தனுஷ் ஒரு ஊமை குசும்பன்…? பல விஷயங்களை சத்தமே இல்லாம முடித்துவிடுவார்… பிரபல நடிகையின் பேச்சால் எழுந்த சர்ச்சை…

தமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தனுஷ் இவர் தற்போது கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற படத்திலும் மாரி செல்வராஜின் கர்ணன் படத்திலும் தீவிரமாக நடித்து வருகிறார் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான அசுரன் மிகப்பெரிய வெற்றி பெற்றது அதுமட்டுமல்லாமல் நடிப்பில் அவருக்கு பெரிய புகழையும் ஏற்படுத்தி தந்தது.

அதனைத் தொடர்ந்து கர்ணன் திரைப்படம் வெளியாக உள்ளது இதில் கண்டா வர சொல்லுங்க என்னும் பாடல் சமிபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் கலக்கி வருகிறது இந்நிலையில் முன்னணி நடிகர்களை பற்றி பேசிய பிரபல நடிகையின் பேச்சு வைரலாக பரவிவருகிறது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இந்த திரைப்படத்தில் கதாநாயகி நடித்திருந்தார் ரீத்து வர்மா.

ஏற்கனவே கௌதம் மேனனின் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்திருக்கிறார் தமிழில் அதிக படங்கள் இல்லாவிட்டாலும் துருவ நட்சத்திரம் ரிலிஸ்க்கு பிறகு ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு ஹீரோவை ஒரே வார்த்தையில் வர்ணிக்க வேண்டும் என்று லைனாக கேள்விகளைக் கேட்ட பொழுது விக்ரம் என்ற உடன் ஸ்டைல் தளபதி விஜய் என்ற உடன் ஹார்ட் அண்ட் டான்ஸ் என்றும் தனுசை ஊமை குசும்பன் என்றும் வர்ணித்துள்ளார்.