செடிகள் பூக்கும் நேரத்தில் நிறைய பூக்களையும், நிறைய பழங்களையும் தர இந்த 2 பொருள் ஒன்றாக கலந்து ஊற்றுங்கள் !! அப்புரம் பாருங்கள் காய்ச்சி தள்ளும் !!

தோட்டம் அல்லது மாடி தோட்டம் வைத்திருப்பவர்கள் தக்காளி செடியை கண்டிப்பாக வளர்த்து வருவர். அதேபோல் வீட்டிற்கு முன்னால் செம்பருத்தி செடி வளர்ப்பது மிகவும் நல்ல பயன்களைத் தரும். செம்பருத்தி செடியில் பூக்கள் பூக்கவில்லை என்றால் இந்த முறையில் நீங்கள் அதற்கு ஊட்டச்சத்து அளிக்கலாம். செம்பருத்தி செடியை வீட்டிற்கு முன் வளர்ப்பது ஐஸ்வர்யத்தை தரும் என்பார்கள். வடநாட்டில் எல்லாம் செம்பருத்தி செடியை துளசி செடிக்கு இணையாக பாவிப்பார்கள். அதற்கு காரணம் செம்பருத்தி செடியில் காளிதேவி குடியிருப்பதாக அங்கிருப்பவர்கள் நம்பி வழிபட்டு வருகின்றனர். அதற்கு புராண கதைகளும் உண்டு. இந்த பதிவின் மூலம் தக்காளி, செம்பருத்தி மற்றும் இதர செடிகளுக்கு தேவையான தேமோர் கரைசல் எப்படி தயாரிப்பது? செம்பருத்தி செடியின் சிறப்புகள் என்ன?

என்பதைப் பற்றி காண இருக்கிறோம். செம்பருத்தி செடியில் ஒருமுறை அதிக பூக்கள் பூக்க ஆரம்பித்து விட்டால் அதன் பிறகு உங்களுக்கு நிறைய பயன்களை தரும் அளவிற்கு பூக்கள் கொத்து கொத்தாக பூக்க தொடங்கிவிடும். செம்பருத்திப்பூவில் நிறைய நன்மைகள் உள்ளன. பூஜைக்கு செம்பருத்திப்பூவை பயன்படுத்தலாம். நம் ஆரோக்கியத்திற்கும், கூந்தல் வளர்ச்சிக்கும் செம்பருத்தி செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் நன்மையளிக்கும். தினமும் ஒரு செம்பருத்தி பூவை விநாயகருக்கு சூட்டி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம். இதற்காகவே பெரும்பாலான வீடுகளில் வீட்டிற்கு முன்னால் செம்பருத்தி செடியை வளர்க்கிறார்கள். தேமோர் கரைசல் என்றால் என்ன? தேமோர் கரைசல் என்பது தேங்காய் பாலும், மோரும் கலந்த கலவை தான். பயிர்களுக்கு நல்ல வளர்ச்சி தருவதற்கு இந்த கரைசல் தெளிக்கப்பட்டு வருகிறது. செம்பருத்தி செடி, தக்காளி செடி மட்டுமல்ல..

பூக்கள் பூக்க தயாராக இருக்கும் எல்லாவிதமான பூச்செடிகளுக்கும் இந்த கரைசலைத் தெளிக்கலாம். இதில் சைட்டோசைம் இருப்பதால் செடிகளின் வளர்ச்சி செல்களை தூண்டி பூக்கள் பெரிது பெரிதாக பூக்கவும், அதிக நிறத்துடன் பளப்பாக இருக்கவும் உதவுகிறது. தேமோர் கரைசல் எப்படி தயாரிப்பது? தயிரை தேவையான அளவிற்கு எடுத்துக் கொண்டு அதில் சரிபாதி தண்ணீர் ஊற்றி மோராக கரைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் தேங்காய்களை துருவி அதிலிருந்து தேவையான அளவிற்கு அரைத்து இரண்டு முறை பால் எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காய் பாலையும், கரைத்து வைத்த மோரையும் ஒன்றாக கலந்து மண்பானையில் ஊற்றி ஏழு நாட்கள் வரை புளிக்க விட வேண்டும். மண்பானை இல்லாதவர்கள் பிளாஸ்டிக் டப்பாக்களில் ஊற்றி வைக்கலாம். மூடியை இறுக்கமாக மூடி விடாதீர்கள். ஒரு முறை மூடிவிட்டு அதை அப்படியே விட்டு விடவும் கூடாது. ஏழு நாட்களில் தினமும் மூன்று முறையாவது டப்பாவை எடுத்து குலுக்கி வைக்க வேண்டும். நீங்கள் அப்படியே விட்டு விட்டால் அதில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் வந்துவிடும். ம

ண்பானையில் ஊற்றி வைப்பவர்கள் அதன் வாய்ப் பகுதியை மட்டும் துணி கொண்டு மூடி வைக்கவும். மண்ணிற்குள் புதைத்தும் வைக்கலாம். ஏழு நாட்கள் கழித்து எடுத்துப் பார்த்தால் நமக்கு தேவையான தேமோர் கரைசல் தயாராகி இருக்கும். ஒரு லிட்டர் அளவிற்கு இந்த கரைசல் உங்களிடம் இருந்தால் அதனுடன் 9 லிட்டர் தண்ணீர் சேர்த்து 10 லிட்டர் கரைசல் தயார் செய்து வைத்து விடலாம். உங்கள் செடிகள் பூக்களை பூக்க ஆரம்பிக்கும் பொழுது இந்த கரைசலை தெளித்து வந்தால் போதும் அவ்வளவு அருமையாக பூக்கள் செழித்து வளரும். நிறைய பூக்களும் பெரிது பெரிதாக பூக்கும். இதன் புளிப்பு தன்மையால் செடிகளின் இலைகளில் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கி மொட்டுக்கள் உதிர்வது தடுக்கப்படும். இதனால் உங்கள் செடிகள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிக பூக்களை தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை தயார் செய்வதும் பெரிய விஷயம் இல்லை. மிக சுலபமான முறையில் தயாரித்து விடலாம் இதை நீங்களும் தயார் செய்து பயன்படுத்தி பயன் அடையுங்கள்.