சூரிய கிரகணம் முடிந்தால் அப்படி என்ன தான் நடக்கும் தெரியுமா ?? தமிழ் பஞ்சாங்கம் பல ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரித்த திடுக்கிடும் தகவல்கள் !!

வாக்கிய தமிழ் பஞ்சாங்கத்தின் படி உலகில் நிகழ இருப்பதை, அதிலும் குறிப்பாக இந்தியாவில் நிகழ இருப்பதை முன்கூட்டியே கணித்து கூறி விட முடியும். இவ்வகையில் சார்வரி வருடத்தில் என்னவெல்லாம் நிகழும் என்பதைப் பற்றி பஞ்சாங்கத்தில் சென்ற வருடமே கணித்து இருப்பார்கள். சென்ற விகாரி வருடத்தின் கணிப்புபடி உலகம் பொருளாதார பிரச்சனையில் திக்குமுக்காடும் என்பதையும், நோய்க் கிருமிகள் தொற்று உருவாகும் என்பதையும் மிகச்சரியாக நம் ஆற்காடு தமிழ் பஞ்சாங்கம் கணித்துக் கூறியது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். நாளை நிகழ இருக்கும் சூரிய கிரகணம் பற்றியும், கிரகணத்திற்கு பிறகு உலகில் நடைபெறும் இயற்கை சீற்றங்கள் பற்றியும் கணிப்புகள் உள்ளன. பஞ்சாங்கத்தில் இந்தியாவுடன் பிற நாடுகள் போர் புரியும் என்றும் அதில் இந்தியா மீதான குற்றச்சாட்டை இந்தியா தகர்த்தெறியும் என்பதையும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதற்கேற்றார் போல் தான் கடந்த சில நாட்களாக இந்திய சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தான் அத்துமீறி சீன எல்லையில் போர் புரிகின்றனர் என்ற குற்றச்சாட்டை சீன ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இவ்விரு நாடுகளின் சண்டையில் இந்திய ராணுவ தலைவர் உட்பட பல ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். இந்த விஷயம் இந்தியா முழுவதும் இருக்கும் இந்திய மக்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. அதே போல் நாளை சூரிய கிரகணம் நிகழும் என்பதை பற்றியும், இந்த கிரகணம் நீண்ட நேரம் நீடிக்க இருப்பதாகவும் கூறியுள்ளது. பெரும் கிரகணம் நிகழ்வதால் புவியில் சில மாற்றங்கள் நிகழும். இதனால் மற்ற கிரகண நாட்களை காட்டிலும் இந்த கிரகணத்தின் போது சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள் என்று அறிவுறுத்தபடுகிறது. எப்போதும் போல் கிரகணம் ஆரம்பிப்பதற்கு முன்பே உணவருந்திவிட்டு, எல்லா வேலைகளையும் முடித்து விடுவது நல்லது.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். கிரகணம் ஆரம்பிப்பதற்கு முன்பு மற்றும் முடிந்ததற்கு பிறகும் குளிப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் கிரகண நேரத்தில் நேரடியாக சூரிய ஒளி உங்கள் மீது படாத வண்ணம் பாதுகாப்பாக இருப்பது நல்லது. கிரகணத்தின் போது சூரிய ஒளி கதிர்களில் மாற்றங்கள் நிகழ்ந்து நம்மீது படுவதால் நமக்கு சில உடல் உபாதைகள் நேரலாம். இதன் காரணமாகவே கிரகணத்தின் போது வெளியே வரக்கூடாது என்று கூறுகின்றனர். பஞ்சாங்கத்தில் உள்ளது போல் சில விஷயங்கள் உண்மையில் நடைபெற்று வருவதால் தமிழ் பஞ்சாங்கத்தின் மீது மக்களிடையே கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டு வருகிறது. நம் முன்னோர்களின் கணிப்பு, ஜோதிட சாஸ்திர அறிவு, தொலைநோக்கு சிந்தனை போன்றவை மற்றவர்கள் வியக்கும் வண்ணம் இருப்பது நமக்கு பெருமைக்குரிய விஷயம் தான்.

இருப்பினும் இனி வரும் பிரச்சனைகள் பஞ்சாங்கம் கூறுவது போல் நிகழ்ந்தால் என்ன செய்வது என்ற பயமும் ஒரு புறம் இருக்கிறது. சூரிய கிரகணம் முடிந்து சில மாதங்களில் உலக அளவில் இயற்கை சீற்றங்கள் நிகழும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது. சூறாவளி, புயல் காற்று, புழுதி காற்று, ஆலங்கட்டி மழை பூமியில் பொழியும் என்பது பஞ்சாங்க கணிப்பாக இருக்கிறது. மேலும் உணவு தானியத்திற்கு கடும் பஞ்சம் ஏற்படும் என்றும் கூறுகிறது. உலகம் தற்போது சந்தித்துக் கொண்டு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் ஒரு பிரச்சினையை சந்திப்பதற்கு யாரிடமும் தைரியம் இல்லை என்றே கூறலாம். இந்நிலையில் மக்கள் இருக்கும் பொழுது இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் நிலை வந்தால் எப்படி சமாளிக்க முடியும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்து வருகிறது. இதற்கான விடையை பொறுத்திருந்து தான் நாம் பார்க்க வேண்டும்.