தவற விடாதீர்கள் !! இன்று மாலை விநாயகருக்கு இதை மட்டும் செய்தால் நினைத்தது அப்படியே நடக்கும் !! சங்கடங்கள் மாயமாய் மறைந்துவிடும் !!

உங்கள் சங்கடங்கள் தீர்க்க சங்கடஹர சதுர்த்தி அன்று விக்ன விநாயகரை வழிபடுவது மிக சிறந்த பலனை தரும். சங்கடஹர சதுர்த்தி வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்பவர்களுக்கு எல்லா சங்கடங்களும் தீரும் என்பது ஐதீகம். இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். சங்கட சதுர்த்தி அன்று பெரும்பாலும் பக்தர்களுக்கு ஏற்படும் குழப்பம், காலையில் வழிபாடு செய்ய வேண்டுமா? மாலையில் வழிபாடுகள் செய்ய வேண்டுமா? என்பதாக இருக்கும். இன்றைய நாளில் சங்கடஹர சதுர்த்தியில் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள். சந்திர பகவான் அடக்கம் இல்லாமல் விநாயகரை கேலி செய்ததால் சாபத்திற்கு உள்ளானார். அதிலிருந்து சாப விமோசனம் பெற சதுர்த்தி நாளில் விநாயகரை வணங்கினார் என்பது புராணம்.

எனவே மாலையும், இரவும் சேரும் நேரத்தில் அதாவது சந்திரன் பூமியில் தெரியும் நேரத்தில் சதுர்த்தி வழிபாடு செய்வது முறையாகும். இந்த நேரத்தில் அனைத்து விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கும், விரதம் இருப்பவர்களுக்கும் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.சங்கடஹர சதுர்த்தி விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் பூஜை முடியும் வரை எந்த திட பொருட்களையும் சாப்பிடாமல் விரதம் மேற்கொள்ள வேண்டும். பசி தாங்க முடியாதவர்கள் திரவப் பொருட்களை உணவாகக் கொள்ளலாம். மாலை நேரத்தில் கோவிலுக்கு சென்று பூஜையில் கலந்து கொள்ளலாம். அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.

கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே கொண்டாடலாம். காலை முதல் உபவாசம் இருப்பவர்கள் மாலை வேளையில் விநாயகருக்கு மல்லிகை மலர் மாலையாக சாற்றி, அருகம்புல் மற்றும் எருக்கம்பூ வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், புளியோதரை, தயிர் சாதம், மோதகம், சுண்டல் போன்றவற்றை வைத்து தூப, தீப ஆராதனை காட்ட வேண்டும். பின்னர் கற்பூர ஆரத்தி எடுத்து கீழ்வரும் சங்கடஹர சதுர்த்தியில் உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். சதுர்த்தி விரதம் முடித்த பிறகு தான் அடுத்து வரும் கார்த்திகை, பவுர்ணமி போன்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டும். இன்றைய நாள் முழுவதும் தொடர்ந்து விநாயகர் அகவல் படிக்க வேண்டும்.

சங்கடஹர சதுர்த்தியில் உச்சரிக்க வேண்டிய மந்திரம்: மூஷிக வாகன மோதக ஹஸ்த! சாமர கர்ண விளம்பித சூத்ர! வாமன ரூப மஹேஸ்வர புத்ர! விக்ன விநாயக பாத நமஸ்தே!!! விநாயகருக்கு உகந்த வன்னி மர இலைகளை கொண்டு அர்ச்சனை செய்தால் கூடுதல் பலன்களைப் பெறலாம். அது போல அரச இலையால் தோரணம் கட்டலாம். பூஜைகளை முடித்த பின்னர் நைவேத்தியமாக வைத்த பொருட்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். இன்றைய நாளில் உங்களால் முடிந்த அளவு, முடிந்தவர்களுக்கு வீட்டில் சாப்பாடு போட்டு அனுப்பினால் உங்களுக்கு வாழ்வில் எந்த கஷ்டமும் வராது. கோவில்களில் அன்னதானம் செய்தால் அதைவிட சிறப்பாக சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். எனவே இந்த நாளை தவறவிடாமல் மிகவும் எளிய இந்த விரதம் மேற்கொள்பவர்கள் தொடர்ந்து 11 வாரங்கள் என்று கடைபிடித்து வந்தால் உங்களுக்கு வரும் எல்லா தடைகளும் அகலும் என்பதைக் கூறி இந்த பதிவை முடித்துக் கொள்வோம்.