தளபதி விஜய் உடன் கதாநாயகியாக இணைந்த பிக்பாஸ் நடிகை… இப்போது என்ன செய்கிறார் தெரியுமா…?

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமாண வனிதா பல ஆண்டுகளுக்குப் பின்னர் கதாநாயகியாக நடிக்க இருக்கும் படம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா இவர் தமிழ் சினிமாவில் சந்திரலேகா எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் சந்திரலேகா படத்தின் கதாநாயகன் தளபதி விஜய் என்பது அனைவரும் அறிந்ததே முதல் படத்திலேயே விஜயுடன் நடித்தாலும் அதன்பின்பு வாய்ப்பு மிகவும் குறைவாகத்தான் இருந்தது.

அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட மன கசப்பால் பிரிந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதன்பின்னர் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டு பின்னர் அவரையும் பிரிந்தார்.

திருமணத்திற்கு பின் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அனைவரிடம் அறியப்பட்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார் இந்த நிலையில் வனிதா மீண்டும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம் பாபி சிம்ஹா கீர்த்தி சுரேஷ் நடித்த பாம்பு சட்டை என்கிற படத்தை இயக்கிய ஆடம் தாசன் இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

இவர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் இப்படத்தில் நடிப்பதற்காக வனிதா உடல் எடையை குறைத்திருக்கிறார் வனிதா மீண்டும் கதாநாயகியாக நடிப்பதற்கு சந்திரலேகா படத்தின் இயக்குனர் நம்பிராஜன் நேரில் சந்தித்து வனிதாவை வாழ்த்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.