திருமணம் ஆனால் மட்டும்தான் நெற்றியில் குங்குமம் வைக்க வேண்டுமா…. ரசிகர் கேள்விக்கு சனம் ஷெட்டி பதில் …

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக நடந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஜனவரி 17-ஆம் தேதி கோலாகலமாக நிறைவடைந்தது இந்த சீசனில் ரியோ ராஜ் ஆரி, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா, அர்ச்சனா, ஷிவானி நாராயணன், சனம் செட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி, வேல்முருகன், அனிதா சம்பத், ஆஜித், சுச்சித்ரா, ரேகா, சோம் சேகர், கேப்ரில்லா,என்று 18 பேர் இந்த சீசனில் கலந்துகொண்டனர் இந்த சீசன் முதலிடத்தை ஆரியம் இரண்டாவது இடத்தை பாலாஜியும் பிடித்தனர்

இந்த சீசனில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர்களில் சனம் ஷெட்டியும் ஒருவர் அதே போல மற்ற போட்டியாளர்களை வெளியேற்றத்தை காட்டிலும் சனம் வெளியேற்றம் தான் ரசிகர்களுக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதற்கு முக்கிய காரணம் நிஷா ஷிவானி ஆஜித் போன்ற போட்டியாளர்கள் எந்த விதத்திலும் சிறந்த போட்டியாளர்களாக இல்லை அவர்களை காட்டிலும் சனமே சிறந்தவராக இருந்திருக்கிறார்.

சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்ட பின்னர் சிகரெட் ரூமில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அதுவும் பொய்யாகவே போனது பிரபலங்கள் கூட பல பேர் சனம் ஷெட்டிக்கு ஆதரவாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வந்தனர் அதேபோல சனம் ஷெட்டி Wild card போட்டியாளராக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது சனம் ஷெட்டி பிக் பாஸ் வீட்டினுள்ளே புடவை கட்டும் பொழுதெல்லாம் நெற்றியின் நடுவே குங்குமம் வைப்பது வழக்கம்.

இதைப் பார்த்த பலரும் சனம் ஷெட்டிக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள் சனம் ஷெட்டிக்கு முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருக்குமான தர்ஷனுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் திருமணம் நின்று போனது அறிந்த ஒன்றே இப்படியிருக்க நெற்றியில் குங்குமம் வைப்பது குறித்து கூறியுள்ள சனம் எனக்கு திருமணம் நடைபெறவில்லை உங்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் ஒருநாளில் நடக்கும் நெற்றியில் குங்குமம் வைப்பது என்னுடைய குடும்பத்தில் தவறு ஒன்றும் கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.