சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளிய அடித்து பந்தை துளைத்த மேக்ஸ்வெல் !! முழுி பிதுங்கிய விராத் கோலி !!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் மீண்டும் தன் அசாத்தியமான பேட்டிங்கை வெளிப்படுத்தி பெங்களூர் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 159 ரன்கள் எடுத்தது 160 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடத் தொடங்கிய ஆர்சிபி அணி.

ஒரு கட்டத்தில் எளிதில் வென்று விடும் என்று நினைத்த நிலையில் மல மல என சரிந்ததால் மும்பை வெற்றி பெறும் என்ற நிலைமைக்கு போட்டி தள்ளப்பட்டது.ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் வெற்றிக்கு உதவினார் இதில் 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடங்கும்.

12-வது ஓவரை வீசிய ராகுல் சகர் பந்தை ஏறிவந்து சேப்பாக்கம் மைதானத்துக்கு வெளியே அடித்தார் மேக்ஸ்வெல் இதனை பார்த்த கோலி மிரண்டு போய் வாவ் என்று கூறி பந்து மைதானத்துக்கு வெளியே போவதை ரசித்துக் கொண்டிருந்தார் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.