தினமும் மகாலட்சுமியை வீட்டிற்குள் அழைக்க,வீட்டு வாசல் கதவை பெண்கள் இப்படித்தான் திறக்க வேண்டும் !! வாசல் கதவைத் திறக்கும் போது பெண்கள் கையில் இந்த 1 பொருள் மட்டும் கண்டிப்பாக இருக்க கூடாது !!

பொதுவாகவே நம்முடைய வீட்டிற்குள், காலை நேரத்தில் மகாலட்சுமியாகப்பட்டவள், வீட்டிற்குள் நுழைவாள் என்பது தான் ஐதீகம். வீட்டு வாசலில் இருக்கும் மகாலட்சுமியை முறைப்படி எப்படி வீட்டிற்குள் அழைக்க வேண்டும் என்பதைப் பற்றியும், பெண்கள் நில வாசல் கதவை திறக்கும் போது இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் கையில் வைத்துக் கொண்டு கட்டாயம் திறக்கவே கூடாது, அது எந்தெந்த பொருட்கள் என்பதைப் பற்றியும், நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலைத்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் கண்விழித்ததும் உங்கள் வீட்டில் கொல்லைப்புறம் இருந்தால், கொல்லைப்புற கதவை திறந்து விட்டு, அதன்பின்பு முன் வாசல் கதவை திறக்க வேண்டும். இது நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி பின் வாசல் கதவு இல்லை என்றால், வீட்டில் இருக்கும் ஜன்னல்களை திறந்து விட்டு விடுங்கள். இரவு நேரத்தில் ஸ்க்ரீன் போட்டு ஜன்னல்களை மூடி இருந்தாலும் அதையெல்லாம் விடிந்தவுடன் விலக்கிவிட வேண்டும்.

அதன் பின்பாக பாத்ரூமுக்குள் சென்று, பல்தேய்த்து முகம் அலம்பி தலையை திருத்திக் கொண்டு தான், பெண்கள் நில வாசப்படி கதவை திறக்க வரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நெற்றியில் கட்டாயம் பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும். காலையில் குளித்த பின்பு தான், பெண்கள் வாசல் கதவை திறக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. முடிந்தால் குளித்து விட்டு நில வாசல் கதவை திறக்கலாம். சில பேர் வீட்டில் வாசல் கூட்டும் துடைப்பம், வாசல் தெளிக்கும் பக்கெட், இவைகள் எல்லாம் வீட்டின் வெளிப்புறத்தில் வைத்திருப்பார்கள். சிலபேர் வீட்டிற்குள் இருந்து தான் தினம்தோறும் காலையில் வெளியில் எடுத்து வந்து, வாசலை சுத்தம் செய்துவிட்டு, அதன் பின்பு உள்ளே எடுத்துக்கொண்டுபோய் வைப்பார்கள். இந்த சூழ்நிலையில் காலையில் நில வாசல் கதவைத் திறக்கும் போதே, கையில் துடைப்பம் பக்கெட் போன்ற பொருட்களைக் கையில் வைத்துக்கொண்டு கதவைத் திறக்கவே கூடாது.

அதுமட்டுமல்லாமல் சில பெண்கள் நில வாசல்படியை பிறக்கும்போதே கையில் குப்பை கூடையோடு வெளியில் வருவார்கள். இது மிகப் பெரிய தவறு. நில வாசல் கதவை திறந்து விட்டு, அதன் பின்பாக இப்படிப்பட்ட வேலைகளை எல்லாம் தொடங்குங்கள். நில வாசல் கதவை திறக்கும்போது துடைப்பம் பக்கெட் ஜக் குப்பைக்கூடை இப்படிப்பட்ட பொருட்கள் உங்கள் கையில் கட்டாயம் இருக்கக் கூடாது. நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வாசல் கதவை திறக்கும்போது மகாலட்சுமி கட்டாயம் உங்கள் வீட்டிற்குள் நுழைய பார்ப்பாள். அப்போது உங்கள் கையில் இந்த பொருட்களெல்லாம் இருந்தால்! முதலில் உங்களது இரு கைகளால் நில வாசற்படியை பயபக்தியோடு, வெளியில் காத்திருக்கும் மகாலட்சுமியை உள்ளே அழைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, ‘ஓம் வர லட்சுமியே நமஹா’ என்ற மந்திரத்தை 11 முறை மனதார உச்சரித்துக்கொண்டே உங்களது வாசல் கதவை திறந்து பாருங்கள்.

https://1.bp.blogspot.com/-ciEibUGm3Zo/YNoYXZSNlpI/AAAAAAAAIDg/MrGyunTDVdMwjRLpQ5NYC5m-H76RsauZgCNcBGAsYHQ/s650/269.jpg

அன்றைய நாள் முழுவதும் உங்களுக்கு ஏற்படக்கூடிய நேர்மறை ஆற்றலை! இது ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது போல இருக்கும். வாசல் கதவை திறந்து விட்டு, அதன் பின்பு சுத்தம் செய்ய தேவையான பொருட்களை நீங்கள் எடுத்து வந்து கொள்ளலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. கட்டாயம் தினம்தோறும், பெண்கள் தான் நில வாசல் கதவை திறப்பது சிறந்தது. உங்களுடைய வீட்டில் வாசலைக் கூட்டி சுத்தம் செய்ய பணியாட்கள் இருந்தாலும்கூட, வீட்டு தலைவியின் கையால் கோலம் போடுவது உத்தமம். வீடு என்றால் அதில் முன்னுரிமை, வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிக்கே, அந்த வரிசையில் உங்களுடைய வீட்டில் நீங்கள் துவங்கி வைக்க கூடிய முதல் மங்கள கரமான காரியம் கோலம் போடுவது. மங்கள காரியம் என்பதை விட, இதை புண்ணிய காரியம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஈ, எலும்புகளுக்கு உங்கள் கையால் காலையில் முதல் தொடக்கத்திலேயே சாப்பாடு வைக்கிறீர்கள் அல்லவா? முடிந்தவரை அதை உங்கள் கையால் செய்யுங்கள். பணியாட்களை தவிர்த்துவிட்டு, குடும்பத் தலைவிகள் கோலம் போடுவது சிறந்தது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.