செவி கொடுத்து கேளுங்கள் : காதுகளை கவனிக்கவும்.; அஜித் சொல்ல என்ன காரணம்.?

இந்த பதிவை பற்றிய முழு விவரமும், வீடியோ பதிவும் அதில் அடங்கி உள்ள குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடித்து வருகிறார் அஜித். நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் கூறிய அட்வைஸ் ஒன்று இன்று வைரலாகி வருகிறது.

அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா அஜித் கூறியதாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்…, ‛‛உங்களை காதுகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். காதுகளில் அடிக்கடி சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தால் அது காது கேட்கும் திறனை இழக்கும். காதில் ஒலிக்கும் ஒரு வித ஒலி பெரும்பாலும் காது கேளாமையுடன் தொடர்புடையது. அதீத சத்தம் கேட்பது.. தலையில் காயங்கள் ஏற்படுவது.. காதில் அழுக்கு இருப்பது, மற்றும் மருந்துகளின் பக்க விளைவுகள் ஆகியவை. என சில காரணங்களை குறிப்பிட்டு, ‘உங்கள் காதுகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் – நிபந்தனையற்ற அன்புடன் அஜித்’ என பதிவிட்டுள்ளார். அஜித்தின் இந்த சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

By admin