சரிக்க வேண்டும். சுக்கிர பகவானை நினைத்து, ‘ஓம் சுக்ராய நம’ என்ற மந்திரத்தை உச்சரித்தால் மட்டுமே போதுமானது. நீங்கள் செல்லும் கோவில்களில், நவகிரக சன்னிதானத்தின் அருகில், எங்கு இடம் இருக்கின்றதோ, அந்த இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள்.

கண்களை மூடிக்கொண்டு உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டத்தை சொல்லி, ஆத்மார்த்தமாக சுக்கிர பகவானின் மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்தாலே போதுமானது. குறிப்பாக இந்த தியானத்தை வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7.30 முப்பது மணிக்குள் செய்ய வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால், இந்த நேரத்தில், வீட்டில் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, சுக்கிர பகவானை நினைத்து இந்த தியானத்தை நம்முடைய வீட்டிலும் செய்யலாம். எப்படிப்பட்ட கஷ்டங்களும் கூடிய விரைவில் நல்ல முடிவுக்கு வந்து விடும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக துணி சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்பவர்கள், டெய்லரிங் தொழிலில் இருப்பவர்கள், உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், கலைத்துறையில் இருப்பவர்கள், சுக்கிர பகவானை வழிபடும் போது அவர்களுக்கு மேலும் மேலும் வெற்றிகள் வந்து குவியும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. சுக்கிர பகவானின் அனுக்கிரகம் முழுமையாக கிடைத்தால் நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய தோல்விகள் கூட, நம்மை அதிகமாக பாதிக்காமல், மன உளைச்சலை ஏற்படுத்தாமல், வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை பெற, தீர்க்கமுடியாத இன்னல்களும் தீர சுக்கிர வழிபாடு சிறந்தது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.