திருமண தடையாகி கொண்டே இருக்கிறதா இந்த 2 தீபம் போதும் !! திருமணம் ஆகாத ஆண் அல்லது பெண்ணின் பெற்றோர்களும் இந்த நிவர்த்தியை செய்யலாம் !!

நிறைய காசு பணம் உள்ளவர்களுக்கு, நல்ல இல்லற வாழ்க்கை அமைவது மிகவும் கஷ்டமாக இருக்கும். வாழ்க்கையில் நல்ல வேலை கிடைத்து, நல்ல சம்பாத்தியத்தில், சொத்து சுகத்தோடு செட்டிலாகி இருப்பார்கள். ஆனால், கல்யாணம் என்ற ஒரு வரம் அவர்களுடைய வாழ்க்கையில் இல்லாமல், கஷ்டத்தைக் கொடுக்கும். நம்முடைய குடும்பத்திற்கு அடுத்ததாக வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்று கஷ்டப்பட்டு கொண்டிருப்பக்கு ஒரு சுலபமான வழிபாட்டு முறையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த பரிகாரத்தை திருமணம் ஆகாத அந்த குறிப்பிட்ட நபர் தான் செய்யவேண்டும் என்ற எந்த அவசியமும் கூட கிடையாது.

திருமணமாகாத அந்த ஆணின் பெற்றோரோ அல்லது அந்த பெண்ணின் பெற்றோரோ கூட உங்களுடைய வீட்டிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். முடிந்தால் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் அந்தக் குறிப்பிட்ட நபரை இந்த தீபத்தை ஏற்றுவது இன்னும் விரைவான பலனைக் கொடுக்கும். இந்த பரிகாரத்திற்காக இரண்டு மண் அகல் தீபங்களை புதியதாக வாங்கிக் கொள்ளுங்கள். அதை தண்ணீரில் ஊறவைத்து நன்றாக வெயிலில் உலர வைத்து, அதன் பின்பு மஞ்சள் குங்குமம் வைத்து அந்த விளக்கை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். காலை 5 மணியிலிருந்து 6 மணிக்குள் இந்த தீபத்தை ஏற்றி விட வேண்டும். ஒரு தாம்பாளத் தட்டில் மேல், இந்த இரண்டு அகல் தீபங்களை வைத்துவிட்டு நல்லெண்ணெய் ஊற்றி குறிப்பாக ‘சிவப்பு திரியைப்’ போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். முருகப் பெருமானையும் மகாலட்சுமியையும் வேண்டி, இந்த தீபத்தை ஏற்றி, அரளிப்பூ கிடைத்தால், இந்த தீபத்தின் பக்கத்தில் வைத்து, இறைவனிடம் வேண்டிக் கொண்டால், நிச்சயம் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். உங்களுடைய வீட்டிலும் கட்டாயம் கெட்டிமேளம் சத்தம் கேட்கும். அரளிப்பூ கிடைக்கவில்லை என்றாலும், வாசம் உள்ள வேறு ஏதாவது ஒரு பூவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.எந்த ஒரு வேண்டுதலாக இருந்தாலும் தொடர்ந்து 48 நாட்கள் இறைவனிடம் தொடர்ந்து வைத்தால் அதற்கான நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்வார்கள். உங்களுடைய வீட்டிலும் 48 நாட்கள் இந்த தீபத்தை ஏற்றி பாருங்கள். உங்களுடைய முயற்சியையும் கைவிடக் கூடாது.

தொடர்ந்து வரன்களை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். 48 நாட்களுக்கும் இதே அகல் தீபத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தினமும் அகல் விளக்குகளை, நன்றாக துடைத்து விட்டு, புதிதாக மஞ்சள் குங்குமம் வைத்து தீபம் ஏற்ற வேண்டும். இதோடு விட்டுவிடாமல் வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளில், முருகப் பெருமான் கோவிலுக்கு சென்று, முருகனுக்கு 6 தீபம் ஏற்றி வரவேண்டும். திருமணம் நிச்சயமாகி கல்யாணம் முடியும் வரை, முருகப்பெருமானுடைய வழிபாட்டை நிறுத்தவே கூடாது. உங்களுடைய பிள்ளைக்கு திருமணம் நடக்கவேண்டும். உங்களுடைய வீட்டிற்கும் வாரிசு கிடைக்க வேண்டுமென்றால் நம்பிக்கையோடு இந்த இரண்டு பரிகாரத்தையும் செய்து வாருங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதலை அந்த முருகப் பெருமான் நிறைவேற்றி வைப்பார் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.