சூனியத்தை எடுக்கக் கூடிய இந்த 3 பொருட்களை ஒன்றாக வைத்து தான் பாருங்களேன் !! உங்கள் வீட்டில் கட்டாயம் நம்பமுடியாத பல அதிசயம் நிகழும் !!

நமக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீர, ஏதாவது ஒரு தீர்வு கிடைத்து விடாதா என்ற தேடல் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கத்தான் செய்கிறது. வீட்டிலாக இருந்தாலும் சரி, தொழில் செய்யும் இடமாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு நல்லது நடந்து விட்டால் போதும். அதன் பின்பு, எப்படி தான் கஷ்டங்கள் வருமோ என்று தெரியாது. நடந்த ஒரு நல்லதுக்கு, பத்து கஷ்டங்கள் நம்மை பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். ‘ஏண்டா இந்த நல்லது நடந்தசுன்னு, யோசிக்கிற அளவுக்கு சில பேருக்கு எல்லாம் கஷ்டம் வரும்’. நம்மில் பலபேர் இதை அனுபவ ரீதியாக உணர்ந்து இருப்போம். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடந்தால், கண்திருஷ்டி பட்டு உடனடியாக அடுத்து ஏதாவது ஒரு பெரிய சண்டை வந்துவிடும். தொழிலில் லாபம் கிடைத்தால், கண் திருஷ்டி பட்டு எதிர்மறை ஆற்றலால் ஏதாவது ஒரு விபரீதம் ஏற்பட்டு விடும் அல்லவா? இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு சுலபமான தீர்வை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ‘வாழ்க்கையில் ஒரு படி ஏறினால், பத்து படி கீழே இறங்க வேண்டியதாக உள்ளது’ என்று கஷ்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.

எலுமிச்சை பழம், வென் கடுகு, மிளகு, இந்த மூன்று பொருட்களை வைத்து தான் பரிகாரமே. வால்மிளகு என்று சொல்லப்படும் மிளகை திருஷ்டி கழிக்க பயன்படுத்தினால், உடனடியாக எதிர்மறை ஆற்றல்கள் அழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்கு வால்மிளகு கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லை என்றால் சாதாரன மிளகு போதும்.உங்களுடைய வீட்டிலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொழில் செய்யும் இடத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஒரு சிறிய கண்ணாடி பௌலில் ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகை போட்டு விடுங்கள். அதில் 11 மிளகை கலந்து வைத்து விடுங்கள். அதன் மேல் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து விடுங்கள். இதை அப்படியே எல்லோர் கண்களுக்கும் தெரியும் படி வைப்பதில் தவறொன்றும் கிடையாது.

இதை புதன் கிழமை வைக்கிறீர்கள் என்றால் வியாழன், வெள்ளி, சனி, 3 நாட்கள் அப்படியே இருக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று முதலில் அந்த எலுமிச்சை பழத்தை எடுத்து உங்களுடைய வீட்டை சுற்றியோ அல்லது தொழில் செய்யும் இடமாக இருந்தால், அந்த தொழில் நிறுவனத்தை சுற்றியும் உங்கள் கைகளாலேயே இரண்டாக நறுக்கி இரண்டு பக்கம் தூக்கிப் போட்டுவிட வேண்டும். கையால் நசுக்க முடியவில்லை என்றால், கத்தியால் வெட்டி கூட பிழிந்து, இரண்டு திசைகளில் தூக்கி போட்டுவிடலாம். உங்களது வலது பக்கம் ஒன்று துண்டு, உங்களது இடது பக்கம் துண்டு. அந்த கிண்ணத்தில் இருக்கக்கூடிய வெண் கடுகையும், மிளகையும் சிறியதாக வெள்ளை துணியில் மூட்டை கட்டி, கொஞ்சமாக நல்லெண்ணெய் விட்டு, வீட்டு வாசலில் வைத்து ஒரு கற்பூர துண்டு வைத்து எரிய விட்டு விட வேண்டும். அவ்வளவு தான். உங்களுக்கு பிடித்த கண் திருஷ்டியாக இருந்தாலும், எதிர்மறை ஆற்றல்களாக இருந்தாலும் அனைத்தையும் இந்த மூன்று பொருட்களும் தனக்குள் ஈர்த்து எரித்துவிடும்.

அனைத்தும் நெருப்போடு நெருப்பாக பொசுங்கி விடும். இப்படியாக வாரம் ஒரு முறை செய்தால் போதும். உங்களால் முடிந்தால் ஞாயிற்றுக்கிழமை அன்று செய்யலாம். அப்படி இல்லை என்றால் செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம். நீங்கள் இந்த பரிகாரத்தை செய்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு கிண்ணத்தில் இந்த பொருட்களை சேர்த்து வைத்தால் போதும். இதுதவிர அமாவாசை தினத்திலும் இந்த பரிகாரத்தை செய்வது நமக்கு நல்ல பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு நல்ல விசேஷம் நடந்து முடிந்த பின்பு கூட, இந்த திருஷ்டி கழிப்பதில் தவறொன்றும் கிடையாது. நம்பிக்கையுள்ளவர்கள் நம்பிக்கையோடு செய்தால், நிச்சயம் உங்களுடைய சந்தோஷம் குறையாமல் நிலைத்திருக்கும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.