சொந்த காசில் சூனியம் வைத்துக்கொண்ட ரம்யா…? இல்ல இல்ல சொந்த காசில் பேனர் வைத்துக்கொண்டு ரம்யா பாண்டியன்…!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இதன் மூலம் பிரபலமானவர் தான் ரம்யா பாண்டியன் ஏற்கனவே ரம்யா பாண்டியன் ஜோக்கர் ஆண்தேவதை போன்ற திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவருக்கு முதலில் வெளி உலகத்தை அறிமுகப்படுத்தியது அவர் வெளியிட்ட போட்டோஷுட் புகைப்படம் தான் இதைத்தொடர்ந்து ரசிகர்கள் கிளுகிளுப்பாக ரம்யாவை பார்த்து வந்தனர்.

அதன்பிறகு அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானார் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிநாள் வரை இருந்து சிங்கபெண் என்ற அடையாளத்துடன் வெளியேறினார் ரம்யா தற்போது சூர்யா தயாரித்து வரும் படத்திலும் நடிக்க இருக்கிறார் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியின்போது ரம்யா பாண்டியனுக்கு அவருடைய ரசிகர்கள் கட்அவுட் வைத்து மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்தனர்.

இதனையடுத்து அந்த புகைப்படத்தை ரம்யா தனது இணையதளத்தில் வெளியிட்டது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது இந்த புகைப்படத்தை பார்த்த பலர் இந்த சிங்க பெண் ஏன் இப்படி செஞ்சாங்க என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புகின்றனர் சிலர் பணம் இருப்பதால் சொந்த காசில்தான் ரம்யா பாண்டியன் விளம்பரம் செய்து வருவதாக தெரிவித்து வருகின்றனர் எதுவாக இருந்தாலும் இந்த கட்டவுட் விஷயம் தற்போது ரம்யாவின் இமேஜை டேமேஜ் செய்துள்ளதாக தான் தெரியவருகிறது..