சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்புமான மரியாதையை நீங்கள் பெற வேண்டுமா ?? மூன்று கிராம்பு போதும் என்றால் உங்களால் நம்ப முடியுமா !!

சில பேருக்கு சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்புமான மரியாதை, புகழ், வரவேற்பு, மதிப்பு, உபச்சாரம் எல்லாம் கேட்காமலேயே கிடைக்கும். காரணம், அந்த மனிதர் எல்லோருக்கும் பிடித்த மனிதராக இருப்பார். வசீகர தன்மையோடு இருக்கும் அந்த நபர், சொந்த தொழில் செய்பவராக இருந்தால், அவர் பேச்சிலேயே எல்லோரையும் கவர்ந்து விடுவார். வியாபாரிகள் எல்லோரும் அவரிடம்தான் வியாபாரம் செய்வார்கள். ‘அவரது கடை பக்கத்தில் தான் நம் கடை இருக்கும். அவரை விட நாம் எந்த விதத்திலும் குறைந்தவர்களாக இருக்க மாட்டோம்.’ ஆனால் நம்மால் வியாபாரத்தில் சிறந்து விளங்க முடியாது. நாம் வேலை செய்யும் இடத்தில் கூட, சில மனிதர்களை பார்த்திருப்போம். நம்மை விட, நம்முடன் இருக்கும் அந்த நபருக்கு திறமை குறைவாக தான் இருக்கும். ஆனால் ஏதோ ஒரு வசீகர ஆற்றல் அவரிடம் இருக்கும். முதலாளிகள் கூட வசீகர தன்மை கொண்ட, அந்தக் குறிப்பிட்ட நபர் சொல்வதை தான் கேட்பார்கள். அந்த அளவுக்கு வசீகரத் தன்மை சிலரிடம் இயற்கையாகவே இருக்கும். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், வசீகரம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான நபராக இருப்பதே தவிர, வசியம் அல்ல. காரண காரியமே இருக்காது. சில பேரை பார்க்கும்போது, முதல் தருணத்திலேயே அவர்களை எல்லோருக்கும் பிடிக்கும் ஒரு தன்மையைத்தான் வசீகரத் தன்மை என்று சொல்வார்கள். ஆனால் சிலபேருக்கு எவ்வளவுதான் அறிவாற்றல் இருந்தாலும், அடுத்தவர்களுக்கு பிடிக்காத ஒரு நபராக தான் இருப்பார். எவ்வளவு தரமான பொருட்களை வைத்து வியாபாரம் செய்தாலும் வியாபாரம் நடக்காது. அலுவலகத்தில் எந்த பணியை செய்தாலும் அதற்கான பாராட்டைப் பெறவும் முடியாது. வசீகரம் இல்லாத ஒரு நபருக்குள் இருக்கும் திறமையானது, வெளிப்பட்டாலும் அதற்கான எந்த ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போய்விடும். வசீகரத் தன்மை இல்லாதவர்களுக்கு, தங்களுக்குள்ளாகவே ஒரு தாழ்வு மனப்பான்மை வருவதற்குக் கூட வாய்ப்பு உள்ளது. ‘என்னடா இது வாழ்க்கை?’ என்ற விரக்திக்கு கூட போய்விடுவார்கள். சரி. இதற்கு என்னதான் தீர்வு? எல்லோராலும் மதிக்கத்தக்க கூடிய, எல்லோருக்கும் பிடிக்கக் கூடிய, வசீகர தன்மையோடு நாம் மாற வேண்டும் என்றால் என்ன செய்வது? ஒரு சிறப்பான வழி உள்ளது.

வெறும் 3 கிராம்பை வைத்துதான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகின்றோம். அது என்ன பரிகாரம் என்பதைப் பற்றி இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா? வெள்ளை காட்டன் துணியை, திரி செய்யும் அளவிற்கு வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அந்தத் துணியின் உள்பகுதியில் 3 கிராம்பை வைத்து திரி போல சுருட்டி தயாரித்துக்கொள்ள வேண்டும். மூன்று கிராம்பும் தீபம் எரியும் இடத்தில் இருக்கும்படி இந்த திரியை நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள். அதாவது கிழிக்கப்பட்ட வெள்ளைத்துணியில் முனையில் 3 கிராம்புகளை வைத்து கீழே விழாதபடி சுருட்டு கொண்டாலே போதும். கிராம்பு திரி தயார். ஒரு மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, நீங்கள் தயார் செய்த கிராம்பு திரியை போட்டு, தீபத்தை ஒளிர விடுங்கள். அந்த தீப ஒளியில் மூன்று கிராம்புகளும் எரிய வேண்டும். ஒரு சிறிய பாத்திரத்தில், சிறிதளவு சுத்தமான பசு நெய்யை எடுத்துக்கொண்டு அந்த தீபத்தில் காட்டினால், அந்த நெய்யானது லேசாக கருப்பு நிறமாக மாறிவிடும். அதை சேகரித்து சிறிய செப்புப் பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்யும்போது உங்கள் மனதார ‘ஓம்’ என்னும் மந்திரத்தை உச்சரித்துக் கொள்ளுங்கள்.

வசீகரத் தன்மையைக் கொடுக்கும் அந்த கருப்பு நிற திலகத்தை சேகரித்து தினம்தோறும் கண்ணுக்குத் தெரியாமல் உங்கள் நெற்றியில் இட்டுக் கொண்டாலே போதும். இதில் எந்த ஒரு மந்திர தந்திர முறையில் இல்லை. லட்சுமி கடாட்சம் கொண்ட கிராம்பினை எரித்து, அதன் மூலம் தயாரிக்கப்பட்ட திலகம்தான் இது. லட்சுமிகரமான கலை உங்களது முகத்தில் உண்டாகிவிடும். நீங்கள் அனைவருக்கும் பிடித்த மனிதராக மாற முடியும். வாழ்க்கையின் எல்லா விதத்திலும் வெற்றியடைய வேண்டும் என்றால் நம்முடைய திறமையுடன், வசீகரமும் அதில் சேர்ந்து இருக்க வேண்டும். சாதுரியமான முறையில் செயல்பட்டால் தான் விரைவாக வாழ்க்கையில் முன்னேற முடியும். இப்படியாக உங்களுடைய வசீகரிக்கும் தன்மையை நீங்களே அதிகரித்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். ஏனென்றால் இதில் உச்சரிக்கப்படும் ‘ஓம்’ எனும் மந்திரமும் மகாலட்சுமிக்கு விருப்பமான, லட்சுமி கடாட்சத்தை தரக்கூடிய கிராம்பும் உங்களது வாழ்க்கையை புரட்டிப் போடக் கூடியதாக இருக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் செய்த பார்க்கலாம்.