சொன்னதை செய்த ரியோ…? பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் செய்த காரியம்….நீங்களே பாருங்க..

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக நடந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது இந்த சீசனில் ரியோ ராஜ் ஆரி, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா, ஷிவானி நாராயணன், சனம் செட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி, வேல்முருகன், அனிதா சம்பத், ஆஜித், சுச்சித்ரா, ரேகா, சோம் சேகர், கேப்ரில்லா,என்று 18 பேர் இந்த சீசனில் கலந்துகொண்டனர் இந்த சீசன் முதலிடத்தை ஆரியம் இரண்டாவது இடத்தை பாலாஜியும் பிடித்தனர்.

கடந்த எல்லாம் சீசன் களை விட இந்த சீசனில் விஜய் டிவி பிரபலங்கள் அதிகமாக பங்கேற்றனர் அதிலும் ஷிவானி ஆஜித் போன்றோர் பொத்தி பொத்தி காப்பாற்றப்பட்டு கிட்டத்தட்ட இறுதிப்போட்டி வரை அழைத்துச் செல்லப்பட்டனர் ரியோ கடைசி வரை நாமினேஷன் இருந்தபோது அவரை காப்பாற்றி இறுதிப் போட்டிக்கு அனுப்ப பல்வேறு விஜய் டிவி பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

பொதுவாக இறுதிப் போட்டியின் போது கமல் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற அனைவருக்கும் ஏதாவது பரிசு வழங்குவது வழக்கம்
அவ்வாறு இந்த வருடம் ஆரி பாலாஜி சோம் ரம்யா ஆகிய அனைவருக்கும் கமல் பரிசு கொடுத்துள்ளார் அதில் ஆரிக்கு பெண் மற்றும் டைரியும் பாலாஜிக்கு டம்பல்ஸ் ரம்யாவிற்கு இயற்கை விதைகளையும் அளித்தார் கமல்.

கமல் ரியோ விற்கு டென்ட கொடுக்க காரணம் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது தான் வெளியில் சென்றதும் அவரது வீட்டுக்குச் சென்று சாப்பிட்டு நன்றாக தூங்கி விட்டு ஒரு வண்டியை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் போய்விடுவேன் என்று கூறியிருந்தார் அதேபோல தற்போது காட்டிற்குள் சென்று டூ அனதர் வேர்ல்ட் என்று ஒரு வீடியோவையும் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அதன் வீடியோ கீழே உள்ளது.