செம்பருத்தி செடியை உங்க வீட்டில் எந்த திசையில் வெச்சிருக்கீங்கன்னு கொஞ்சம் பாருங்க !! இப்படி இருந்தால் கட்டாயம் கஷ்டம் தான் வரும்….

நம்மில் பல பேர் வீடுகளில் செம்பருத்தி பூச்செடி வைத்து வளர்ப்பது வழக்கம் தான். அதில் என்ன அதிர்ஷ்டம் வரப் போகின்றது? என்ற கேள்வி பலபேர் மனதில் எழும். பொதுவாகவே, சிவப்பு நிற பூக்களுக்கு எப்போதுமே நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய சக்தி இருக்கின்றது. குறிப்பாக, ஒற்றைச் செம்பருத்தி பூச்செடிக்கு, செல்வத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கிறது என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த செம்பருத்தி பூ செடி, உங்களுடைய வீட்டில் எந்த திசையில் இருக்க வேண்டும்? அந்த செடியில் பூக்க கூடிய பூக்களை நாம் என்ன செய்தால், வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை அடையமுடியும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அதிகப்படியான பணம் சம்பாதிக்க வேண்டும். வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தை அடைய வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். கடனை சீக்கிரம் அடைக்க வேண்டும். என்று நினைப்பவர்கள் இந்த குறிப்பை தாராளமாக பின்பற்றலாம். இதை பரிகாரம் என்று செய்ய வேண்டாம்.

வழிபாடு என்று நினைத்து செய்து வாருங்கள்! கட்டாயம் உங்களுடைய வாழ்க்கையில் பெரிய முன்னேற்றத்தை அடைவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. காசா! பணமா! ஒரே ஒரு, ஒற்றை செம்பருத்திப் பூ செடி! அதை வாங்கி இப்படி வைத்து தான் பாருங்களேன்! உங்களுடைய வீட்டின் மேற்கு அல்லது தெற்கு இந்த இரண்டு திசைகளில் செம்பருத்தி பூ செடி வைப்பது மிகவும் நல்லது. அந்த செம்பருத்தி பூ செடி, ‘சிவப்பு நிற, ஒற்றை செம்பருத்தி பூ’ செடியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செடியில் பூக்கள் கூடிய, சிவப்பு நிற செம்பருத்தி பூக்களை பறித்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு, சூட்டி, உங்களது வேண்டுதலை, குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்கான வேண்டுதல்களை வைத்து பாருங்கள். நிச்சயம் அதற்கான நல்ல தீர்வு கிடைக்கும். சிவப்பு நிற பூக்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்து, வேண்டுதலை வைத்தோமேயுனால் அது உடனடியாக நிறைவேறும். உங்களுடைய வீடுகளில் பூச்செடியை வைப்பதற்கு வசதி இல்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு தொட்டியில் பதியம் போட்டு வைத்தால், செம்பருத்தி பூ செடி விரைவாக வளர ஆரம்பித்துவிடும். அந்தத் தொட்டியை மேற்குப் பக்கத்தில் அல்லது தெற்கு பக்கத்தில் வைத்து விடுங்கள்.

சொன்னா கட்டாயம் நம்ப மாட்டீங்க! 48 நாட்கள், உங்கள் வீட்டில் பூத்த செம்பருத்தி பூவை பறித்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும் இறைவனுக்கு வைத்து, உங்களுடைய பணம் சம்பந்தப்பட்ட வேண்டுதலை வைத்துவிட்டு, அதன் பின்பு உங்கள் வாழ்க்கையில் ஏற்படுகின்ற மாற்றங்களை நீங்களே தெரிந்து கொள்வீர்கள். 48 நாட்கள் என்பது ஒரு கணக்கிற்காக சொல்லப்படுவது தான்! அதோடு விட்டுவிடாமல் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்து வரும் பட்சத்தில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடையலாம். நிறைய பேர் வீட்டில் இந்த ஒற்றைச் செம்பருத்திப் பூ செடி இருக்கும். சில பேருக்கு அது மிகவும் அதிர்ஷ்டமான தாக இருக்கும். அது அவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பது, தெரியாமலேயே தானாகவே மேற்கு திசையிலோ அல்லது தெற்கு திசையிலோ அமைந்திருக்கும். சில பேருக்கு இதே செம்பருத்தி பூ செடி அதிர்ஷ்டத்தை தராது. இதற்கு காரணம் அந்த பூச்செடி எந்த திசையில் இருக்கிறது என்பதை நீங்கள் கவனித்து பாருங்கள்! இதோடு மட்டுமல்லாமல், உங்கள் வீட்டில் ஊரிலி இருக்கும் அல்லவா? அதில் தண்ணீர் ஊற்றி, 4 செம்பருத்தி பூ செடிகளை, அதன் மேலே மிதக்க விட்டு, வரவேற்பறையில் வைத்தால், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. பணம் சம்பாதிக்க எத்தனையோ பரிகாரங்களை செய்கின்றோம். இந்த செம்பருத்தி பூச்செடியை, குறிப்பிட்ட இந்த திசையில் நட்டு, இறைவனுக்கு பூவை சூட்டி வழிபடுவதன் மூலம், புண்ணியத்திற்கு, புண்ணியமும் கிடைக்கப் போகின்றது. அதிர்ஷ்டத்திற்கு, அதிர்ஷ்டமும் கிடைக்கப் போகின்றது. உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நம்பிக்கையோடு செய்து தான் பாருங்களேன்! நஷ்டம் ஆவதற்கு எதுவுமே இல்லை. லாபம் என்று சொல்லிக்கொள்ள பத்து ரூபாய் வந்தாலும் அது அதிர்ஷ்டம்தான்.