தீபம் ஏற்றும் போது, நாம் அறியாமல் கூட இந்த சின்ன தவறை செய்யக்கூடாது !! நம்முடைய வீட்டில் கஷ்டம் வருவதற்கு இதுவும் ஒரு காரணம் !!

பெண்கள் பூஜை அறையை எந்த அளவிற்கு சுத்தமாக வைத்து கொள்கிறார்களோ, அந்த அளவிற்கு அவர்களுடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. குறிப்பாக நாம் தீபம் ஏற்றும்போது, நாம் செய்யக் கூடிய சின்ன சின்ன தவறுகளின் மூலம் கூட, நம் வீட்டில் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும். இந்த சின்ன சின்ன தவறுகளை திருத்திக் கொண்டு தான் பாருங்களேன்! உங்களுக்கு வாழ்க்கையில் நிச்சயம் விடிவுகாலம் பிறக்கும் என்பதற்காக சொல்லப்பட்டுள்ள குறிப்புகள் தான் இவை. இந்த குறிப்புகள் ஒவ்வொன்றுமே உங்களுக்கு நன்மை தரக்கூடியவைத் தான் என்பதில் எந்த சந்தேகமே கிடையாது. இந்த குறிப்புகளோடு சேர்த்து, இந்த பதிவின் இறுதியில் உங்களுக்கு செல்வத்தை அள்ளித்தரும் ஒரு டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

அதையும் தவறாமல் தெரிந்துகொண்டு பலனடையலாம். முதலில் சுவாமி படங்களில் வாடியோ பூக்களை வைத்து விட்டு, வீட்டில் தீபம் ஏற்றவே கூடாது. இப்போதெல்லாம் தீ குச்சிகளால் தீபம் ஏற்றக் கூடாது என்று, துணை விளக்கைக் கொண்டு தீபம் ஏற்றும் பழக்கத்தை வைத்துள்ளார்கள். எக்காரணத்தைக் கொண்டும் அந்த துணை விளக்கைக் கூட தரையில் வைத்து தீபம் ஏற்றாதீர்கள். ஒரு தட்டின் மீது வைத்து தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. துணை விளக்காக இருந்தாலும் கூட, அந்த தீபத்தை தரையில் வைக்கக்கூடாது. அடுத்தபடியாக நீங்கள் ஏற்றக்கூடிய தீபமானது பந்தம் போல பெரியதாக எரிய கூடாது. எப்போது அணைந்து விடுமோ என்ற அளவிற்கு, தீயை ரொம்ப சிறியதாகவும், தீபச்சுடர் ஒளியை எரிய விட கூடாது. குறிப்பிட்டு சொல்லப்போனால், ஒரு மல்லிகை மொட்டு எந்த அளவில் உள்ளதோ, அந்த அளவில் தீபச்சுடர் ஒளிர வேண்டும்.

அடுத்ததாக குறிப்பாக, நம்முடைய வீட்டில் காமாட்சியம்மன் தீபமாக இருந்தாலும், குத்துவிளக்காக இருந்தாலும், மண் அகல் தீபம் ஆகவே இருந்தாலும், அதில் ஊற்றக்கூடிய எண்ணெய் நிரம்பித்தான் இருக்க வேண்டுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் விளக்கில் இருந்து கீழே வழிய விடவே கூடாது. இது குடும்பத்திற்கு சுத்தமாக ஆகாது. குறிப்பாக ஆண்கள் தீபம் ஏற்றினால் இப்படித்தான் எண்ணெயை வழிய விட்டு விடுவார்கள். எக்காரணத்தைக் கொண்டும் உங்களுடைய வீட்டில் விளக்கில் இருந்து எண்ணெய் கீழே வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதோடு சேர்த்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரப்போகும் ஒரு குறிப்பையும் தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டு வாசலில் மாலை இலை வைத்தால் மிகவும் நல்லது என்று சொல்லுவார்கள். எல்லோராலும் அடிக்கடி மாலையைக் கொண்டு வந்து உங்களுடைய வீட்டு வாசலில் கட்ட முடியவில்லை என்றால், பூத்துக் குலுங்கும் மாமரத்தினுடைய, படத்தை நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் மாட்டி வைத்துக் கொள்ளுங்கள். பூத்துக்குலுங்கும் மாமரத்தின் போட்டோ கூட, உங்களுக்கு செல்வ வளத்தை அதிகமாக ஈர்த்துக் கொடுக்கும். உங்களுடைய வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, இதோடு சேர்த்து நீங்கள், பூத்துக் குலுங்கும் மா மரத்தின் படத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டே இருந்தால், உங்களுக்கு வரக்கூடிய கெடுதல்கள் கூட நிச்சயம் நல்லதாக மாறும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தை உங்களுடைய வீட்டில், மாட்டிய சில தினத்திலேயே, பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும். முயற்சி செய்து தான் பாருங்களேன், நம்பிக்கையோடு!