தம்பதியர்கள் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய 4 வார்த்தைகள் !! இந்த வார்த்தைகள் உங்கள் வாழ்க்கையில் பாதிப்பை உண்டாக்கி உள்ளதா ??

கணவன் மனைவிக்குள் ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகளுக்கு நிறைய காரண காரியங்கள் இருக்கும். இருப்பினும் உறுதியாக சொல்லப்படும் சில விஷயங்கள் உள்ளது. கணவனாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும் அனாவசியமான வார்த்தைகளை பேசாமல் இருந்தாலே போதும். அவர்களுடைய வாழ்க்கை பிரச்சினை இல்லாமல் செல்லும். அந்த வரிசையில் அதிகப்படியான காயங்களை உண்டாக்கும் வார்த்தைகள் என்னென்ன? கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சாஸ்திரம் சொல்வதை தெரிந்து கொள்வதற்கு முன்பாக, இன்றைய கால சூழ்நிலையில், படிக்காமல் பாமரர்களாக இருப்பவர்கள் தங்களுடைய மனைவிக்கு கொடுக்கக்கூடிய மரியாதையை கூட, ‘நன்றாக படித்து, நல்ல வேலையில் இருந்து கொண்டு, மனைவியின் அருமை பெருமைகளை எல்லாம், பல நூல்களின் படித்தறிந்த, சில ஆண்கள், தங்களுடைய மனைவியை மதிப்பதே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும்’.

வெளியில் நல்ல அந்தஸ்தில் இருந்து கொண்டு, வீட்டில் உள்ள மனைவிக்குக் கொடுக்க வேண்டிய அந்தஸ்தை கொடுக்காமல் இருப்பவர்களுக்கு, கர்மவினை தொடர்ந்து கொண்டே வரும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவியிடத்திலும், மனைவி கணவன்யிடத்திலும் பேச கூடாத வார்த்தைகள்! தம்பதிகளுக்குள் பிரச்சினை வந்துவிட்டது என்றால் முதலில் அவர்கள் வாயிலிருந்து வரும் வார்த்தை ‘நீ இல்லனா என்னால, வாழ முடியாதுன்னு நினைக்கிறாயா? நீ இல்லை என்றாலும் என்னால் நன்றாக வாழ முடியும்’. கல்யாணம் ஆகிவிட்டது, குழந்தையும் பிறந்து விட்டது அந்த தம்பதிகளின் வாயில் இருந்து வரவே கூடாத முதல் வார்த்தை இதுதான். இன்னும் சில பேர், ஒரு படிக்கு மேல் போய் ‘நீ என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால், இதைவிட நல்ல வாழ்க்கையை நான் வாழ்ந்திருப்பேன்’ என்று சொல்லுவார்கள். இது அதைவிட அபத்தமான வார்த்தையாக சொல்லப்பட்டுள்ளது.

சண்டை வரும் நேரத்தில் இப்படி ஒரு வார்த்தை கணவன் வாயிலிருந்து வந்தாலும் சரி, மனைவி வாயிலிருந்து வந்தாலும் சரி, அதன் மூலம் ஏற்படக்கூடிய வெறுப்பு என்பது எல்லையைத் தாண்டிப் போய்விடும். இதில் மூன்றாவது வகையாக இன்னொரு பேச்சும் நடக்கும். அதாவது, ‘நான் உனக்கு பதிலாக, இன்னாரை கட்டியிருந்தால் ராணி போல் வாழ்ந்திருப்பேன்! கணவனாக இருந்தால், ராஜா போல் வாழ்ந்திருப்பேன்!’ என்று சொல்லுவார்கள். இது தேவையே இல்லாத வார்த்தை. இல்லாத வாழ்க்கையை, கற்பனை படுத்திப் பேசுவதில் எந்த ஒரு பிரயோஜனமும் இருக்கப்போவதில்லை. வெளியில் சம்பளத்திற்காக யார்யாரிடமோ திட்டு வாங்கி சகித்துக் கொள்ளும் ஆண்களால், வீட்டில் இருக்கும் தன்னுடைய மனைவி, ஒரு வார்த்தையை சொல்லி விட்டால், அவர்களால் அதை தாங்க முடியாது. ஆண்கள், பெண்களை அடக்கி ஆள்வதற்கு அவதாரம் எடுத்தவர்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதேபோல்தான் பெண்களும், ஆண்களை கஷ்டப்படுத்துவற்காகவே அவதாரம் எடுத்தவர்கள் என்பதை மறந்துவிட வேண்டும். உங்களுக்குள் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், அதை அன்று இரவே ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடுங்கள். ‘உனக்காகத்தான் நான் வாழ்கின்றேன்’ என்று மனைவி கூறும் ஒரு வார்த்தைக்கு ஈடு இணை இந்த உலகத்தில் வேறு எதுவுமே, கணவனுக்கு இருக்கமுடியாது. கணவன், மனைவியைப் பார்த்து ‘உன்னுடன் வாழும் வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது’ என்று சொல்லக்கூடிய ஒரு வார்த்தைக்கு ஈடு இணை வேறு எதுவுமே கிடையாது. இந்த இரண்டு வார்த்தைகளை அடிக்கடி சொல்பவர்கள், வாழ்க்கையை சுலபமாக ஜெய்து விடுகிறார்கள்! ஒருவரை, ஒருவர் விட்டுக்கொடுத்து பேசக்கூடிய, அன்பான வார்த்தைகளில் கிடைக்கக்கூடிய நிம்மதியான வாழ்க்கையை, அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும், எவ்வளவு இன்பம் என்பது! ஒரு நல்ல குடும்பம் உருவாவதே நல்ல கணவன் மனைவி கையில் தான் உள்ளது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு வேறு எதுவுமே வேணாங்க! கணவன் மனைவிக்கு கொடுக்கும் நம்பிக்கையும், மனைவி ‘நான் இருக்கின்றேன்’ என்று கனவுக்கு கொடுக்கின்ற நம்பிக்கை ஒன்று மட்டுமே போதும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்!